வீக் எண்டில் ஊருக்கு போறீங்களா? சென்னை - குமரிக்கு சிறப்பு ரயில்.. இன்ப அதிர்ச்சி தந்த ரயில்வே!
சென்னை: குடியரசு தினம், வார கடைசி மற்றும் முகூர்த்த நாட்கள் வருவதால் கூட்ட நெரிசலை குறைக்கும் விதமாக அரசு சார்பில் சிறப்பு ரயில்கள் மற்றும் சிறப்பு பஸ்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நாளை மற்றும் வரும் ஞாயிற்றுக்கிழமையில் சென்னையில் இருந்து குமரிக்கும், குமரியில் இருந்து சென்னைக்கும் சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் வசிக்கும் மக்கள் பண்டிகை மற்றும் விடுமுறை காலங்களில் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இதனால் விடுமுறை காலங்களில் ரயில், பஸ்களில் பயணிகள் கூட்டம் அலைமோதும். ரயில்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய உடனேயே காலியாகிவிடுகிறது.

அதே போல முக்கியமான நாட்களில் அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளிலும் டிக்கெட்டுகள் தீர்ந்து விடுகின்றன. தனியார் ஆம்னி பேருந்துகளிலும் விமான டிக்கெட் கட்டணத்திற்கு நிகராக கட்டணம் வசூலிப்பதால் பயணிகள் திண்டாடும் நிலை உள்ளது. இதனால் முக்கியமான பண்டிகை நாட்களில் சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்து வருகிறது.
அந்த வகையில் தற்போது குடியரசு தினம் மற்றும் முகூர்த்த தினங்கள் வருவதால் சொந்த ஊர்களுக்கு செல்ல மக்கள் திட்டமிட்டு இருக்கின்றனர். அதன்படி அதிகம் பேர் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டு வருவதால், பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னை எழும்பூரில் இருந்து கன்னியாகுமரிக்கும், கன்னியாக்குமரியில் இருந்து சென்னை தாம்பரத்துக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது என்றும், இதற்கான டிக்கெட் புக்கிங் விரைவில் தொடங்க இருப்பதாகவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
சென்னை - குமரி - சென்னை சிறப்பு ரயில்
இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- குடியரசு தினத்தை முன்னிட்டு ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் சென்னை எழும்பூரில் இருந்து கன்னியாகுமரிக்கும், கன்னியாக்குமரியில் இருந்து சென்னை தாம்பரத்துக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
சென்னை எழும்பூரில் இருந்து வண்டி எண் 06053 என்ற சென்னை எழும்பூர் - கன்னியாக்குமரி சூப்பர்பாஸ்ட் சிறப்பு ரயில் வரும் 24 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 10.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.00 மணிக்கு கன்னியாக்குமரியை அடையும்.
எத்தனை பெட்டிகள்?
இதேபோன்று மறுமார்க்கத்தில் கன்னியாக்குமரியில் இருந்து வண்டி எண் 06054 என்ற கன்னியாகுமரி - தாம்பரம் சூப்பர்பாஸ்ட் சிறப்பு ரயில் வரும் 26 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்னை தாம்பரத்தை சென்றடையும்.
ஏசி 2 டையர் கோச் - 1 பெட்டியும், ஏசு 3 டையர் கோச் - 5 பெட்டிகளும், ஸ்லீப்பர் கோச் - 8 பெட்டிகளும், ஒரு செகண்ட் கிளாஸ் கோச்சும், ஒரு லக்கேஜ் பெட்டிகளும் இந்த சிறப்பு ரயிலில் இருக்கும். எந்தெந்த ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று பார்க்கலாம.
நின்று செல்லும் இடங்கள்:
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து 24 ஆம் தேதி இரவு 10.40 மணிக்கு புறப்படும் இந்த ரயில் இரவு 11.08 மணிக்கு தாம்பரம் வந்தடையும், செங்கல்பட்டு 11.38, மேல்மருவத்தூர் 12.08, விழுப்புரம் 1.05, விருத்தாசலம் 01.50, அரியலூர் 2.32, ஸ்ரீரங்கம் 3.14, திருச்சி 3.45, திண்டுக்கல் 4.57, கொடைக்காணல் ரோடு 5.23, மதுரை 5.55, விருதுநகர் 6.45, சாத்தூர் 7.10, கோவில்பட்டி 7.38, வாஞ்சி மணியாச்சி 08.10, நெல்லை 8.40, வள்ளியூர் 09.22, நாகர்கோயில் 11.00, கன்னியாக்குமரி 12.00 மணிக்கு வந்து சேரும்.
மறுமார்க்கத்தில் வரும் 26 ஆம் தேதி கன்னியாக்குமரியில் இரவு 8.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில், நாகர்கோவில் 8.53, வள்ளியூர் 9.30, நெல்லை 10.30, வாஞ்சி மணியாச்சி 11.05, கோவில்பட்டி 11.35, சாத்தூர் 11.55, விருதுநகர் 12.18, மதுரை 1.10, கொடைக்காணல் ரோடு 1.55, திண்டுக்கல் 2.27, திருச்சி 3.20, ஸ்ரீரங்கம் 3.40, அரியலூர் 4.22, விருத்தாச்சலம் 5.00, விழுப்புரம் 5.55, மேல்மருவத்தூர் 7.03, செங்கல்பட்டு 7.38, தாம்பரத்தை காலை 8.30 மணிக்கு வந்து சேரும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு!












Click it and Unblock the Notifications