வந்தது வீக் எண்டு.. கிளாம்பாக்கத்தில் நடக்கும் அதிரடி மாற்றம்! பேருந்து நிலையத்தில் சிறப்பு ஏற்பாடு
சென்னை: முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று சென்னை போக்குவரத்து கழக இயக்கம் மேலாண் இயக்குநர் அவர்கள் தகவல் வெளியிட்டுள்ளார்.
17/05/2024 (வெள்ளிக் கிழமை) 18/05/2024 (சனிக்கிழமை) மற்றும் 19/05/2024 (ஞாயிற்றுக் கிழமை) முகூர்த்தம் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி. கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி. நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி. கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 17/05/2024 (வெள்ளிக் கிழமை) அன்று 555 பேருந்துகளும் 18/05/2024 (சனிக்கிழமை) அன்று 645 பேருந்துகளும், 19/05/2024 (ஞாயிற்றுக் கிழமை) 280 பேருந்துகளும் கோயம்பேட்டிலிருந்து நாகை. வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 17/05/2024, 18/05/2024 மற்றும் 19/05/2024 ( வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை) அன்று 195 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சிறப்பு பேருந்துகள் விவரம்; எனவே, தினசரி இயக்க கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 17/05/2024 (வெள்ளிக் கிழமை) அன்று 555 பேருந்துகளும் 18/05/2024 (சனிக்கிழமை) அன்று 645 பேருந்துகளும், 19/05/2024 (ஞாயிற்றுக் கிழமை) 280 பேருந்துகளும் சென்னை கோயம்பேட்டிலிருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 17/05/2024 வெள்ளிக் கிழமை அன்று 65 பேருந்துகளும் 18/05/2024 சனிக்கிழமை அன்று 65 பேருந்துகளும் மற்றும் 19/05/2024 ஞாயிற்றுக் கிழமை அன்று 65 பேருந்துகளும்,
மேற்கூறிய இடங்களிலிருந்தும் மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப இடங்களிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
கிளாம்பாக்கம் சிக்கல்: கடந்த 30.12.2023 அன்று கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் திறந்து வைக்கப்பட்டது. சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் ஏற்படும் நெரிசலுக்கு தீர்வாக, தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் அரசுப் பேருந்துகளை பொது மக்களின் வசதிக்கேற்ப, 30.01.2024 முதல் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் கிளாம்பாக்கத்தில் இருந்து 90 சதவிகித அரசுப் பேருந்துகள் மற்றும் மாதவரம் பேருந்து முனையத்தில் இருந்து 10 சதவிகித அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
இங்கே பயணிகள் சாலையை கடக்க போதிய வசதி இல்லாததால் கடும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். இங்கே இருக்கும் சிக்னல் கூட 200 மீட்டர் தூரத்தில் உள்ளது. ஆனால் எதிர் திசையில் செல்லும் பேருந்துகள் சிக்னல் தாண்டி சரியாக பேருந்து நிலையத்திற்கு எதிரே வலதுபுறம் சாலையில் நிறுத்துகின்றன. இதனால் மக்கள் சிக்னல் வரை சென்று கிராஸ் செய்யாமல் இறக்கிவிடப்பட்ட இடத்தில் இருந்தே கிராஸ் செய்யும் நிலை உள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications