சிகிச்சையின்போது எப்படி ஆக்டிவா இருந்திருக்காரு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாருங்க.. வெளியான வீடியோ
சென்னை: பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் கொரோனா பாதிப்பால் சென்னை மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மரணம் அடைந்தார்.
Recommended Video
சுமார் 50 நாட்களுக்கும் மேலாக சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார்.
ஆரம்பத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக அவர் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டாலும், பிறகு அந்த வைரஸ் பாதிப்பால் உடலில் பிற உறுப்புகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா நெகட்டிவ்
எனவேதான் செப்டம்பர் துவக்கத்திலேயே அவருக்கு கொரோனா நெகட்டிவ் என்று ரிசல்ட் வந்துவிட்ட போதிலும் கூட, பிற உறுப்புகள் நன்கு செயல்பட்டு, தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக அவர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார். அவருக்கு எக்மோ சிகிச்சை, செயற்கை சுவாச சிகிச்சை உள்ளிட்ட பல வகையான சிகிச்சைகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வந்தன.

பிசியோதெரபி சிகிச்சை
எனவே மருத்துவமனையில் அவர் படுக்கையிலேயே தொடர்ந்து இருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இவ்வாறு தொடர்ந்து படுக்கையிலேயே இருப்பதால், அவரது உடல் உறுப்புகளுக்கு.. குறிப்பாக கை கால் போன்ற வெளி உறுப்புகளுக்கு பயிற்சி என்பது மிகவும் அவசியப்படுகிறது. அந்த வகையில் அவருக்கு பிஸியோதெரபி மருத்துவர்கள் பிசியோதெரபி சிகிச்சை வழங்கியுள்ளனர்.

பிசியோதெரபி வீடியோ
பிசியோதெரபி சிகிச்சையின்போது கை ரிக்ஷாவில் எப்படி பெடல் சுற்றுவார்களோ அதுபோல ஒரு பெடல் போன்ற கருவி எஸ்பி பாலசுப்ரமணியம் கையில் கொடுக்கப்பட்டுள்ளது. பாலசுப்பிரமணியம் அதை, நல்லபடியாக சுற்றுகிறார். இதை பார்த்த மருத்துவர்கள், சிறப்பு, மிகச்சிறப்பு, அருமையாக ஒத்துழைப்பு தருகிறீர்கள். நன்றி சார். என்று ஆங்கிலத்தில் தெரிவிக்கிறார்கள். இந்த சிகிச்சை நடைமுறையை பற்றிய வீடியோ காட்சி தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

உடல்நிலை முன்னேற்றம்
மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது எஸ்பி பாலசுப்ரமணியம், மகன் எஸ்பிபி சரண் தனது தந்தையின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்திருந்தார். அதுபோல முன்னேற்றம் ஏற்பட்ட காலகட்டத்தில்தான் இந்த வீடியோ எடுக்கப்பட்டிருக்கும் என்று தெரிகிறது.

ஆக்டிவாக இருந்த எஸ்பிபி
அனைவரும் செய்த பிரார்த்தனையின் பலன், எஸ்பிபிஐ இந்த அளவுக்கு ஆக்டிவாக மாற்றியிருக்கிறது போலும். ஆனால் என்ன கெட்ட நேரமோ தெரியவில்லை. கொடூரமான கொரோனா வைரஸ் உள்ளே இருந்து அவரது உள்ளுறுப்புகளை பாதித்துள்ளது. அதன் பக்கவிளைவாக தான் இன்று பிற்பகலில் மாரடைப்பு ஏற்பட்டு எஸ்பி பாலசுப்பிரமணியம் மண்ணுலகை விட்டு விண்ணுலகம் சென்று சேர்ந்து விட்டார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications