Exclusive: ஸ்டாலின் எளிமையான தலைவர்... செல்ஃபி எடுத்தது எப்படி..? விவரிக்கும் நடிகை யாஷிகா ஆனந்த்..!
சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு எளிமையான தலைவர் என புகழாரம் சூட்டுகிறார் நடிகை யாஷிகா ஆனந்த்.
Recommended Video
மக்களிடத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் அன்பு காட்டுவதாகவும் இவரைப் போல் மற்ற தலைவர்களும் எளிமையாக இருக்க வேண்டும் எனவும் கூறினார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் செல்ஃபி எடுத்தது குறித்து ஒன் இந்தியா தமிழிடம் பிரத்யேகமாக சில விவரங்களை பகிர்ந்துகொண்டார்.
அதன் விவரம் பின்வருமாறு;

சைக்கிளிங்
''சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் வார இறுதி நாட்கள் அல்லது ஓய்வு கிடைக்கும் நாட்களில் தோழிகளுடன் சைக்கிளிங் செல்வது வழக்கம். அந்த வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று எனது தோழிகளுடன் மாமல்லபுரத்திலிருந்து கோவளத்திற்கு சைக்கிளிங் செய்தேன். அப்போது பாதுகாப்பு படையினர் புடை சூழ முதலமைச்சர் சைக்கிளிங் செய்வதை பார்த்தோம்.''

எளிமை
''இதையடுத்து முதலமைச்சரை சந்திக்க விரும்பிய நானும் எனது தோழிகளும் அவருக்கு அருகே சென்று குட் மார்னிங் கூறினோம். எந்தவித பந்தாவும் இல்லாமல் எளிமையாக, கனிவாக பேசினார் . அப்போது ஸ்டாலினிடம் பேசிய எனது தோழி ஒருவர், தாம் முதல்முறை வாக்களித்ததாகவும் அதுவும் திமுகவுக்கு வாக்களித்த நிலையில் நீங்கள் வெற்றிபெற்றிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது எனவும் கூறினார்.''

செல்ஃபி
''முதலமைச்சர் ஸ்டாலின் இதை கேட்டுக்கொண்டார். பிறகு நாங்கள் உங்களுடன் புகைப்படம் எடுக்கலாமா எனக் கேட்டோம். அவருடன் வந்த சைக்கிளிஸ்ட்களில் ஒருவர் புகைப்படம் எடுத்தார். நான் முதல்முறையாக அப்போது தான் ஸ்டாலினை நேரில் பார்த்ததால், அவருடன் நானும் செல்ஃபி எடுத்துக்கொண்டேன்.''

அன்பு
''ஸ்டாலின் நினைத்திருந்தால் எங்களிடம் பேசாமல் கூட சென்றிருக்க முடியும். ஆனால் அவர் எல்லோரிடத்திலும் அன்பு காட்ட வேண்டும் என நினைக்கிறார். எங்களை சந்தித்ததை போலவே அவர் சைக்கிளிங் சென்ற வழியில் ஏராளமான பொதுமக்களையும் நின்று சந்தித்து பேசியதை பார்க்க முடிந்தது. இவரை போல் எல்லா தலைவர்களும் எளிமையாக இருந்தால் மக்கள் எளிதாக அணுக முடியும்.''
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications