புத்தாண்டுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தெற்கு ரயில்வே! இனி ஸ்பீடு அள்ளும்.. ரயில்வே துறை மாஸ் அப்டேட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: புத்தாண்டு தினமான இன்று முதல், தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரயில்களின் பயண நேரம் கணிசமாக குறைக்கப்பட்டிருக்கிறது. அதாவது ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டிருக்கிறது என்று தெற்கு ரயில்வே கூறியிருக்கிறது.

தெற்கு ரயில்வே தனது புதிய அட்டவணையை இன்று முதல் அமல்படுத்தியுள்ளது. இதன் மூலம் 65 ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டு, பயண நேரம் குறைக்கப்பட்டு இருக்கிறது. ‌முக்கியமாக கொல்லம்-தாம்பரம் எக்ஸ்பிரஸ் 85 நிமிடங்கள் விரைவாக சென்று சேரும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதுதான் அதிகபட்ச நேர குறைப்பு ஆகும்.

Southern Railway train tamil nadu

எந்தெந்த ரயில்கள்?

இதனைத் தொடர்ந்து, நாகர்கோவில்-தாம்பரம் எக்ஸ்பிரஸ் 50 நிமிடங்கள் பழக்கத்தை விட விரைவாக சென்று சேரும் என்றும், கோவை-ராமேஸ்வரம் வாராந்திர எக்ஸ்பிரஸ் 55 நிமிடங்கள் பயண நேரத்தை குறைத்து இருக்கிறது என்றும், தூத்துக்குடி-சென்னை முத்துநகர் எக்ஸ்பிரஸ் 30 நிமிடங்கள் மற்றும் பொதிகை, மங்களூர், குருவாயூர் ஆகிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் தலா 20 நிமிடங்கள் விரைவாக சென்று சேரும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

4 காரணங்கள்

இந்த வேகக் குறைப்புக்கு 4 முக்கியமான காரணங்கள் இருப்பதாக தெற்கு ரயில்வே தெரிவித்திருக்கிறது. தென் தமிழகத்தில் மதுரை-வாஞ்சி மணியாச்சி-தூத்துக்குடி மற்றும் வாஞ்சி மணியாச்சி-திருநெல்வேலி-நாகர்கோவில் இடையே பயணிகள் ரயில்கள் ஒன்றுக்கொன்று வழிவிட்டு செல்லும் வகையில் முன்பு காத்திருந்தன. ஆனால். இந்த பகுதியில் 300 கிலோமீட்டர் தூரத்துக்கு உள்ள தண்டவாளம் இரட்டிப்பு செய்யப்பட்டிருப்பதால், ரயில்கள் இனி காத்திருக்க வேண்டியதில்லை.

2வது காரணம்

அதேபோல ஒற்றை ரயில் பாதைகள் அனைத்தும் மின் மயமாக்கப்பட்டு இருப்பதால், என்ஜின்களை மாற்றும் நேரம் மிச்சமாக்கப்படுகிறது. மூன்றாவது காரணம் தண்டவாளங்களின் தரம் உயர்த்தப்பட்டிருப்பதால் முன்பு 80 லிருந்து 90 கிலோ மீட்டர் வேகத்தில் சென்ற ரயில்கள், இப்போது 110 கிலோமீட்டர் வேகத்திலும், சில இடங்களில் 130 கிலோமீட்டர் வேகத்திலும் செல்ல அனுமதிக்கப்படுகின்றன.

இது தவிர மீட்டர் கேஜ் பாதைகள் அனைத்தும், பிராட் கேஜ் பாதைகளாக மாற்றப்பட்டு இருப்பதால் ரயில் பயண நேரம் குறைகிறது.

மீட்டர் கேஜ் vs பிராட் கேஜ்

மீட்டர் கேஜ் என்றால் குறுகிய ரயில் பாதை என்று அர்த்தம். இரண்டு தண்டவாளங்களுக்கு இடையில் உள்ள தூரம் 1 மீட்டராக இருப்பின், அதை மீட்டர் கேஜ் என்று அழைப்பார்கள். இந்தியாவில் நீண்ட காலமாக இந்த ரயில் பாதைகள்தான் பயன்பாட்டில் இருந்தன. குறிப்பாக தென் மாவட்டங்களில் இவற்றை அதிகம் பார்க்க முடியும். இந்த தண்டவாளங்களில் ரயில்கள் 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே இயக்க முடியும். எனவே பயணிகள் ரயில் நீண்ட நேரம் பயணித்தது. இந்த சிக்கலுக்கு தீர்வு காணதான் பிராட் கேஜ் அதாவது அகல ரயில் பாதை திட்டம் கொண்டுவரப்பட்டது.

அகல ரயில் பாதை

இந்த திட்டத்தின்படி, ஒரு தண்டவாளத்திற்கும் இன்னொரு தண்டவாளத்திற்கும் இடையே இருக்கும் தூரம் 1.672 மீட்டர் என மாற்றப்பட்டது. இதனால், தண்டவாளங்கள் அகலமாக இருந்தன. இதில் ரயில்கள் அதிக வேகத்திலும் அதாவது மணிக்கு 130 முதல் 160 கிலோமீட்டர் வேகத்திலும் அதிக எடையை சுமந்தும் செல்ல முடிந்தது. மட்டுமல்லாது ரயில்கள் ஓடும் பொழுது, அது தடம் புரளாமல் இருக்கும் வகையில் தண்டவாளங்கள் அகலப்பாதை தண்டவாளங்கள் பாதுகாப்பானதாக இருந்தன. ரயிலின் பெட்டிகள் அகலமாக இருப்பதால் பயணிகளுக்கும் அதிக இடவசதி கிடைத்தது.

ரயில்களின் வேகம்

இப்படியாக ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டு இருப்பதால், சென்னை எழும்பூர், தாம்பரம் மற்றும் சென்னை சென்ட்ரல் ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து புறப்படும் ரயில்களில் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நெல்லை எக்ஸ்பிரஸ், சோழன் எக்ஸ்பிரஸ், வந்தே பாரத், முத்துநகர் எக்ஸ்பிரஸ் போன்ற முக்கிய ரயில்களின் புறப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. எனவே, பயணிகள் புதிய அட்டவணையை பார்த்து சரியான நேரத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

பாசஞ்சர் ரயில்கள்

எக்ஸ்பிரஸ் ரயில்களை தவிர 14 பாசஞ்சர் ரயில்களின் பயண நேரமும் குறைக்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாக திருநெல்வேலி-செங்கோட்டை பாசஞ்சர் ரயிலின் பயண நேரம் 35 நிமிடங்களாகவும், மதுரை-போடிநாயக்கனூர் பாசஞ்சர் ரயில் நேரம் 20 நிமிடங்களாகவும் குறைக்கப்பட்டு இருக்கிறது. இனிவரும் நாட்களில் விழுப்புரம்-மதுரை இடையே இருக்கும் இருப்புப் பாதையை பராமரிக்கும் பணிகள் நடைபெறும்.

இந்த பணிகள் முடிந்தவுடன் இந்த வழித்தடத்தில் ரயில்களின் பயண நேரம் இன்னும் கூடுதலாக குறையும் என்று அதிகாரிகள் கூறியிருக்கின்றனர். ரயில்வே துறையின் இந்த அறிவிப்பு பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+