சொந்த ஊர் செல்லும் வடமாநில தொழிலாளர்களுக்கு சிறப்பு ரயில்.. கோவையிலிருந்து புறப்பாடு.. முழு விவரம்
சென்னை: வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல இன்று சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இன்று இரவு கோவையிலிருந்து இந்த ரயில் சேவை இயக்கப்படுகிறது.
தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பொய்யான தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சிறப்பு குழு தமிழகத்தில் ஆய்வு நடத்தி வருகிறது.
இதையடுத்து ஹோலி பண்டிகைக்காக தமிழகத்தில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல தொடங்கிவிட்டனர். இதையடுத்து வடமாநில தொழிலாளர்களின் வசதிக்காக தெற்கு ரயில்வே சிறப்பு ரயிலை இயக்குவதாக அறிவித்தது.

தெற்கு ரயில்வே
இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஹோலி பண்டிகைக்காக வடமாநிலங்களில் உள்ள தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்பும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வசதிக்காக சிறப்பு ரயில் எண் 06049 கோவையில் இருந்து பாட்னாவுக்கு மார்ச் 5 ஆம் தேதி புறப்படும் என அறிவிக்கப்பட்டது. கோவையில் இருந்து இரவு 9.45 மணிக்கு புறப்ப்டடு மார்ச் 7ஆம் தேதி காலை 7 மணிக்கு இந்த ரயில் பாட்னாவை சென்றடையும்.

எந்த வழியாக ரயில் செல்கிறது
இந்த ரயில் வடமாநில தொழிலாளர்களுக்கு வசதியாக திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர், கூடூர், விஜயவாடா போன்ற பல்வேறு முக்கிய ரயில் நிலையங்கள் வழியாக விஜயகிராமம், குர்த சாலை, புவனேஸ்வர், கட்டாக், பாலசோர், மிட்னாபூர், அட்ரா, அசன்சோல் ஜென், சித்தரஞ்சன் மற்றும் பாட்னாவை அடைய ராஜேந்திர நகரங்கள் வழியாக சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்பதிவு
இந்த ரயிலில் முன்பதிவு செய்யப்பட்ட இரண்டாம் வகுப்பு பெட்டிகளும் குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகளோடு சேர்த்து 8 முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளும் இருக்கும் என தெற்கு ரயில்வே அறிவிப்பில் வெளியிடப்பட்டுள்ளது. இதனிடையே வடமாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பினால் 7ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

4 பேர் மீது வழக்குப்பதிவு
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பரவும் வீடியோ போலியானது. வதந்தி பரப்பிய 4 பேர் மீது இதுவரை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எந்த நோக்கத்திற்காக வதந்தி பரப்பினார்கள் என்பது பற்றி விசாரணைக்கு பிறகே தெரியவரும். அவர்கள் வசிக்கும் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

புலம்பெயர்ந்த வடமாநில தொழிலாளர்கள்
அது போல் தமிழக காவல் துறை சார்பில் வெளியான செய்திக் குறிப்பில் புலம்பெயர்ந்த வட மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக உண்மைக்கு புறம்பான பொய்பான தகவல் இணையதளத்திலும், சமூக ஊடகங்களிலும் விஷமிகள் சிலரால் பரப்பப்பட்டுள்ளது. அப்படி பொய் செய்தி பரப்பியவர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

என்ன பிரிவு
இது தொடர்பாக திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 153(A), 505(i) (b) கீழ் தெய்னிக் பாஸ்கர் பத்திரிக்கையின் ஆசிரியர் மீது ஒரு வழக்கும், திருப்பூர் மாவட்டம் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்ட பிரிவுகள் 153(B), 506(ii) (b) மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டபிரிவு 56(D) கீழ் தன்வீர் போஸ்ட் என்ற பத்திரிகையின் உரிமையாளர் முகமது தன்வீர் என்பவர் மீது ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உத்தரவு
அதேபோல, தூத்துக்குடி மாவட்டம் செண்ட்ரல் காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 153, 153(A), 504, 505(1(b), 505(1(c), 505(2) கீழ் | பிரசாந்த் உமராவ் என்பவர் மீது ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள இவர்களை கைது செய்ய தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனரின் உத்தரவின் பெயரில் தனி அமைக்கப்பட்டுள்ளது.

கடும் நடவடிக்கை
தமிழ்நாட்டில் வாழும் புலம்பெயர்ந்த வட மாநில தொழிலாளர்கள் எவ்வித அச்சமும் இன்றி முழு பாதுகாப்புடன் அமைதியாக வசித்து வருகிறார்கள், அமைதியை சீர்குலைத்து பதட்டத்தை ஏற்படுத்தும் வகையில் பொய் செய்திகளை பரப்புவோர் பற்றிய விவரங்கள் காவல்துறையினரால் சேகரிக்கப்பட்டு வருகிறது அவர்கள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கும் என்பது இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications