SIR.. திரண்டு வந்த 4,42,070 பேர்.. பக்காவாக காய் நகர்த்திய திமுக டீம்.. வீடு வீடாக செல்லும் தலைகள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் SIR நடவடிக்கைகளுக்கு பின்பாக வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கூறி 4,42,070 பேர் படிவம் 6/6A விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் திமுக வாக்குச்சாவடி பிரமுகர்கள் மூலம் விழிப்புணர்வு பெற்று அழைத்து வரப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியத் தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளின் கீழ், டிசம்பர் 19 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின் மீதான மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளைப் பெற நாடு முழுவதும் சிறப்பு முகாம்களை நடத்தி வருகிறது.

voting vote

டிசம்பர் 27, 2025 அன்று, சேலம் ஜாகீர் அம்மாபாளையம் வாக்குச்சாவடியில் நடந்த முகாம் இதற்கு ஓர் எடுத்துக்காட்டு. இம்முகாம்கள் டிசம்பர் 27, 28 மற்றும் 2026 ஜனவரி 3, 4 அன்றும் நடைபெறும்.

டிசம்பர் 19 முதல் டிசம்பர் 27 வரையிலான காலத்தில், வாக்காளர் சேர்க்கைக்காக 4,42,070 பேர் படிவம் 6/6A விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளனர். டிசம்பர் 27 அன்று மட்டும், தமிழ்நாடு முழுவதும் 2.56 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வாக்குச்சாவடிகளுக்குச் சென்று படிவம் 6 விண்ணப்பங்களை அளித்திருக்கின்றனர். இதில் பெரும்பாலானோர் திமுக வாக்குச்சாவடி பிரமுகர்கள் மூலம் விழிப்புணர்வு பெற்று அழைத்து வரப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு SIR

SIR பணிகளுக்கு பின் வரைவு வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள் பெயர்களை மீண்டும் சேர்க்க ஆளும் திமுக தீவிரமாக திட்டமிட்டு வருகிறதாம். இதற்காக தீவிரமாக திமுக காய் நகர்த்த திட்டமிட்டு வருகிறதாம்.

தமிழ்நாட்டில் மொத்தமாக 97,37,832 பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். தமிழ்நாட்டில் 15.18% பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் 5 கோடியே 43 லட்சத்து 76 ஆயிரத்து 775 வாக்காளர்கள் உள்ளனர். தமிழகத்தில் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 2 கோடியே 77 லட்சத்து 60 ஆயிரத்து 322 பேர் உள்ளனர்.

சென்னையில் அதிகம் நீக்கம்

தமிழ்நாட்டிலும் கடந்த ஒரு மாதமாக SIR பணிகள் மேற்கொள்ளப்பட்டன. SIR பணிகள் முடிந்துள்ள நிலையில், வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த வெள்ளிக்கிழமை மாவட்டம் வாரியாக வெளியிடப்பட்டது. தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மூலம் 97 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

முன்னதாக சார் பணிகளின் தேதி தமிழ்நாட்டில் இரண்டு முறை நீட்டிக்கப்பட்டது. கடந்த டிசம்பர் 14 வரை வாக்காளர்கள் தங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இந்தச் சூழலில் தான் கடந்த வெள்ளிக்கிழமை மாவட்ட வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

அதில் சென்னை மாவட்டத்தில் தான் அதிகபட்ச வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். சென்னை மாவட்டத்தில் 14,25,018 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். எஸ்.ஐ.ஆர் பணிகளுக்கு முன்பு சென்னையில் 40.04 லட்சம் வாக்காளர்கள் இருந்த நிலையில், சார் பணிகளில் 14.25 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். அதாவது சென்னையில் மட்டும் கிட்டத்தட்ட 35% நீக்கப்பட்டுள்ளனர்.

மூன்றில் ஒரு பகுதியினர் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. சென்னையில் மொத்தம் 14,25,018 பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அவர்களில் அதிகபட்சமாக 12,22,164 பேர் இடம் மாறியவர்கள் என்பதற்காக வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

சேர்க்கப்படும் வாக்காளர்கள்

இதற்கிடையில், தகுதியற்ற வாக்காளர்களை நீக்கக் கோரி 4,741 பேர் படிவம் 7ஐ சமர்ப்பித்துள்ளனர். டிசம்பர் 19 அன்று வெளியான வரைவுப் பட்டியலில், 6.41 கோடி வாக்காளர்களில் கிட்டத்தட்ட 97.37 லட்சம் பேர் நீக்கப்பட்டனர். இதன்மூலம் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 5.43 கோடியாகக் குறைந்துள்ளது.

தேர்தல் ஆணையத்தின் இந்த வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்கு ஆறு தேசிய மற்றும் ஆறு மாநிலக் கட்சிகளால் நியமிக்கப்பட்ட சுமார் 2.72 லட்சம் பூத் நிலை முகவர்கள் (BLA) உதவி வருகின்றனர்.

டிசம்பர் 27 நிலவரப்படி, திமுக மற்றும் அதிமுக பூத் நிலை முகவர்கள் வாக்காளர் சேர்க்கைக்கு தலா 24 விண்ணப்பங்களை அளித்தனர். நீக்கத்திற்காக அதிமுக 63 விண்ணப்பங்களையும், பாஜக ஒரு விண்ணப்பத்தையும் சமர்ப்பித்தன. இதுவரை, அந்தந்த சட்டமன்றத் தொகுதி வாக்காளர்களைத் தவிர, வேறு யாரும் சேர்க்கை அல்லது நீக்கத்திற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கவில்லை.

வாக்காளர் பட்டியலில் கூற்றுக்கள், ஆட்சேபனைகள் அல்லது திருத்தங்களைச் சமர்ப்பிக்க 2026 ஜனவரி 18 இறுதி நாள் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஸ்டாலின் பிளான்

SIR பணிகளுக்கு பின் வரைவு வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள் பெயர்களை மீண்டும் சேர்க்க ஆளும் திமுக தீவிரமாக திட்டமிட்டு வருகிறதாம். இதற்காக தீவிரமாக திமுக காய் நகர்த்த திட்டமிட்டு வருகிறதாம். விடுபட்டவர்கள் எல்லோரையும் மீண்டும் கண்டிப்பாக சேர்க்க வேண்டும் என்பதில் ஆளும் திமுக தீவிரமாக இருக்கிறதாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+