ஆளுநர் ஆர்என் ரவி உரையின்போது அசாதாரண சூழலை உருவாக்கியது யார்? சபாநாயகர் அப்பாவு பரபரப்பு விளக்கம்
சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அசாதாரண சூழ்நிலையை உருவாக்கினார் என சபாநாயகர் அப்பாவு இன்றைய தினம் விளக்கமளித்துள்ளார். மேலும் ஆளுநர் உரையின்போது என்ன நடந்தது என்பது குறித்தும் அவர் விளக்கமளித்தார்.
தமிழக சட்டசபையின் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் நேற்று முன் தினம் தொடங்கியது. இந்த கூட்டத் தொடரில் அரசு தயாரித்த உரையை ஆளுநர் ஆர் என் ரவி முழுமையாக படிக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அது போல் ஆளுநர் இருக்கும்போதே முதல்வர் ஸ்டாலின் எழுந்து தீர்மானத்தை வாசித்தார். அதில் ஆளுநரின் உரை எதுவும் அவை குறிப்பில் இருக்கக் கூடாது. அரசு தயாரித்த உரை மட்டுமே அவைக் குறிப்பில் இடம் பெற வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

இரு விதமான கருத்துகள்
இந்த விவகாரத்தில் இரு விதமான கருத்துகள் வருகின்றன. அதாவது ஆளுநரை அழைத்து கூட்டணி கட்சியினரை தூண்டிவிட்டு அமளியில் ஈடுபட்டதாகவும் ஆளுநர், சபாநாயகர் மட்டுமே பேசும் வகையில் மைக் வைக்கப்பட்டிருந்த நிலையில் மைக்கே இல்லாமல் விதிகளை மீறி முதல்வர் ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்ததாகவும் ஒரு சாரார் தெரிவிக்கிறார்கள்.

ஒப்புதல்
அது போல் ஆளுநரிடம் ஒப்புதல் பெற்ற பிறகே ஆளுநர் உரை அச்சடிக்கப்பட்டது. அவ்வாறிருக்கையில் அதை ஏன் ஆளுநர் முழுமையாக படிக்கவில்லை. ஒரு வேளை அவர் தவிர்த்த பத்திகளில் ஆட்சேபம் இருந்திருந்தால் ஒப்புதல் அளிக்கும்போதே சொல்லியிருக்கலாமே என் மற்றொரு சாராரும் தெரிவிக்கிறார்கள்.

விதி எண் 17 ல் தளர்வு
ஆனால் விதி எண் 17யில் தளர்வு செய்யப்பட்டு முதல்வர் ஸ்டாலின் அந்த தீர்மானத்தை வாசித்தார் என்றும் அவர் எந்தவிதமான விதிகளையும் மீறவில்லை என தெரிவிக்கிறார்கள். இந்த நிலையில் இன்றைய தினம் சட்டசபை கூட்டத் தொடர் 3ஆவது நாளாக கூடியது. நேற்றைய தினம் இரங்கல் தீர்மானத்துடன் ஒத்திவைக்கப்பட்டது.

சபாநாயகர் அப்பாவு
இன்றைய தினம் சபாநாயகர் அப்பாவு பேசிய போது, ஆளுநர் உரையின் போது காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் கோஷமிட்டதை தவிர்த்திருக்க வேண்டும். ஆளுநர் இருக்கை எதிரே நின்று கோஷம் எழுப்பியதை தவிர்ததிருக்க வேண்டும். கடந்த 9ஆம் தேதி ஆளுநரோடு வந்த விருந்தினர் ஒருவர் பேரவை நடவடிக்கைகளை தொலைபேசி வாயிலாக பதிவு செய்தது அவை உரிமை மீறல் என திமுக எம்எல்ஏ டி.ஆர்.பி ராஜா புகார் அளித்துள்ளார்.

பேரவை உரிமை மீறல் குழு
பேரவையின் உரிமை மீறல் குழுவுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும். ஆளுநர் உரையின் போது அசாதாரணமான சூழலை உருவாக்கியது அவையோ அரசோ இல்லை. ஆளுநர்தான் அசாதாரண சூழலை உருவாக்கியுள்ளார். முதல்வரின் மதிநுட்பத்தால் தான் சட்டசபையின் மாண்பு காக்கப்பட்டது. இந்த நிகழ்வு இந்தியா முழுவதும் உள்ள சட்டசபைகளின் நடவடிக்கைக்கு முன்னுதாரணம். இந்தியாவில் உள்ள அனைத்து சட்டமன்றங்களின் மாண்பையும் முதல்வர் ஸ்டாலின் காத்துள்ளார். தமிழ்நாடே முதல்வர் ஸ்டாலினின் துணிவான நடவடிக்கையை பாராட்டி வருகிறது. இவ்வாறு சபாநாயகர் அப்பாவு பேசியிருந்தார்.
-
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல்












Click it and Unblock the Notifications