சென்னை டூ நெல்லை வந்தே பாரத்.. ஸ்பீட் எடுக்கும் பணிகள்.. ரயில்வே கொடுத்த மேஜர் அறிவிப்பு
சென்னை: தென் மாவட்ட மக்களின் பெரும் எதிர்பார்ப்பாக சென்னை டூ நெல்லை இடையேயான வந்தே பாரத் ரயில் உள்ளது. இந்த ரயில் எப்போது இயக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு பயணிகள் மத்தியில் உள்ள நிலையில், தெற்கு ரயில்வே நிர்வாக ரீதியாக வந்தே பாரத் ரயில் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் பொதுபோக்குவரத்தாக மக்கள் அதிகம் பயன்படுத்துவது ரயில்கள் தான் என்றால் மிகையல்ல.. அதிலும் தொலை தூர பயணங்கள் என்றால் மக்களின் முதல் சாய்ஸ் ரயிலாகத்தான் இருக்கும். பாதுகாப்பான பயணம் மட்டும் இன்றி டாய்லட் உள்ளிட்ட வசதிகளும் இருப்பதால் பயணிகள் எந்த வித சிரமும் இன்றி பயணிக்க முடியும். அந்த வகையில் பயணிகள் வசதியை கருத்தில் கொண்டு ரயில்களில் பல்வேறு வசதிகளை ரயில்வே மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், நாடு முழுவதும் சொகுசான ரயிலாக வந்தே பாரத் ரயிலை ரயில்வே அறிமுகம் செய்துள்ளது. கடந்த 2019- ஆம் ஆண்டு டெல்லி -வாரணாசி வழித்தடத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ரயிலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்ததால் நாடு முழுவதும் பல வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்திலும் சென்னை - கோவை, சென்னையில் இருந்து பெங்களூரு வழியாக மைசூர் வரையிலும் என இரண்டு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
வந்தே பாரத் ரயில்களை பொறுத்தவரை விமானத்திற்கு நிகரான சொகுசு வசதிகளை கொண்டது என்றே சொல்லலாம். முழுவதும் ஏசி வசதி, சாய்வு இருக்கைகள், பயோ டாய்லட், விசாலமான ஜன்னல் கண்ணாடிகள், வைஃபை வசதி, ஜிபிஎஸ், ஆடியோ, வீடியோ, தானியங்கி கதவும் என பல வசதிகள் உள்ளன. வந்தே பாரத் ரயிலை பொறுத்தவரை ரயில் என்ஜின், ரயிலின் மற்ற பெட்டிகளுடனேயே இணைந்திருக்கும். வழக்கமான எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து வெளித்தோற்றத்திலும் மாறுபட்டதாக வந்தே பாரத் ரயில்கள் உள்ளன.
வந்தே பாரத் ரயிலுக்கு மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ள நிலையில் சென்னை - நெல்லை வழித்தடத்திலும் இ ந்த ரயிலை இயக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. சென்னை - நெல்லை இடையேயான வந்தே பாரத் ரயில் .வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் இயக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில் தொடர்பாக முக்கிய அறிவிப்பை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மதுரை மற்றும் நெல்லை ரயில் நிலையங்களில் வந்தே பாரத் ரயிலை நிறுத்தி பராமரிக்க, பராமரிப்பு லைனில் மின்சாரம் மற்றும் தண்ணீர் வசதிகளை மேற்கொள்ள தெற்கு ரயில்வே டெண்டர் வெளியிட்டுள்ளது. ₹5 கோடி மதிப்பிலான இந்த பணிகளை மூன்று மாதத்தில் முடிக்க நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் முடிந்ததும் சென்னை - மதுரை - நெல்லை தடத்தில் வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications