பௌர்ணமி கிரிவலம்.. திருவண்ணாமலை செல்லும் பக்தர்களுக்கு சிறப்பு ரயில்! தெற்கு ரயில்வே அறிவிப்பு
சென்னை: நாளை பௌர்ணமி என்பதால் திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையை சுற்றி கிரிவலம் செல்ல பக்தர்கள் தயாராகி வருகின்றனர். இந்நிலையில், பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்திருக்கிறது.
வேளாங்கண்ணி திருவிழா, நாகூர் சந்தனக்கூடு திருவிழா, என ஒவ்வொரு வரலாற்று சிறப்புமிக்க விழாக்களுக்கும் தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. அந்த வகையில் தற்போது திருவண்ணாமலை கிரிவலத்துக்கும் சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

புகழ்பெற்ற திருவண்ணாமலை கோயிலுக்கு கிரிவலத்தை ஒட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். ஆனால், திருவண்ணாமலைக்கு என பிரதான ரயில்கள் பெரியதாக கிடையாது. சென்னையிலிருந்து பேருந்து மூலமாக போகலாம். தினசரி சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து வேலூர் வழியாக ரயில் இயக்கப்படுகிறது. இது மாலை 6 மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்ட இரவு 11.40க்கு திருவண்ணாமலையை அடையும்.
ஆனால் இதில் பயணத்திதால் கிரிவலம் மேற்கொள்ள முடியாது. கிரிவலம் மேற்கொள்வதற்கு என உகந்த நேரம் இருக்கிறது. 14 கி.மீ கிரிவலத்தை இன்று மாலை முதல் தொடங்க வேண்டும். இன்று (ஜன.02) மாலை 6.11 தொடங்கி நாளை (ஜன.03) மாலை 4.07 மணி வரை பௌர்ணமி நீடிக்கும். இந்த நேரத்தில் எப்போது வேண்டுமானலும் கிரிவலம் தொடங்கலாம். ஆனால், பின்னிரவில் கிரிவலம் தொடங்குவது சோர்வை ஏற்படுத்தும்.
இப்படி இருக்கையில்தான் பயணிகளின் வசதிக்காக நாளை (ஜன.3) காலை 10.10 மணிக்கு விழுப்புரத்திலிருந்து புறப்பட்டு பிற்பகல் 11.45க்கு திருவண்ணாமலைக்கு சென்று சேரும் வகையில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. தென் மாவட்டத்திலிருந்து கிரிவலம் வர விரும்பும் பக்தர்கள், விழுப்புரம் வந்து அங்கிருந்து திருவண்ணாமலைக்கு வரலாம். அதேபோல கிரிவலம் முடித்து பக்தர்கள் நெரிசல் இன்றி வீடு திரும்ப, திருவண்ணாமலையிலிருந்து மதியம் 12.40 சிறப்பு ரயில் விழுப்புரத்திற்கு இயக்கப்படுகிறது. இந்த ரயில் பிற்பகல் 2.15க்கு விழுப்புரத்திற்கு வந்தடையும்.
எனவே பக்தர்கள் பதற்றம் இல்லாமல், கிரிவலத்தை முடித்துக்கொண்ட நிதானமாக திரும்பலாம். ரயில்களை போலவே, சென்னை, வேலூர், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும் சிறப்பு பேருந்தும் வழக்கமாக இயக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications