தாம்பரம், செங்கல்பட்டு மின்சார ரயில் பயணிகளின் கஷ்டம் தெய்வத்துக்கே கேட்டிருச்சு.. பல்லாவரமேவா.. செம்ம
சென்னை: தாம்பரம் ரயில் நிலையத்தில் 03.08.2024 முதல் 14.08.2024 வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் பல்லாவரம் பேருந்து நிலையத்தில் இருந்தும், கூடுவாஞ்சேரி பேருந்து நிலையத்தில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்ட அறிவிப்பில், மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் தற்போது இயக்கப்பட்டு வரும் பேருந்துகளுடன் கூடுதலாக பல்லாவரம் பேருந்து நிலையத்திலிருந்து செங்கல்பட்டுக்கு 30 பேருந்துகளும், பல்லாவரம் பேருந்து நிலையத்திலிருந்து கூடுவாஞ்சேரிக்கு 20 பேருந்துகளும், தாம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து தி.நகர் மற்றும் பிராட்வேக்கு 20 பேருந்துகள் என மொத்தம் கூடுதலாக 70 பேருந்துகள் பயணிகள் நலன் கருதி இயக்கப்பட உள்ளது .

தாம்பரம் ரயில் நிலையத்தில் 03.08.2024 முதல் 14.08.2024 வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், காலை 10.30 மணி முதல் பிற்பகல் 14.30 மணி வரையும் மற்றும் இரவு 22.00 மணி முதல் 23.59 வரை சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம்/செங்கல்பட்டு செல்லும் இரயில்கள் பல்லாவரம் இரயில் நிலையம் வரையும், செங்கல்பட்டிலிருந்து சென்னை கடற்கரை செல்லும் இரயில்கள் கூடுவாஞ்சேரி வரை மட்டுமே இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
எனவே, அவ்வழித்தடத்தில் பயணம் செய்யும் பயணிகள் நலன் கருதி 03.08.2024 முதல் 14.08.2024 வரை தற்போது இயக்கப்பட்டு வரும் பேருந்துகளுடன் கூடுதலாக பல்லாவரம் பேருந்து நிலையத்திலிருந்து செங்கல்பட்டுக்கு 30 பேருந்துகளும், பல்லாவரம் பேருந்து நிலையத்திலிருந்து கூடுவாஞ்சேரிக்கு 20 பேருந்துகளும், தாம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து தி.நகர் மற்றும் பிராட்வேக்கு 20 பேருந்துகள் என மொத்தம் கூடுதலாக 70 பேருந்துகள் மா.போ.கழகத்தின் சார்பில் இயக்கப்பட உள்ளது.
மேலும், காவல்துறையின் வேண்டுகோளின்படி தாம்பரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக, கூடுவாஞ்சேரி மார்க்கத்தில் செல்லும் அனைத்து பேருந்துகளும் இந்து மிஷன் மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் ஆகஸ்ட் 14-ஆம் தேதி முடிய தற்காலிகமாக நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட நாட்களில் முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்களை நியமித்து இப்பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது" இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
மின்சார ரயில் எப்படி : இன்று (சனிக்கிழமை) முதல் வரும் 14-ம் தேதி வரை சென்னை கடற்கரையிலிருந்து காலை 9.30, 9.45, 10, 10.15, 10.30, 10.45, 11, 11.15, 11.30, 11.45, மதியம் 12, 12.15, 12.30, 12.45, இரவு 10.40, 11.05, 11.30, 11.59 ஆகிய நேரங்களில் புறப்பட்டு செல்லும் சிறப்பு மின்சார ரயில் பல்லாவரம் வரை இயக்கப்படும். இதேபோல் பல்லாவரத்தில் இருந்து காலை 10.17, 10.32, 10.47, 11.02, 11.17, 11.32, 11.47 மதியம் 12.02, 12.17, 12.32, 12.47, 1.02, 1.17, 1.42 இரவு 11.30, 11.55 ஆகிய நேரங்களில் புறப்பட்டு வரும் சிறப்பு மின்சார ரயில் சென்னை கடற்கரை வரை இயக்கப்படும். இன்று (சனிக்கிழமை) முதல் வரும் 14-ம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து காலை 8.26, 8.39 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மகளிர் சிறப்பு மின்சார ரயில், அனைவரும் பயணிக்கும் மின்சார ரயிலாக இயக்கப்படும்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications