Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பழைய ஓய்வூதியத் திட்டம்.. 8-வது ஊதிய கமிஷன்.. அதிரடியாக களம் இறங்கிய தென்னக ரயில்வே ஊழியர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பழைய ஓய்வூதியத் திட்டம் என்பது மத்திய மாநில அரசு ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.இந்நிலையில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; 8-வது ஊதிய கமிஷனை உருவாக்க வேண்டும்; புதிய பணியிடங்கள் உருவாக்குவதை உறுதி செய்ய வேண்டும்; ரயில்வேயில் நேரடி பதவிகளை சரண்டர் செய்வதை நிறுத்த வேண்டும்; ரயில்வே பணிகளில் தனியார் ஈடுபடுத்துவதை தடுக்க வேண்டும் என்பது உள்பட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தென்னக ரயில்வே ஊழியர்கள் சங்கம் இன்று போராட்டத்தில் ஈடுபட்டது.

பழைய ஓய்வூதியத் திட்டம் கடந்த 2003ம் ஆண்டுடன் முடிவுக்கு வந்துவிட்டது. அதன்பிறகு இன்று வரை பழைய ஓய்வூதியம் அமலுக்கு வரவில்லை. இதற்காக மத்திய மாநில அரசு ஊழியர்கள் பல ஆண்டுகளாக போராடி வருகிறார்கள். ஆனால் அரசு இதற்கு செவி சாய்க்கவில்லை. தமிழக அரசை பொறுத்தவரை குழு அமைத்து முடிவெடுப்பதாக கூறியது.ஆனால் 4 ஆண்டுகளாகியும் இதுபற்றி அறிவிப்புகள் வெளியிடவில்லை.. இதனால் அரசு ஊழியர்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள். இதனிடையே மத்திய அரசு ஊழியர்களும் அவ்வப்போது பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி போராடி வருகிறார்கள்.

Southern Railway employees take new decision for old pension scheme and 8th Pay Commission

அந்த வகையில் தென்னக ரயில்வே ஊழியர்கள் சங்கம் சார்பில், சென்னை எழும்பூரில் உள்ள இருப்புப் பாதை பராமரிப்புப் பணிகள் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது. இந்த ஆர்ப்பாட்டம் எதற்கு என்றால், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; 8-வது ஊதிய கமிஷனை உருவாக்க வேண்டும் புதிய பணியிடங்கள் உருவாக்குவதை உறுதி செய்ய வேண்டும்; ரயில்வேயில் நேரடி பதவிகளை சரண்டர் செய்வதை நிறுத்தவேண்டும்; ரயில்வே பணிகளில் தனியார் ஈடுபடுத்துவதை தடுக்க வேண்டும் என்பது உட்பட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது..

தென்னக ரயில்வே தொழிலாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் வி.கோபாலகிருஷ்ணன் தலைமையில் இந்த போராட்டம் நடந்தது.இந்த போராட்டம் குறித்து அவர் பேசுகையில், " ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்பதுதான் எங்களுடைய முக்கியமான கோரிக்கை.. மேலும் வெளிமாநிலத்தில் இருந்து வந்து தென்னக ரயில்வேயில் பணியாற்றும் ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை அவர்கள் மாநிலத்தில் பணியமர்த்த பலமுறை கடிதம் மூலமாக, மாற்ற கோரி வலியுறுத்தினோம். ஆனால் மாற்றாமல் உள்ளதால் அவர்கள் கடும் துயரத்துக்கு ஆளாகின்றனர். இதற்கு தீர்வு காண வேண்டும்.

தற்போது வரை, மத்திய அரசு 8-வது ஊதிய உயர்வு இன்னும் வழங்கவில்லை. ரயில்வே ஊழியர்களுக்கு இனி அடிப்படை சம்பளமாக ரூ.51,000 வழங்க வேண்டும். ரயில்வேயின் முதுகெலும்பாக திகழும் தண்டவாளப் பணியாளர்களை ரயில்வே கேட், தண்டவாள பராமரிப்புப் பணியில் ஈடுபடுத்த வேண்டும். ஆனால், அவர்கள் அலுவலகப் பணியை மேற்கொள்கிறார்கள். மேலும், ஒரு சில ஊழியர்கள் ரயில்வே அதிகாரிகள் இல்லத்தில் பணியாற்றுகிறார்கள. வேறு எங்கோ வேலை செய்துவிட்டு, சம்பளத்தை இங்கே வாங்கும் நிலை இருக்கிறது. இவர்களால் ரயில்வே துறைக்கு நஷ்டம் ஏற்படுகிறது.

எழும்பூரில் மட்டும் 14 பேர், தண்டவாள பராமரிப்புப் பணி ஈடுபடவில்லை.. அதன் காரணமாக, மற்றவர்களுக்கு பணி சுமை அதிகரித்துள்ளது. இதற்கு சென்னை ரயில்வே கோட்ட உயரதிகாரிகள் உடனே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ரயில்வே தண்டவாளப் பராமரிப்பு பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு முறையான ஊதிய உயர்வு, பதவி உயர்வு வழங்க வேண்டும்" என்று அவர் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+