பாண்டியன் ரயில் பிடிக்க.. தாம்பரம் போகனுமா? கொந்தளித்த பயணிகள்! அறிவிப்பை வாபஸ் பெற்ற தெற்கு ரயில்வே
சென்னை: எழும்பூர் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் சென்னை - மதுரை பாண்டியன் உட்பட 3 விரைவு ரயில்கள் எழும்பூருக்கு பதிலாக தாம்பரத்திலிருந்து இயக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியிருந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், தற்போது இந்த அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டிருக்கிறது.
நூற்றாண்டு பழமையான எழும்பூர் ரயில் நிலையம் தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பராமரிப்பு பணிகளுக்காக சில ரயில்கள், எழும்பூருக்கு பதிலாக தாம்பரத்திலிருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தன. குறிப்பாக டெல்டா மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் தாம்பரத்திலிருந்து இயக்கப்பட்டன.

மன்னார்குடி எக்ஸ்பிரஸ், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ், காரைக்கால் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் தாம்பரத்திலிருந்து இயக்கப்பட்டன. எனவே பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினார்கள். குறிப்பாக திருவொற்றியூர், அம்பத்தூர், ரெட்ஹில்ஸ் போன்ற பகுதியிலிருந்து ரயிலை பிடிக்க வரும் பயணிகள், தாம்பரம் வரை பயணிக்க வேண்டும் என்பதால் ரயிலை தவிர்த்துவிட்டு கூடுதல் கட்டணம் கொடுத்து பேருந்தில் பயணித்தனர்.
இதனால் தாம்பரத்தில் இருந்து இயக்கப்பட்ட ரயில்கள் பயணிகள் என்று வெறிச்சோடி காணப்பட்டது. தற்போது மன்னார்குடி எக்ஸ்பிரஸ் மட்டும் எழும்பூரில் இருந்து இயக்கப்படுகிறது. மற்ற இரண்டு ரயில்களும் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படுகின்றன. அதேபோல பராமரிப்பு பணிகள் காரணமாக வேறு சில ரயில்களும் தாம்பரத்திலிருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டன.
எழும்பூர் - திருச்சி ராக்போர்ட் (12654/ 12653)
எழும்பூர் - மதுரை பாண்டியன் (12638)
எழும்பூர் - திருச்சி சோழன் (22675)
எழும்பூர் - ராமேஸ்வரம் சேது(22661/ 22662)
எழும்பூர் - ராமேஸ்வரம்(16751 / 16752)
ஆகிய விரைவு ரயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கப்பட உள்ளதாகவும், இந்த மாற்றம், செப்.10 முதல் நவம்பர் 10 ஆம் தேதி வரை இருக்கும் என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். ஆனால் தென்மாவட்ட மக்கள் இந்த அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே, இந்த அறிவிப்பு வாபஸ் பெறப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்திருக்கிறது.
அதன்படி, எழும்பூர் - திருச்சி ராக்போர்ட் (12654/ 12653), எழும்பூர் - மதுரை பாண்டியன் (12638), எழும்பூர் - திருச்சி சோழன் (22675) என மூன்று ரயில்கள் மட்டும் எழும்பூரிலிருந்து இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications