ஓங்கியது எஸ்பி வேலுமணி கை.. 25க்கு 22 என உடைந்த அதிமுக! சைலண்டாய் சம்பவம் செய்த விஜய்! அடுத்து என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபையில் இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழக அரசு வெற்றி பெற்றுள்ளது. அரசுக்கு ஆதரவாக 144 எம்எல்ஏக்களும், எதிராக 22 எம்எல்ஏக்களும் வாக்களித்துள்ளனர். பாமக, பாஜக எம்எல்ஏக்கள் ஐந்து பேர் நடுநிலை வகித்துள்ளனர். விஜய்க்கு அதிமுக அதிருப்தி அணி ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் எடப்பாடி தரப்பில் 22 பேரும், எஸ் பி வேலுமணி தரப்பில் 25 பேரும் இருக்கின்றனர். இதன் மூலம் பெரும்பான்மை எம்எல்ஏக்களின் ஆதரவு எஸ்பி வேலுமணிக்கு இருப்பது தெரியவந்துள்ளது.

தமிழக முதல்வராக பதவியேற்ற சில நாட்களிலேயே பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த விஜய்க்கு இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு மிக முக்கியமானதாகவே கருதப்பட்டது.

AIADMK SP Velumani Vijay

தனிப்பெரும்பான்மை இல்லாத காரணத்தால் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் தவெக அரசு அமைந்தது. இந்த ஆதரவுடன் தவெக கூட்டணியின் பலம் 120ஆக உயர்ந்திருந்தது.

நம்பிக்கை வாக்கெடுப்பு

நம்பிக்கை வாக்கெடுப்பின்போது சட்டசபையில் பரபரப்பான சூழல் நிலவியது. சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் விதிப்படி உறுப்பினர்களை தனித்தனியாக எழுந்து நிற்கச் செய்து வாக்குகளை கணக்கிட்டார். ஆதரவு, எதிர்ப்பு மற்றும் நடுநிலை என மூன்று வகையாக வாக்குகள் பதிவு செய்யப்பட்டன. திமுக இந்த வாக்கெடுப்பை புறக்கணித்து வெளிநடப்பு செய்தது. அதே நேரத்தில் பாஜக மற்றும் பாமக நடுநிலை வகித்தது.

எடப்பாடி பழனிசாமி

உண்மையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பாக நடந்த சில நிகவுகள் அரசியல் களத்தை வேறு மாதிரியாக மாற்றியது. குறிப்பாக அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி மோதல் தமிழக அரசியலையே பரபரப்பாக்கியது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி ஒரு பக்கம் இருந்த நிலையில், எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் தலைமையிலான அணி தனியே செயல்பட தொடங்கியது. இந்த நிலையில், எஸ்.பி. வேலுமணி தரப்பை சேர்ந்த உறுப்பினர்கள் நேரடியாக தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.

அதிமுக பிளவு

சட்டசபையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அந்த அணி முழுமையாக விஜய் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தது. இதன் மூலம் அ.தி.மு.க.வின் பெரும்பான்மை உறுப்பினர்கள் தற்போது வேலுமணி தரப்பில் இருப்பது வெளிப்படையாக தெரியவந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தரப்பில் 22 உறுப்பினர்கள் மட்டுமே அரசுக்கு எதிராக வாக்களித்தனர். மறுபுறம் எஸ்.பி. வேலுமணி தரப்பில் 25 உறுப்பினர்கள் விஜய் அரசுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

எடப்பாடி அணி

அதன்படி, 1.எடப்பாடி பழனிச்சாமி, 2.ஓஎஸ் மணியன், 3.அக்ரி கிருஷ்ணமூர்த்தி, 4.ராஜேந்திரன், 5.கேசி கருப்பண்ணன், 6.கோவிந்தராஜன், 7.சு.பழனிசாமி, 8.ராமச்சந்திரன், 9.உஷாராணி, 10.ஜெயசுதா லட்சுமிகாந்தன், 11.சம்பத்குமார், 12.தளவாய் சுந்தரம், 13.நல்லதம்பி, மணி, 14.முக்கூர் சுப்பிரமணியன், 15.ராஜசேகர், 16.சு.ராஜேந்திரன், 17.வெங்கடாசலம், 18.வெற்றிவேல், 19.வேலழகன், 21.வேலு, 21.ஜெயசங்கரன் எடப்பாடி தரப்பில் உள்ளனர்.

எஸ்பி வேலுமணி - சிவி சண்முகம்

எஸ்பி வேலுமணி - சிவி சண்முகம் தரப்பில், 1.எஸ்பி வேலுமணி, 2.கோ.ஹரி, 3.எஸ்.காமராஜ், 4.சி.விஜயபாஸ்கர், 5.கேபி அன்பழகன், 6.இசக்கி சுப்பையா, 7.ஆர் காமராஜ், 8.சத்தியபாமா, 9.மரகதம் குமரவேல், 10.மரகதம் வெற்றிவேல், 11.லீமா மார்ட்டின், 12.எஸ்எம் சுகுமார், 13.சேகர் திலீபன், 14.ஜெய்சங்கர், 15.என்எஸ்என் நடராஜ், 16.நத்தம் விஸ்வநாதன், 17.கா.மோகன், 18. ரவி மனோகரன், 19. இரா.ராகேஷ், 20.எம்ஆர் விஜயபாஸ்கர், 21.கே.சி.வீரமணி, 22.எஸ். ஜெயக்குமார், 23.பி.ஹரிபாஸ்கர், 24.அருண்மொழித்தேவன், 25.சிவி சண்முகம், 26.பாலகிருஷ்ணா ரெட்டி உள்ளனர்.

உடைந்த அதிமுக

இந்த வாக்கெடுப்பின் மூலம் விஜய் தலைமையிலான அரசு சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையை உறுதிப்படுத்தியுள்ளது. அதே சமயம், அதிமுகவில் ஏற்பட்டிருக்கும் பிளவு சட்டமன்றத்தில் வெட்ட வெளிச்சமாகி உள்ளது. அதே நேரத்தில், எஸ்.பி. வேலுமணி அணி தவெகவுடன் இணைந்து செயல்படுமா?, அமைச்சரவை இடம் பெறுவார்களா?, அ.தி.மு.க தலைமையில் மாற்றம் வருமா என்ற கேள்விகள் அரசியல் வட்டாரத்தில் தீவிரமாக பேசப்பட்டு வருகின்றன. இன்றைய நம்பிக்கை வாக்கெடுப்பு வெறும் அரசை காப்பாற்றிய நிகழ்வாக மட்டும் இல்லாமல், அதிமுகவின் தலையெழுத்தை தீர்மானிக்கும் முக்கிய திருப்பமாகவே பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+