முதலமைச்சர் ஸ்டாலின் ரூம் வரை சென்ற சரண்.. பழுக்குமா காம்தார் நகர் கோரிக்கை.. மறக்க முடியாத எஸ்பிபி
சென்னை: பாடும் நிலாவாக வலம் வந்த, மறைந்த பின்னணிப் பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியத்தின் 4ம் ஆண்டு நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், தமிழக அரசுக்கு எஸ்பிபி மகன், முக்கிய கோரிக்கை ஒன்றை அளித்திருக்கிறார்.
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என இந்தியாவிலுள்ள மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடி புகழ்பெற்றவர் எஸ்பிபி.

ராகங்கள்: இவர் பாடாத ராகங்கள் இல்லை.. இவர் பாடாத நடிகர்களும் இல்லை.. பாடாத இசையமைப்பாளர்களும் இல்லை.. மிகச்சிறந்த நடிகர், இசையமைப்பாளர், சிறந்த டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என பன்முக கலைஞராகவும் திகழ்ந்தவர் எஸ்பிபி.
அனைத்தையும்விட, அபரிதமான கனிந்த மனிதநேயம் மிக்கவர்.. இளைய கலைஞர்களை ஊக்குவித்தவர்.. தலைக்கனம் இல்லாமல், குழந்தைகளிடமும் அன்புடன் பழகக்கூடியவர்.. கடந்த 2020 ஆண்டு, உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மருத்துவமனையிலேயே உயிர் பிரிந்தது.. இன்று அதாவது 25ம் தேதி எஸ்பிபி-யின் 4வது ஆண்டு நினைவு தினமாகும். இதனால், எஸ்பிபியின் ரசிகர்கள் அவரது நினைவுநாளை முன்னிட்டு, அவரது உருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
கின்னஸ் சாதனை: இதைத்தவிர பல்வேறு மொழிகளில் 40,000-க்கும் அதிகமான பாடல்கள் பாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். 6 தேசிய விருது, எண்ணிக்கையில் அடங்காத பல மாநில விருதுகள் போன்றவைகளை எஸ்பிபி பெற்றுள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில்தான் எஸ்பி பாலசுப்ரமணியம் வாழ்ந்து வந்தார்.. காம்தார் நகர் என்ற பகுதியில் அவரது வீடு உள்ளது.. எனவே, இந்த காம்தார் நகரை, 'எஸ்.பி.பாலசுப்ரமணியம் நகர்' என பெயர் மாற்றம் செய்யக் கோரி, அவரது மகனும் பாடகருமான எஸ்பி சரண், முதலமைச்சர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
சினிமா துறை: இந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது: "நீண்ட நெடும் காலமாக சினிமா துறையில் தனது இசையின் மூலமாக தமிழக மக்கள் மனதில் இடம்பிடித்து அவர்களின் மாறா அன்பை பெற்றவர் மறைந்த எஸ்பி பாலசுப்ரமணியம்.
அவரது நினைவை போற்றும் வகையில், எஸ்பிபி இறுதி மூச்சு வரையில், நீண்ட காலம் வாழ்ந்த சென்னையில் உள்ள காம்தார் நகரினை அல்லது அவர் வாழ்ந்த வீதியை எஸ்பி பாலசுப்ரமணியம் நகர் அல்லது வீதி என பெயர் மாற்றம் செய்திட உரிய ஆவணம் செய்யுமாறு, அவருடைய ரசிகள் என்ற முறையிலும், மகன் என்ற முறையிலும், என் சார்பிலும் எனது குடும்பத்தினர் சார்பிலும் மிகவும் பணிவுடன் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.
ரசிகர்கள்: அவரது கோடிக்கணக்கான ரசிகர்களின் ஆவலும், வேண்டுதலும் இதுவே என்பதையும் உங்கள் கனிவான பார்வைக்கு கொண்டுவர கடமைப்பட்டிருக்கிறேன்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
எஸ்பி சரணின் இந்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படுவது குறித்து தமிழக அரசு தரப்பிலிருந்து இதுவரை எந்த விளக்கமும் வெளியாகவில்லை.. ஆனால், எப்படியும் எஸ்பிபி-க்காக இந்த கோரிக்கையை அரசு நிறைவேற்றும் என்றே நம்பப்படுகிறது. காரணம், எத்தனையோ பிரபலங்களின் நினைவாக அவர்கள் வாழ்ந்த தெருக்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன...
நடிகர் விவேக்: இப்படித்தான், கடந்த 2022ல் விவேக் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அவர் வசித்த வீடு உள்ள சாலைக்கு விவேக் பெயர் வைக்க வேண்டும் என விவேக்கின் மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவருமே முதல்வர் ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை விடுத்திருந்தனர். இதை ஸ்டாலினும் உடனே பரிசீலித்து நடவடிக்கை எடுத்திருந்தார்.. அதன்படியே, விவேக் வீடு அமைந்துள்ள பத்மாவதி நகர் பிரதான சாலையை "சின்ன கலைவாணர் விவேக் சாலை" என பெயர் மாற்றம் அறிவிக்கப்பட்டது.
இதுபோலவே ஏற்கனவே , பிரபலங்களின் பெயர்களில், நகரங்கள், சாலைகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.. எனவே, எஸ்பி சரணின் கோரிக்கையும் உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, சென்னை காம்தார் நகருக்கு எஸ்பி பாலசுப்ரமணியம் பெயர் சூட்டப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பும் விரைவில் வரும் என்கிறார்கள்.
மார்பளவு சிலை: முன்னதாக, இன்றைய நினைவு நாளையொட்டி, அவரது சொந்த ஊரான திருவள்ளூர் மாவட்டம், கோணேட்டம் பேட்டை கிராமத்தில் 4 அடி உயரம் கொண்ட மார்பளவு உருவச்சிலை கடந்த மாதம் திறக்கப்பட்டது.. இந்த சிலைக்கு அவரது கிராமத்தினர் திரண்டு சென்று அஞ்சலி செலுத்தியும் வருகிறார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications