சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு ‘செம’ அறிவிப்பு கொடுத்த மேயர் பிரியா.. 200 பேருக்கும் இலவச டேப்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள் வயிற்றில் பால் வார்க்கும் வகையில் பட்ஜெட்டில் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார் மேயர் பிரியா. சென்னை மாநகராட்சியின் 200 வார்டு உறுப்பினர்களுக்கும் டேப் கணினி வழங்க ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியின் 2024-25-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர், சென்னை ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் இன்று தொடங்கியது. இதில் இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மேயர் பிரியா வாசித்தார். அதில், 82 முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

Special announcement for Chennai corporation councillors in budget


சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள முக்கியமான அறிவிப்புகள்:

* சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் 5ஆம் வகுப்பு வரை பயிலும் 64,022 மாணவர்களுக்கு ஒரு ஜோடி காலணி, 2 ஜோடி காலுறை வழங்க ரூ.3.59 கோடி நிதி ஒதுக்கீடு
* 255 பள்ளிகளில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த ரூ.7.46 கோடி ஒதுக்கீடு.
* சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் 419 சென்னை பள்ளிகளில் பயிலும் 1,20,175 மாணவர்களுக்கு தன் விவரக்குறிப்பினை அறிந்து கொள்ளவும் மற்றும் பாதுகாப்பிற்காகவும் வண்ண அடையாள அட்டை(ID Card) வழங்குவதற்காக ரூ.61 லட்சம் நிதி ஒதுக்கீடு.

* எல்கேஜி முதல் 12- ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு தலா இரண்டு சீருடை வழங்க ரூ.8.50 கோடி ஒதுக்கீடு.
* தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 4 மற்றும் 5ம் வகுப்பு பயிலும் 24,700 மாணாக்கர்களை சென்னையை சுற்றியுள்ள பகுதிகளுக்கு சுற்றுலா அழைத்துச் செல்ல ரூ.47.25 லட்சம் ஒதுக்கீடு.

* ராயப்பேட்டையில் மாநகராட்சியின் கீழ் செயல்படும் தொழிற்பயிற்சி நிலையத்தை மேம்படுத்த ரூபாய் 3 கோடி ஒதுக்கீடு.
* அனைத்து பள்ளிகளில் பயிலும் மாணாக்கர் பயன்பெறும் விதமாக 10 வட்டாரங்களுக்கு தலா ஒரு ஆலோசகர் வீதம் 10 ஆலோசர்கள் தற்காலிக பணியாளர்களாக நியமித்து மாணவர்களுக்கு உளவியல் ரீதியான ஆலோசனை வழங்கப்படும். இதற்காக ரூ.35 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* 419 சென்னை பள்ளிகளை உடனடியாக பழுது பார்க்கும் வகையில் ரூ.1.32 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
* சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த ஒரு மண்டலத்திற்கு கூடுதலாக 5 தற்காலிகப் பணியாளர்கள் நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது இதற்கான பட்ஜெட்டில் ரூ.1.16 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* திறமைமிக்க மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு STEM பயிற்சி வழங்க ரூ.1 கோடி ஒதுக்கீடு.
* 338 பள்ளிகளுக்கு ஐந்து பச்சை வண்ண பலகைகளை வழங்க ரூ.92.95 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.
* சென்னையின் 200 வார்டுகளிலும் பெண்களுக்கு பிரத்யேக உடற்பயிற்சிக் கூடம் அமைக்கப்படும். இதற்காக ரூ. 10 கோடி நிதி ஒதுக்கீடு.

மேயர் பிரியா பட்ஜெட் தாக்கல் செய்தபோது.. உதாசீனப்படுத்திய கவுன்சிலர்கள்! செல்போனில் மூழ்கிட்டாங்களே


* வார்டு உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ.45 லட்சமாக வழங்கப்படுகிறது.
* 200 வார்டு உறுப்பினர்களுக்கும் டேப் கணினி வழங்கப்படும். இதற்காக ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு

* சைதாப்பேட்டை மருத்துவமனையில் கூடுதல் வசதிகளை ஏற்படுத்த ரூ.7 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
* சென்னை பள்ளிகளில் பயின்று அதிக மதிப்பெண்கள் பெற்று மீண்டும் சென்னை பள்ளிகளிலேயே தொடர்ச்து 11ம் வகுப்பு சேர்ந்து பயிலும் 50 மாணாக்கர்களை (ISRO) போன்ற இடங்களுக்கு சுற்றுலா அழைத்துச் செல்ல ரூ.10 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* சென்னை மாநகராட்சி எல்லைகள் தொடங்கும் பகுதியில் உள்ள பிரதான சாலைகளில் வரவேற்பு நுழைவாயில்கள் அமைக்க ரூபாய் 15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக ஈசிஆர் சாலையில் அக்கரையிலும், ஓஎம்ஆர் சாலையில் செம்மஞ்சேரியிலும், ஜிஎஸ்டி சாலையில் மீனம்பாக்கத்திலும் மௌண்ட் பூந்தமல்லி சாலையில் எஸ்ஆர்எம்சி மருத்துவமனை அருகிலும், ஜிஎன்டி சாலையில் புழல் மாரியம்மன் நகரிலும் நுழைவாயில் கட்டப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி மேயராக பதவி வகித்து வரும் பிரியா ராஜன், 2023-24 ஆம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டை 2022 ஏப்ரல் மாதத்தில் குறுகிய காலகட்டத்திலேயே தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த பட்ஜெட் ரூபாய் 340.25 கோடி பற்றாக்குறையுடன் தாக்கல் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+