பாம்பன் ரயில்வே பாலம் தரமற்ற வகையில் கட்டப்பட்டதா? தெற்கு ரயில்வே பரபர விளக்கம்!
சென்னை: பாம்பன் பாலம் கட்டுமானம் தொடர்பாக தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. புதிய ரயில் பாலத்தை ஆய்வு செய்து சென்னை மற்றும் மும்பை ஐ.ஐ.டி.களின் நிபுணர்கள் தர மதிப்பீடு வழங்கியுள்ளனர். பாலிசிலோக்சேன் பெயிண்ட் பயன்படுத்தியதால் 35 வருடங்களுக்கு உப்பு அரிப்பு பிரச்சனை இருக்காது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள பாம்பன் பாலம், இந்தியாவின் முதல் செங்குத்து லிப்ட் பாலம் என்ற பெருமை கொண்டது. பாம்பன் ரயில் பாலம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் புதிய பாம்பன் ரயில் பாலம் கட்டுவதற்கு ரூபாய் 550 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. கட்டுமான பணிகள் 2020ல் தொடங்கிய நிலையில் சமீபத்தில் முழுவதுமாக முடிவடைந்து கடந்த அக்டோபர் முதல் சோதனை ஓட்டம் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் பாம்பன் பாலத்தின் தரம் குறித்து ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சவுத்ரி வெளியிட்ட ஆய்வறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த அறிக்கையின்படி, புதிதாக கட்டப்பட்ட பாம்பன் ரயில் பாலத்தில் கடல்நீர் அரிப்பு பிரச்சனையை தீர்க்க முறையான நடவடிக்கை இல்லை. தூண்களில் தற்போதே அரிப்பு தொடங்கியுள்ளது, சோதனை ஓட்டத்தில் தண்டவாளத்தில் அதிக ஒலி உள்ளிட்ட பல பிரச்சனைகள் உள்ளன. புதிய பாலத்தில் குறைகளை மறு ஆய்வு செய்து சரி செய்ய வேண்டும் என பரிந்துரைத்துள்ளார்.
புதிய பாம்பன் பாலம் தரமானதாக கட்டப்படவில்லை என பாதுகாப்பு ஆணையர் அறிக்கை அளித்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட சர்ச்சை தொடர்பாக விசாரணை நடத்த 5 பேர் கொண்ட தொழில்நுட்பக் குழுவை ரயில்வே வாரியம் அமைத்துள்ளது. ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் பரிந்துரை மற்றும் கருத்து தொடர்பாக இந்தக் குழு விசாரணை மேற்கொள்ள உள்ளது.
இந்நிலையில், பாம்பன் பாலம் கட்டுமானம் தொடர்பாக தெற்கு ரயில்வே தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதிநவீன வடிவமைப்பு மற்றும் சிறந்த கட்டுமான நடைமுறைகளுடன் பாலம் கட்டப்பட்டுள்ளது என்றும் புகழ்பெற்ற சர்வதேச ஆலோசகரின் முறையான ஆய்வின் அடிப்படையில் பாம்பன் பாலம் கட்டப்பட்டு வருவதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாம்பன் புதிய ரயில் பாலத்தை சென்னை, மும்பை ஐஐடி நிபுணர்கள் ஆய்வு செய்து தரமதிப்பீடு வழங்கினர். பாம்பன் ரயில் பாலம் தரமான வடிவமைப்போடு கட்டப்பட்டுள்ளதாக ஐஐடி நிபுணர்கள் தெரிவித்தனர். பாலத்தின் இணைப்பு வெல்டிங் தர சோதனை 100 சதவீதம் சரிபாக்கப்பட்டுள்ளது.
பாலிசிலோக்சோன் பெயிண்ட் பயன்படுத்தியதால் 35 ஆண்டுகளுக்கு உப்பு அரிப்பு பிரச்சனை இருக்காது. பாதுகாப்பு ஆணையர் அதிருப்தி தெரிவித்த சில காரணிகளுக்கு தீர்வு காணப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications