விட்டாச்சு லீவு! கோடை விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா? சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்
சென்னை: முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் இன்று முதல் 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளில் ஆண்டு இறுதித் தேர்வுகள் முடிந்துள்ளன. இதையடுத்து, பள்ளி மாணவர்களை தங்கள் சொந்த ஊர்களுக்கு, உறவினர் வீடுகளுக்கு அழைத்துச் சென்று விட்டு வருகிறார்கள் பெற்றோர்கள். இதனால் இந்த வாரம் அதிகமானோர் பேருந்துகளில் பயணிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விடுமுறை
அதோடு முகூர்த்த நாள் மற்றும் வார இறுதி விடுமுறை நாள் வருவதால் அதிகமானோர் பயணம் மேற்கொள்வார்கள் என்பதால் சென்னை கிளாம்பாக்கம் உட்பட பல்வேறு இடங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார்.
25/04/2025 (வெள்ளிக்கிழமை) முகூர்த்தம் 26/04/2025 (சனிக்கிழமை) மற்றும் 27/04/2025 (ஞாயிறுக் கிழமை) வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையில் இருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிறப்பு பேருந்துகள்
இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு 5 பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கிளாம்பாக்கம்
சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, 25/04/2025 (வெள்ளிக்கிழமை) அன்று 370 பேருந்துகளும், 26/04/2025 (சனிக்கிழமை) 450 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூர் ஆகிய இடங்களுக்கு 25/04/2025 வெள்ளிக் கிழமை அன்று 60 பேருந்துகளும் 26/04/2025 சனிக்கிழமை அன்று 60 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 250 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதவரத்தில் இருந்து 26/04/2025 அன்று 20 பேருந்துகளும் 26/04/2025 அன்று 20 பேருந்துகளும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
அதிகமான பயணிகள் முன்பதிவு
மேலும் ஞாயிற்றுக்கிழமை அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 7,970 பயணிகளும் சனிக்கிழமை 5,115 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 7,189 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூரப் பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்தச் சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் இப்தார் நோன்பில் திடீர் திருப்பம்: தேஜ கூட்டணி தலைவர்கள் செய்த "அந்த" காரியம்! திமுக குஷி -
முடங்கிய பணிகள்.. கிளாம்பாக்கம் மெட்ரோவிற்கு ‘பச்சைக்கொடி’ காட்டாத மத்திய அரசு.. எல்லாம் போச்சு -
அடுத்த 3 மணி நேரம்.. தேனி டூ குமரி வரை.. 10 மாவட்டங்களில் விட்டு விளாசப் போகுது மழை.. வானிலை அலர்ட் -
சென்னை தேர்தல் களத்தில் பிரியாணி கிடையாது? செலவினப் பட்டியலில் விடுபட்டதால் குழப்பம்! -
Gold Price Fall: ஈரான் போருக்கு மத்தியில்! தங்கம் விலை குறைய 5 முக்கிய காரணங்கள் என்னென்ன தெரியுமா? -
தண்ணீர் பாட்டில் 35, டிபன் 50, சென்னை வேட்பாளர்கள் எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு செலவு செய்யலாம் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
சென்னை விமான நிலையத்தில் போக்குவரத்து மாற்றம்.. ஸ்தம்பித்த ஜிஎஸ்டி சாலை.. வாகன ஓட்டிகள் கவனம் -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications