என்னைப் பார்த்து பேசுங்க! சட்டசபையில் சூடான சபாநாயகர் அப்பாவு! திகைத்துப் போன 2 அமைச்சர்கள்!
சென்னை: சட்டசபையில் பேசும் போது தன்னை பார்த்து பேசுமாறு அமைச்சர்களுக்கு சபாநாயகர் அப்பாவு உத்தரவு போட்டது சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, கூட்டணிக்கட்சி என்ற எந்த பேதமும் இல்லாமல் அனைத்துக் கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களையும் சபையில் சமமாக நடத்துவதன் மூலம் அப்பாவு கவனம் ஈர்த்திருக்கிறார்.

இதனிடையே அதிமுக சட்டமன்ற உறுப்பினர் நத்தம் விஸ்நாதன் கேள்விக்கு பதிலளித்து பேசிய சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் உறுப்பினரை பார்த்து பதிலளித்துக் கொண்டிருந்தார்.
இதனால் சூடான சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் பேசுங்க, என்னைப் பார்த்து பேசுங்க என அவருக்கு உத்தரவு போட்டார். சபாநாயகர் அப்பாவு விதித்த கட்டுபாட்டால் திகைத்துப் போன அமைச்சர் ராமச்சந்திரன் உடனடியாக தனது பார்வையை சபாநாயகர் பக்கம் திருப்பினார்.
அதேபோல் பால் கொள்முதல் விவகாரம் குறித்து சட்டசபையில் பேசிக் கொண்டிருந்த அமைச்சர் நாசரையும், தன்னை பார்த்து பேசுமாறும், சுருக்கமாக விரைந்து பேசி முடிக்குமாறும் சபாநாயகர் அப்பாவு அறிவுறுத்தினார்.
இதற்கு முந்தைய ஆட்சிக்காலங்களில் இது போன்ற நிகழ்வுகள் மிகவும் அரிதானதாக இருக்கும். ஆனால் இப்போது சபாநாயகர் அப்பாவுவுக்கு முதல்வர் ஸ்டாலின் முழு சுதந்திரம் வழங்கியுள்ளதால் சபையை உரிய கட்டுப்பாடுகளுடன் நடத்தி வருகிறார்.
திமுக, அதிமுக என்ற எந்த பாகுபாடும் இல்லாமல் தனது பதவிக்குரிய பணிகளை அப்பாவு செய்து வருகிறார். இது ஆளும்கட்சி தரப்பிலேயே சிலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications