மாண்புமிகு அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்! டங் ஸ்லிப்! சட்டசபையில் சாரி கேட்ட சபாநாயகர் அப்பாவு!
சென்னை: அதிமுக சட்டமன்ற உறுப்பினர் நத்தம் விஸ்வாதனை, சபாநாயகர் அப்பாவு மாண்புமிகு அமைச்சர் என்று அழைத்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
என்னாது நத்தம் விஸ்வநாதன் அமைச்சரா என திமுக, அதிமுக என இரண்டு பக்கமும் சட்டமன்ற உறுப்பினர்கள் லேசான சலசலப்பில் ஈடுபட்டனர்.

தமிழக பட்ஜெட்டை கூட்டத்தொடரை எதிர்க்கட்சிகளின் கடும் குடைச்சல்களுக்கு மத்தியில் அவையை திறம்படவும், கண்டிப்புடனும் நடத்தி வருகிறார் சபாநாயகர் அப்பாவு.
ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற எந்த பேதமும் இல்லாமல் எல்லா கட்சிகளை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அவையில் பேசுவதற்கு கடிவாளம் போடுகிறார்.
இதனால் பல நேரங்களில் நேரடியாக சபாநாயகர் அப்பாவுவுடன் சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்குவாதம் செய்துள்ளனர். அப்படித்தான் வேல்முருகன், நத்தம் விஸ்வநாதன் போன்றோர் எல்லாம் கடந்த வாரங்களில் சபாநாயகருடன் கோபித்துக்கொண்டனர்.
இதனிடையே திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையை சுற்றுலா தலமாக்குவது பற்றிய கேள்வியை சட்டசபையில் இன்று எழுப்பிய நத்தம் விஸ்வாதனை, மாண்புமிகு அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் என மறந்தவாறு குறிப்பிட்டுவிட்டார் சபாநாயகர் அப்பாவு.

இதைக்கேட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பலரும் சிரித்ததோடு தங்களுக்குள் கமெண்ட் அடிக்கத் தொடங்கினர். அதேபோல் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அமர்ந்திருக்கும் பக்கமும் லேசான சலசலப்பு ஏற்பட்டது.
இதையடுத்து சுதாரித்துக் கொண்ட சபாநாயகர் அப்பாவு, முன்னாள் அமைச்சர் என்று குறிப்பிடுவதற்கு பதில் அமைச்சர் என்று நத்தம் விஸ்வநாதனை தாம் அழைத்துவிட்டதாகவும் சாரி எனவும் சபையில் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.
சட்டசபையில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் பல்வேறு பிரச்சனைகளை சாமர்த்தியமாக சமாளித்து கட்சி பேதமின்றி எல்லா உறுப்பினர்களுக்கும் பேச வாய்ப்பு அளிக்கும் வகையில் சபாநாயகர் அப்பாவு அவையை வழி நடத்திச் செல்வது கவனிக்கத்தக்கதாகும்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications