மேயர் பிரியா பட்ஜெட் தாக்கல் செய்தபோது.. உதாசீனப்படுத்திய கவுன்சிலர்கள்! செல்போனில் மூழ்கிட்டாங்களே
சென்னை: மாநகராட்சி பட்ஜெட்டை மேயர் பிரியா ஆர்வமாக தாக்கல் செய்துகொண்டிருந்தபோது மாநகராட்சி கவுன்சிலர்கள் சிலர் செல்போன் பேச்சில் மூழ்கி இருந்தனர்.
நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்று சென்னை மாநகராட்சி மேயராக கடந்த 2022 ஆம் ஆண்டுபதவியேற்ற பிரியா 2022 - 2023 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை முதலில் தாக்கல் செய்தார். கடந்த ஆண்டு 2023 - 2024 ஆம் ஆண்டுக்கான மாநகராட்சி பட்ஜெட் கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்டு உள்ள நிலையில் வரும் 2024 - 25 நிதியாண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று ரிப்பன் மாளிகையில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது.

இதனை அடுத்து சென்னை மாநகராட்சி மேயர் பிரியா நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். 82 புதிய அறிவிப்புகளை கொண்ட பட்ஜெட் அறிக்கையில் பல்வேறு திட்டங்கள் இடம்பெற்று இருக்கின்றன. கல்வி, உள்கட்டமைப்பு, குடிநீர், சாலை, சுகாதாரம் என பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். குறிப்பாக சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இனி 2 செட் சீருடை, ஷூ, சாக்ஸ் வழங்கப்படும் என்ற அறிவிப்பு நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோன்று, "2 கல்லூரிகளில் ரூ 50 லட்சம் செலவில் மகளிர் முன்னேற்றத்திற்கான தொழிற்கல்வி அமைக்கப்படும், சென்னை மாநகராட்சியில் 2024 - 25 ஆம் ஆண்டு முதல் மாமன்ற உறுப்பினர்களின் மேம்பாட்டு நிதி ரூ.40 லட்சத்தில் இருந்து ரூ.45 லட்சமாக உயர்த்தப்படும், மாநில பேரிடர் தடுப்பு நிதி உள்பட பிற திட்ட நிதிகளில் இருந்து மழைநீர் வடிகால் பணிகளுக்காக 2024 - 25ம் ஆண்டில் ரூ.537 கோடி ஒதுக்கீடு, அனைத்து மாநகராட்சி உறுப்பினர்களுக்கும் டேப், சென்னையில் 19 விளையாட்டு திடல்கள் ரூ.5 கோடி மதிப்பில் மேம்படுத்தப்படும் என பல்வேறு புதிய அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெற்று இருந்தனர்.

அதேபோல், "சூளைமேடு, விருகம்பாக்கம் கால்வாய் குறுக்கே கட்டப்பட்டுள்ள பழைய பாலம் இடிக்கப்பட்டு ரூ.2.25 கோடி மதிப்பீட்டில் புதிய பாலம் அமைக்கப்படும், சென்னை மாநகராட்சி பள்ளிகளில் தண்ணீர் ஒழுகாமல் இருக்க வாட்டர் ப்ரூப் திட்டம், சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு வண்ண அடையாள அட்டை, சென்னை பள்ளிகள் மறுசீரமைப்பு பணிக்கு ரூபாய் 25 கோடி ஒதுக்கீடு, சென்னையில் மகளிருக்கான உடற்பயிற்சிக்கூடம் அமைக்க ரூ.10 கோடி நிதி, சென்னையில் 200 வார்டுகளிலும் மகளிருக்கு பிரத்யேக உடற்பயிற்சிக்கூடம்" என முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.

இந்த அறிவிப்புகளை மேயர் வாசித்துக்கொண்டு இருந்தபோது மாநகராட்சி உறுப்பினர்கள் சிலர் அதை கவனிக்காமல் அருகருகே பேசிக்கொண்டும் சிலர் செல்போனில் பேசிக்கொண்டும் இருந்தனர். பத்திரிகையாளர்களின் கேமரா தங்களை நோக்கி படம் பிடிப்பதை பார்த்த ஒரு உறுப்பினர் உடனே போனை கட் செய்தார். மேலும் 2 உறுப்பினர்கள் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் செல்போன் பேசியபடி இருந்தனர்.
-
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார் -
நம்பர் 5.. அடித்து சொல்லும் சர்வேக்கள்! திமுக+ 180 இடங்களை தாண்டுகிறது! அதிமுக ஓவர்? முக்கிய கணிப்பு












Click it and Unblock the Notifications