சென்னை கடற்கரையிலிருந்து புறப்பட்டு செல்லும் பல மின்சார ரயில்கள் ரத்து.. முழு விவரம்
சென்னை: சென்னை கடற்கரை பணிமனையில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் இன்றும் வரும் செப்டம்பர் 20ம் தேதியும் சில இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை கடற்கரையில் இருந்து இரவு நேரத்தில் அரக்கோணம் செல்லும் ரயில்கள், தாம்பரம் செல்லும் ரயில்கள், கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள மின்சார ரயில் வழித்தடங்களில் பராமரிப்பு பணிகளை அதிக அளவில் மேற்கொண்டு வருவதால், அவ்வப்போது மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. ஞாயிறுகளில் பகலில் தாம்பரம் வழித்தடத்தில் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. அதேபோல் தாம்பரம், கும்மிடிப்பூண்டி , அரக்கோணம் வழித்தட மின்சார ரயில்களும் பராமரிப்பு பணிகள் காரணமாக ரத்து செய்யப்படுகின்றன.

அந்த வகையில் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் ரயில் பாதுகாப்பிற்காக பராமரிப்பு பணி நடைபெறுவதால் சில மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாகவும், பகுதி நேர ரத்து செய்யப்படுவதாகவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது
முழுமையாக ரத்து: இதுகுறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: சென்னை கடற்கரையிலிருந்து இன்று (18-ந்தேதி) மற்றும் 20-ந்தேதி இரவு 8.25, 8.55, 10.20 ஆகிய நேரங்களில் புறப்பட்டு தாம்பரம் செல்லும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
சென்னை கடற்கரையிலிருந்து இன்று (18-ந்தேதி) மற்றும் 20-ந்தேதி இரவு 8.05 மணிக்கு புறப்பட்டு திருவள்ளூர் செல்லும் மின்சார ரெயிலும், இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயிலும் ரத்து செய்யப்படுகிறது.
சென்னை கடற்கரையில் இருந்து நாளை (19-ந்தேதி) மற்றும் 21-ந்தேதி காலை 4.05 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் செல்லும் மின்சார ரயில் ரத்து செய்யப்படுகிறது.
பகுதி நேர ரத்து: சென்னை கடற்கரையிலிருந்து இன்று (18-ந்தேதி) மற்றும் 20-ந்தேதி இரவு 11.05, 11.30, 11.59 ஆகிய நேரங்களில் புறப்பட்டு தாம்பரம் செல்லும் மின்சார ரயில்கள் சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, எழும்பூரில் இருந்து இயக்கப்படும்.
சென்னை கடற்கரையிலிருந்து நாளை (19-ந்தேதி) மற்றும் 21-ந்தேதி புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில் சென்னை கடற்கரை- எழும்பூர் இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, எழும்பூரில் இருந்து இயக்கப்படும்.
கூடுவாஞ்சேரியிலிருந்து இன்று (18-ந்தேதி) மற்றும் 20-ந்தேதி இரவு 10.10, 10.40, 11.15 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரயில் தாம்பரம்- சென்னை கடற்கரை இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, தாம்பரத்தில் நிறுத்தப்படும்" இவ்வாறு தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications