இனி ஆண்டுதோறும் மகளிருக்கு ரூ.2000.. இன்னைக்கு அறிவிப்பு வெளியானது ஏன்? ஸ்டாலின் முக்கிய மூவ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோடைக்கால சிறப்பு நிதியாக இனி ஒவ்வொரு ஆண்டும் ரூ.2000 வழங்கப்படும் என அமைச்சர் கீதாஜீவன் சட்டப்பேரவையில் அறிவித்திருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர்தான் கோடைக்கால சிறப்பு நிதி அறிவிப்பு வெளியானது. அப்போதே ஆண்டு தோறும் இது நீட்டிக்கப்படும் என அறிவித்திருக்கலாம். இருப்பினும் இன்று தமிழக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டது ஏன்? இதற்கு பின்னால் முக்கிய காரணம் இருப்பதாக சொல்லப்படுகிறது.

இலவசங்களை தடுத்து நிறுத்த வேண்டும், குறிப்பாக தேர்தல் நேரத்தில் அறிவிக்கப்படும் இலவசங்கள் மற்றும் பண உதவி தொகைகள் போன்றவற்றை நிறுத்த வேண்டும் என்று பாஜக ஆதரவு வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார். இந்த வழக்கு மார்ச் மாதம் விசாரணைக்கு வருகிறது. விசாரணையில் மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட திட்டங்களையும் நிறுத்த உத்தரவு வர வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டு வந்தது.

Special Summer Allowance

நீதிமன்ற விசாரணை

ஆனால், மார்ச் மாதம் வரை காத்திருக்காமல், பணம் வழங்கும் திட்டங்கள் குறித்த கருத்தக்களை உச்சநீதிமன்றம் தற்போதே வெளியிட தொடங்கியுள்ளது. அதாவது மத்திய அரசின், 2024 மின்சார சட்டத் திருத்த விதிகளின் 23வது விதியை எதிர்த்து, தமிழ்நாடு மின் விநியோக நிறுவனத்தால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு, இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான நீதிபதிகள் ஜோய்மால்யா பக்ஷி மற்றும் விபுல் பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

இலவசங்கள் குறித்து விமர்சனம்

விசாரணையில், "கடைசியா தேர்தல்கள் நடந்த இடங்களில் என்ன நடந்தது என்பது எங்களுக்குத் தெரியும். தேர்தல் வரும்போது ஏன் திடீரென திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன? இலவசங்களை கொடுத்தால், அதை தொடர்ந்து செய்தால், நாட்டின் வளர்ச்சி தடுக்கப்படும்.

மாநிலங்கள் பற்றாக்குறையில் இயங்கிக்கொண்டிருந்தாலும், மக்களுக்கு பணத்தை விநியோகித்து வருவது கவலையளிக்கிறது. அந்தப் பணம் எங்கிருந்து வருகிறது? அது வளர்ச்சி நோக்கங்களுக்காக ஏன் பயன்படுத்தப்படக் கூடாது? சாலைகள், நீர்ப்பாசனம், மின்சாரம் என நீங்கள் விரும்பும் எதற்கும் நீண்டகாலத் திட்டம் வைத்திருக்கலாம்.

வங்கிக் கணக்கில் பணம்

மக்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும், அப்போதுதான் அவர்கள் சம்பாதித்து கண்ணியத்தையும் சுயமரியாதையையும் தக்க வைத்துக் கொள்ள முடியும். காலையிலிருந்து இலவச உணவு, இலவச எரிவாயு, இலவச மின்சாரம் வழங்க ஆரம்பித்தால்... நீங்கள் நேரடியாக வங்கிக் கணக்கில் பணத்தைப் பரிமாற்றம் செய்கிறீர்கள். அப்படியானால் மக்கள் ஏன் வேலை செய்ய வேண்டும்? ஒரு தளத்திலிருந்து அனைத்தையும் பெற முடியும் என்று தெரிந்தால், அவர்கள் எங்கிருந்து வேலை கற்றுக்கொள்ளப் போகிறார்கள்?" என கேள்வி எழுப்பியிருந்தது.

மகளிர் உரிமைத் தொகை

மகளிர் உரிமைத் தொகை போன்ற பணம் வழங்கும் திட்டங்களை குறித்துதான் நீதிமன்றம் இப்படியான கேள்விகளை எழுப்பியிருக்கிறது. ஆனால், மறுபுறம் மகளிர் உரிமைத் தொகை பெண்களுக்கான சமூக முன்னேற்றத்தில் ஆக்கப்பூர்வமாக பங்களித்திருக்கிறது என்பதை மறுத்துவிட முடியாது.

கிரமப்புறங்களில் இன்றும் தினசரி ரூ.250க்கு கூட வருமானம் கிடைக்காமல் பெண்கள் இருக்கின்றனர். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப, கட்டணம் செலுத்த, கல்விக்கு தேவையானவற்றை வாங்க, வீட்டு வாடகை, உணவு தேவை என இவற்றை சமாளிக்க ஏதோ ஒரு வகையில் ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை பயன்படுகிறது. மட்டுமல்லாது இந்த திட்டம் எல்லோருக்குமானது கிடையாது. சமானிய மக்களுக்கானதுதான்.

இதுதான் காரணமா?

இது குறித்து முன்னரே முதலமைச்சர் தெளிவாக கூறியிருந்தார். மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தடுக்க விடமாட்டேன் என்று கூறியிருந்தார். இப்படி இருக்கையில்தான் உச்சநீதிமன்றம் இலவசங்கள் குறித்து பேசியிருந்த இன்றைய தினம், தமிழக அரசு ஆண்டு தோறும் ரூ.2000 வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பு மூலம், மக்களுக்கான திட்டங்களை ஒருபோதும் தடுக்க முடியாது என்பதை தமிழக அரசு அழுத்தம் திருத்தமாக வெளிப்படுத்துகிறது என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

மறுபுறம் தமிழக எதிர்க்கட்சிகள், தேர்தல் நேரம் என்பதால்தான் கோடைக்கால சிறப்பு நிதி வழங்கப்படுகிறது என்று விமர்சித்திருந்தன. இத்தனை ஆண்டுகளாக கோடைக்காலமே வரவில்லையா? தேர்தல் நெருங்கும்போதுதான் இந்த யோசனை வருகிறதா? என்றெல்லாம் கேள்விகளை எழுப்பியிருந்தன. இனி ஆண்டு தோறும் சிறப்பு நிதி நீட்டிக்கப்படும் என அறிவித்திருப்பதன் மூலம், இந்த கேள்விகளுக்கு பதிலடியை திமுக கொடுத்திருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+