சவுமியா, அன்புமணி போட்ட 2 பிளான்.. பென்னாகரம் 2026-ல் தமிழ்க்குமரனுக்கு காத்திருக்கும் அந்த 1 ஆபத்து
சென்னை: பென்னாகரம் தொகுதியில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் தற்போது சூடுபிடித்துள்ளது..அன்புமணி ராமதாஸ், சவுமியா அன்புமணி ஆகியோர் நேரடியாக களமிறங்கி பிரச்சாரம் செய்து வருவது அரசியல் வட்டத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.. திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் G. K. M. தமிழ்க் குமரனுக்கு எதிராக பாமக தரப்பு தீவிரமாக செயல்படுகிறது.. வன்னியர் வாக்கு வங்கி முக்கியமாக மாறக்கூடிய இந்த தொகுதியில் கடும் போட்டி உருவாகியுள்ளது.. இதுகுறித்த ஒரு எக்ஸ்ளூசிவ் தகவல் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.
அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை... நிரந்தர நண்பனும் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் 2026 சட்டமன்றத் தேர்தலில் பல்வேறு அரசியல் காட்சிகள் அரங்கேறி வருகின்றன.

பென்னாகரம் 2026 தேர்தல்
அதன் ஒரு சாம்பிள் தான் பென்னாகரம் தொகுதியில் போட்டியிடும் ஜி.கே.எம்.தமிழ் குமரன். கடந்த 2010 ஆம் ஆண்டு பென்னாகரத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாமக சார்பில் மாம்பழம் சின்னத்தில் போட்டியிட்டு வன்னியர்களிடம் வாக்கு கேட்ட தமிழ்க் குமரன், தற்போது பாமகவை எதிர்த்து திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் கைச்சின்னத்திற்காக ஓட்டு கேட்டு போராடுகிறார்..
ஆனால் தமிழ் குமரனை தோற்கடித்தே தீர வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு அன்புமணியும் அவரது மனைவி சௌமியாவும் களமிறங்கி உள்ளதால் பென்னாகரம் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.
நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பல்வேறு தொகுதிகள் சிறப்பு கவனம் பெற்றுள்ளன. அப்படி சிறப்பு கவனம் பெற்றுள்ள தொகுதிகளில் ஒன்றுதான் பென்னாகரம்.
வன்னியர்கள் ஓட்டு
ஏனென்றால் தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த வன்னியர்களின் பார்வையும் பென்னாகரம் பக்கம் தான் திரும்பியுள்ளது. ஒருங்கிணைந்த பாமகவின் தலைவராக இருந்த ஜிகே மணியின் மகன் தான் இந்த தமிழ்க்குமரன். இவர் சமீபத்தில் தான் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இப்போது அவருக்கு பென்னாகரம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் அன்புமணியும், சௌமியாவும் தமிழ்க் குமரனை தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பென்னாகரம் தொகுதியில் முகாமிட்டு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்களாம்.
சவுமியா, அன்புமணி ராமதாஸ்
பென்னாகரத்தில் நடைபெற்ற பாமக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அன்புமணி, "என்னையும் அப்பாவையும் திட்டமிட்டு பிரித்தவர் ஜி கே மணி. இப்போது அவர் ஸ்டாலினின் கைக்கூலி. ஜிகே மணியின் மகன் தமிழ் குமரன் உதயநிதியின் கைக்கூலி. ஸ்டாலினுடன் ஜிகே மணியும் சேர்ந்துதான் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு கிடைக்காமல் தடுத்தனர்.
திமுகவில் சேர்ந்தால் ராமதாஸ் குடும்பத்திற்கு ஜிகே மணி செய்த துரோகம் தெரிந்துவிடும் என்பதால் தமிழ் குமரனை காங்கிரசில் சேர வைத்து பென்னாகரத்தில் வேட்பாளர் ஆகியுள்ளனர். பாமகவிற்கும் வன்னியர் சமூகத்திற்கும் துரோகம் செய்தவர்களை தோற்கடித்து ஆக வேண்டும்" என்றெல்லாம் நரம்பு புடைக்க பேசியுள்ளார்.
இதேபோல் அன்புமணியின் மனைவியும், தர்மபுரி தொகுதி வேட்பாளருமான சௌமியாவும் பென்னாகரம் தொகுதியில் பாமக நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரையும் நேரில் சந்தித்து தமிழ் குமரனை தோற்கடிக்க வேண்டுமென வலியுறுத்தி வருகிறாராம்...வன்னியர்கள் என்ன முடிவெடுக்க போகிறார்களோ தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!
- சிறப்பு நிருபர்
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications