தமிழகத்திற்கு கிடைத்த பொக்கிஷம்! 3 அம்ரித் பாரத் ரயில்களின் அட்டவணை இதுதான்! ரயில்வே அசத்தல்
சென்னை: தமிழகத்திலிருந்து இயக்கப்படும் மூன்று புதிய அம்ரித் பாரத் ரயில்களின் கால அட்டவணையை தெற்கு ரயில்வே, வெளியிட்டுள்ளது. தாம்பரம், திருச்சி, நாகர்கோவில் ஆகிய இடங்களிலிருந்து புறப்படும் இந்த ரயில்களுக்கான முன்பதிவு இன்று மாலை 6 மணிக்குத் தொடங்கியது.
ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தபடி, தாம்பரம் - சந்திரகாச்சி வாராந்திர அம்ரித் பாரத் ரயில் (16107), டிசம்பர் 23 வெள்ளிக்கிழமை மாலை 3:30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் இரவு 8:15 மணிக்கு சந்திரகாச்சி அடையும். மறுமார்க்கத்தில் (16108) ரயில் டிசம்பர் 24 இரவு 11:55 மணிக்கு அங்கிருந்து கிளம்பி, மூன்றாம் நாள் காலை 9:15 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

வழித்தடம்: கரக்பூர், புவனேஸ்வர், விசாகப்பட்டினம், விஜயவாடா, சென்னை எழும்பூர் ஆகிய இடங்களில் நிற்கும்.
திருச்சியில் இருந்து நியூ ஜல்பாய்குரிக்கு (20610) அம்ரித் பாரத் ரயில், வரும் 28 புதன்கிழமை காலை 5:45 மணிக்கு புறப்பட்டு, மூன்றாம் நாள் காலை 5 மணிக்கு நியூ ஜல்பாய்குரியைச் சென்றடையும். மறுமார்க்கத்தில், நியூ ஜல்பாய்குரியிலிருந்து வரும் 30 வெள்ளிக்கிழமை மாலை 4:45 மணிக்கு புறப்படும் ரயில், மூன்றாம் நாள் மாலை 4:15 மணிக்கு திருச்சியை வந்தடையும்.
வழித்தடம்: கரக்பூர், புவனேஸ்வர், விசாகப்பட்டினம், விஜயவாடா, சென்னை எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
நாகர்கோவிலில் இருந்து நியூ ஜல்பாய்குரிக்கு (20604) அம்ரித் பாரத் ரயில், வரும் 25 ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணிக்கு புறப்பட்டு, நான்காம் நாள் காலை 5 மணிக்கு நியூ ஜல்பாய்குரி சென்றடையும். நியூ ஜல்பாய்குரியிலிருந்து (20603) வரும் 28 புதன்கிழமை மாலை 4:45 மணிக்கு புறப்பட்டு, மூன்றாம் நாள் இரவு 11 மணிக்கு நாகர்கோவிலை வந்தடையும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழித்தடம்: கரக்பூர், புவனேஸ்வர், விசாகப்பட்டினம், விஜயவாடா, காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, நெல்லை ஆகிய ரயில் நிலையங்களில் நிற்கும்.
இந்த ரயில்கள் கடந்த இரு நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடியால் தொடங்கப்பட்டது. இந்தியாவின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலையும் அவர் தொடங்கி வைத்தார்.
இந்த ரயில்களின் இயக்கம் குறித்து மத்தியமைச்சர் எல்.முருகன் கூறியிருப்பதாவது: புதிதாக தயாரிக்கப்பட்ட நான்கு 'அம்ரித் பாரத்' விரைவு இரயில்களை, மாண்புமிகு பாரதப் பிரதமர் @narendramodi ஜி அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்து நாட்டிற்கு அர்ப்பணித்தார். மேற்கு வங்கம் மாநிலத்திலிருந்து நாட்டின் வெவ்வேறு பகுதிகளை இணைக்கின்ற இந்த இரயில்களில், தமிழகம்-மேற்கு வங்கம் மற்றும் அவற்றிற்கு இடையிலான பகுதிகளை இணைக்கும் வகையில் இரண்டு அம்ரித் பாரத் இரயில்கள் இடம்பெற்றுள்ளது.
நியூ ஜல்பைகுரி-நாகர்கோவில் மற்றும் நியூ ஜல்பைகுரி-திருச்சி இடையிலான இரண்டு இரயில்களானது, தொழில் மற்றும் ஏனைய பயணங்களை மேற்கொள்ளும் பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் அமைகின்றது.
மேலும், மேம்பட்ட மற்றும் படுக்கை வசதிகளுடன் கூடிய புதிய 'வந்தே பாரத்' இரயிலும் இன்று நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது. நாட்டு மக்களின் தேவை உணர்ந்து, இரயில்வே துறையில் புதிய கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகின்ற மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜி அவர்களுக்கும், மாண்புமிகு மத்திய இரயில்வே துறை அமைச்சர் திரு.
@AshwiniVaishnaw அவர்களுக்கும் நாட்டு மக்கள் சார்பில் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அம்ரித் பாரத் என்றால் என்ன
அம்ரித் பாரத் என்பது குளிர்சாதன வசதி இல்லாத பெட்டிகள் கொண்ட விரைவு ரயில்களாகும். இவை 800 கி.மீ. தொலைவில் உள்ள நகரங்களுக்கிடையே இயக்கப்படுகிறது.இவை கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் இயக்கப்பட்டு வருகின்றன. மொத்தம் 22 பெட்டிகளை கொண்டது. 10 படுக்கை பெட்டிகளும் 10 பொது பெட்டிகளும் இருக்கும். பார்சல்களை கொண்டு செல்ல இரு பெட்டிகளும் இருக்கும். இது மணிக்கு 110 முதல் 130 கி.மீ. வேகத்தில் செல்லும்.
-
பறக்கும் படையிடம் சிக்கிய பணத்தை மீட்பது எப்படி? தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! -
இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை.. அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
ஹோட்டல்களுக்கு குட் நியூஸ்..! 23ஆம் தேதி முதல் கூடுதல் வணிக சிலிண்டர்கள்.. மத்திய அரசு அறிவிப்பு! -
இந்தியா முழுவதும் சனிக்கிழமை அன்று ரமலான் பண்டிகை.. சவுதி அரேபியாவில் இன்று ரம்ஜான் கொண்டாட்டம்! -
கோடை மழைக்கு எண்ட் கார்டு.. வெதர்மேன் கொடுத்த அப்டேட்! இனிதான் சம்பவம் இருக்கு -
பில் கேட்ஸ் செய்த சதி? தமிழகத்தில் கொட்டிய ஆலங்கட்டி மழைக்கு இதுதான் காரணமா! வெதர்மேன் பரபர விளக்கம் -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல்












Click it and Unblock the Notifications