AAY, PHH ரேசன் கார்டில் பெயரை தூக்கிட்டாங்களா? மறக்காம ’இதை’ பண்ணுங்க! இன்னும் டைம் இருக்கு மக்களே!
ஏஏஒய்(AAY) மற்றும் பிஎச்ச்(PHH) பயனாளிகளின் குடும்ப அட்டைகளில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் தங்களது கைவிரல் ரேகையினை 31.03.2025 ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என கூறியிருந்த நிலையில், அதனை செய்யாதவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதோடு, சில லட்சம் ரேசன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ரேசன் கார்டில் நீக்கப்பட்ட பெயர்களை சேர்ப்பதற்கு ஒரு வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். அதாவது மார்ச் 31ஆம் தேதி வரையே இருந்த கால அவகாசம் ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கூட்டுறவுத் துறை மற்றும் உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறையின் கீழ் ரேஷன் கடைகள் இயக்கப்பட்டு வருகிறது, இதன் மூலம் அரிசி, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகின்றன.
தமிழகம் முழுவதும் சென்னை உள்ளிட்ட 38 மாவட்டங்களில் 34 ஆயிரத்து 792 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமார் 33,000 கடைகள் நேரடியாக கூட்டுறவு துறை மூலம் நடத்தப்படுகிறது.

ஒரு பகுதியில் ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கு குறைவாக உள்ள பகுதிகளில் 18,782 முழு நேர ரேஷன் கடைகளும், பகுதி நேரமாக 9388 ரேஷன் கடைகளும் இயங்கி வருகின்றன. ஆயிரத்திற்கு மேல் குடும்ப அட்டைகள் கொண்ட பகுதிகளில் முழு நேரமாக 4,352 ரேஷன் கடைகளும் செயல்படுகின்றன. இதன் மூலம் தமிழக முழுவதும் 2 கோடியே 23 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதன் மூலம் சுமார் 7 கோடி பயனாளிகள் பயன் பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தமிழகத்தில் பொதுவிநியோகத் திட்டத்தின்கீழ் செயல்படும் நியாய விலைக்கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் பெறும் ஏஏஒய் மற்றும் பிஎச்ச்( குடும்ப அட்டைகளில் உள்ள அனைத்து பயனாளிகள் தங்களது கைவிரல் ரேகை பதிவினை e-KYC (electronic Know Your Customer) சம்மந்தப்பட்ட நியாய விலைக் கடையில் 31.03.2025-க்குள் பதிவு செய்ய வேண்டும் என உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை இயக்குநர் அறிவித்தார்.
அதன்படி, ஏஏஒய்(AAY) மற்றும் பிஎச்ச்(PHH) பயனாளிகளின் குடும்ப அட்டைகளில் உள்ள அனைத்து உறுப்பினர்கள் தங்களது கைவிரல் ரேகையினை 31.03.2025 ஆம் தேதிக்குள் பதிவு செய்தனர். மக்கள் பொருட்கள் வாங்கும் ரேஷன் கடைகளிலேயே இந்த பணியானது நடைபெற்றறது. இந்த கால அவகாசம் 31ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், சில லட்சம் ரேசன் கார்டுகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டதாகவும், சிலரது பெயர்கள் நீக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது இ-கேஒய்சி செய்யாதவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தாலும் அல்லது ரேஷன் அட்டையில் பிற பணிகளை அதாவது பெயர் நீக்கம், சேர்த்தல் உள்ளிட்ட பணிகளை செய்ய தமிழ்நாடு அரசு சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. வருகின்ற சனிக்கிழமை சிறப்பு குறைதீர் முகாம் தமிழகம் முழுவதும் உள்ள வட்ட வழங்கல் அலுவலகங்களில் நடைபெற உள்ளது. அதாவது பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடும்ப அட்டைதாரர்கள் எளிதாக பெரும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை மக்கள் குறைதீர் முகாம் நடைபெறும்.
அதன்படி ஏப்ரல் 2025 மாதத்திற்கான குறைதீர் முகாம் சென்னையில் உள்ள19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களிலும், தமிழத்தின் பிற பகுதிகளில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகங்களில் காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெறும். இதில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு, மாற்றம் செய்த ஆகிய சேவைகளை செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ரேஷன் கார்டில் பெயர் சேர்க்கப்பட்ட ஒவ்வொரு உறுப்பினரும் மார்ச் 31ஆம் தேதிக்குள் ஆதார் எண் சேர்ப்பு மற்றும் விரல் ரேகை பதிவு செய்ய வேண்டும் என கூறப்பட்டிருந்தது. தற்போது இந்த கால அவகாசம் ஜூன் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது அதே நேரத்தில் ஜூலை ஒன்றாம் தேதி முதல் இகேஒய்சி சரிபார்க்கப்படாவிட்டால் ஜூலை ஒன்றாம் தேதி முதல் அவர்களது பெயர்கள் ரேஷன் கார்டில் இருந்து நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறிப்பிட்ட அந்த குடும்பத்திற்கோ அல்லது அந்த உறுப்பினருக்கு உணவு தானிய ஒதுக்கீடு மற்றும் பிற சேவைகள் நிறுத்தப்படும். தற்போது வரை இந்தியா முழுவதும் சுமார் ஒன்றரை கோடிக்கும் அதிகமான மக்கள் தங்கள் இகேஒய்சி சரிபார்ப்பை முடிக்கவில்லை எனவும், அதன் காரணமாகவே தற்போது இந்த கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்?












Click it and Unblock the Notifications