எஸ்பி வேலுமணிக்கு செக்.. அன்பரசன் டூ நந்தகுமார்... சென்னையில் ரெய்டு நடக்கும் 15 இடங்கள்.. விவரம்
சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனக்கு நெருக்கமானவர்களுக்கு ரூ.811 கோடி ஒப்பந்தங்களை ஒதுக்கியதாக புகார் எழுந்துள்ளது.இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் மட்டும் 15 இடங்களில் ரெய்டு நடக்கிறது.
Recommended Video
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கடந்த ஆட்சியில் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்தார். அவர் அமைச்சராக இருந்த காலத்தில் 2014 முதல் 2018 வரை கோவை மாநகராட்சியில் 346.81 கோடிக்கு ஒப்பந்தங்களும், சென்னை மாநகராட்சியில் ரூ.464.02 கோடி ஒப்பந்தங்களும் நெருக்கமானவர்களுக்கு அளித்ததாக திமுக சார்பில் ஆர்எஸ் பாரதி எம்பி புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது..எஸ்பி வேலுமணி உள்பட 17 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக எஸ்பி வேலுமணியின் வீடு, எம்எல்ஏ விடுதி, ஆடிட்டர் இல்லம் மற்றும் அவருக்கு நெருக்கமான இடங்கள் என 52க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் இன்றுகாலை முதலே சோதனை நடத்தி வருகிறார்கள்.

அன்பரசன் வீடு
சென்னையில் மட்டும் 15 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதன் விவரங்களை இப்போது பார்ப்போம். சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள டிஆர் அன்பரசன் என்பவரது வீட்டில் சோதனை நடந்து வருகிறது. இதேபோல் கோடம்பாக்கத்தில் உள்ள ஆலயம் பவுண்டேசனில் ரெய்டு நடக்கிறது.

கன்ஸ்ட்ரோமால் குட்ஸ்
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நமதுஅம்மா அலுவலகம், அதே ஆழ்வார்பேட்டையில் உள்ள கேசிபி இன்ஜினியரிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஆகியவற்றிலும் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை மேற்கொண்டு வருகிறது. சென்னை மயிலாப்பூரில் உள்ள constromall goods பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் அலுவலகங்களிலும், ஆழ்வார்பேட்டையில் உள்ள ar.es.ps infra பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திலும், தேனாம்பேட்டையில் உள்ள ஆலம் கோல்டு மற்றும் டைமண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திலும் சோதனை நடந்து வருகிறது.

எஸ்பி பில்டர்ஸ்
தேனாம்பேட்டையில் உள்ள ராஜாமணி ராகவாச்சாரி என்பவரது வீட்டிலும். அரும்பாக்கத்தில் உள்ள கிருஷ்ணசாமி முத்துகுமாரசாமி என்பவரது வீட்டிலும், மேற்கு முகப்பேரில் உள்ள எஸ்பி பில்டர்ஸ் நிறுவனர் ஆர் முருகேசன் அலுவலகத்திலும், வேளச்சேரி ராம்நகரில் உள்ள சந்திரசேகர் என்பவரது வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.

சென்னை மாநகராட்சி பொறியாளர்
அடையாறு காந்தி நகரில் உள்ள சென்னை மாநகராட்சி தலைமை பொறியாளர் நந்தகுமாரின் இல்லம், வில்லிவாக்கம் நேதாஜி நகரில் உள்ள சென்னை தலைமை பொறியாளர் புகழேந்தி, சென்னை திருநீர்மலையில் உள்ளள கேபிஆர் இன்ஜினிரியர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், வில்லிவாக்கத்தில் உள்ள பென்னி என்பவரது வீடு, மாதவரம் பால்பண்ணை காலணியில் உள்ள தாமஸ் அய்யாதுரை என்பவரது வீடு உள்ளிட்ட மொத்தம் 15 இடங்களில் சென்னை லஞ்ச ஒழிப்புதுறை ரெய்டு நடத்தி வருகிறது.
-
நைட்டு ஃபுல்லா விட்டு விளாச போகுது மழை.. மதுரை உள்பட 4 மாவட்டங்களுக்கு அலர்ட் விடுத்த வானிலை மையம் -
Low Pressure Trough: நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு பாதை.. 15-ம் தேதி வரை மழை விடாது! சென்னையில் இன்று மழை வெளுக்கும் -
தமிழகத்தில் 10 இடங்களில் செஞ்சுரி போட்ட வெயில்.. மொத்தமாக எகிறிய வெப்பநிலை! -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. சென்னையில் 2 நாளைக்கு விட்டு விளாசப் போகுது மழை! வானிலை மையம் எச்சரிக்கை -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
CRPF Job: மத்திய ரிசர்வ் காவல் படையில் 9,195 கான்ஸ்டபிள் பணியிடங்கள்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! 69 ஆயிரம் சம்பளம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: உங்கள் நகை எப்போது கைக்கு வரும்? முழு விவரம் -
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
பக்கத்திலேயே இருந்தும் கூட.. முகத்தை கூட பார்க்கவில்லை.. நோ சொன்ன ராகுல்.. கவனித்த ஸ்டாலின் -
மாதம் 1.2 கோடியா... இன்ஸ்டா அஸ்வினி அஷ் கல்லா கட்டுவது உண்மையா.. வாயை பிளக்கும் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications