சென்னை போக்குவரத்து நெரிசலை குறைக்க சவுமியா அன்புமணியின் புதிய ஐடியா! வொர்க் அவுட்டானா சூப்பர்!
சென்னை: சென்னையில் போக்குவரத்துச் சிக்கலை போக்க என்ன செய்ய வேண்டும் என்பதை சவுமியா அன்புமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணனை சந்தித்துள்ளார்.
உலக தூய காற்று தினத்தை முன்னிட்டு பசுமைத் தாயகம் அறக்கட்டளையின் தலைவரும் பாமக தலைவர் அன்புமணி மனைவியுமான சவுமியா அன்புமணி சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ்ஸை சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின்போது சென்னை மாநகரில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்துவது குறித்து சவுமியா ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்புக்கு பிறகு சவுமியா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், சென்னை மாநகராட்சி 5,045 கோடி ரூபாயில் குப்பை எரிக்கும் ஆலை அமைக்க போவதாக தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும். இதற்கு மாறாக குப்பையில்லா சென்னை என்ற கோட்பாட்டை விரைந்து செயல்படுத்த வேண்டும். மாநகராட்சிக்குள்பட்ட 10 இடங்களில் அடுக்குமாடி கார் நிறுத்தும் திட்டங்கள் கட்டும் திட்டத்தையும் மாநகராட்சி கைவிட வேண்டும். சென்னையில் தூய காற்று செயல்திட்டத்தை விரைந்து முழுமையாக செயல்படுத்த வேண்டும்.
சென்னை மாநகராட்சியில் தூய காற்று செயல் திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பது தொடர்பான ஆய்வறிக்கையை 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுவிட்டது. ஆனால் இந்த திட்டம் குறித்து அதற்கு பின்னர் எந்தவிதமான விளக்கமும் வெளியிடப்படவில்லை. மோட்டார் வாகனம் அல்லாத போக்குவரத்து முறையை விரைவில் செயல்படுத்த வேண்டும் என சவுமியா தெரிவித்துள்ளார்.
சென்னையில் இருக்கும் 7 சதவீதம் பேர் மட்டுமே கார்களை பயன்படுத்தும் சூழலில் 56 சதவீதம் மக்கள் பயன்படுத்தும் பொதுப் போக்குவரத்தை மேம்படுத்தும் நடவடிக்கையைதான் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு சவுமியா தெரிவித்திருந்தார். பசுமைத்தாயகம் என்ற அமைப்பை நடத்தி வருகிறார்.
இதன் பணியே சுற்றுச்சூழலை காப்பதுதான். மரக்கன்றுகளை நடுதல், காலநிலை, அவசர நிலை மாற்றம் குறித்த கருத்தரங்கு உள்ளிட்டவற்றை நடத்தி வருகிறார். இவர் மக்கள் டிவியின் இயக்குநராகவும் உள்ளார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் சோசியாலஜி பிரிவில் பிஎச்டி படித்துள்ளார். மேலும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமான முன்முயற்சிகளை செய்து வருகிறார்.
சென்னையில் வாகனங்களின் பெருக்கத்தால் கடும் போக்குவரத்து நெரிசலும் வாகன புகைகளால் காற்று மாசுபாடும் ஏற்படுகிறது. இதை போக்க பல முயற்சிகளை சமூகஆர்வலர்கள் எடுத்து வருகிறார்கள்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications