மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு! ஜூன் 21ஆம் தேதி சென்னை டூ நெல்லைக்கு சிறப்பு ரயில்!
சென்னை: மதுரையில் நடைபெறும், முருக பக்தர்கள் மாநாட்டிற்காக (Murugan Maanadu Madurai) சென்னையில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. வரும் 21 ஆம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு இந்த ரயில் புறப்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ் கடவுள் முருகனுக்கு உகந்தது கிருத்திகை நட்சத்திரமாகும். அவர் விசாக நட்சத்திரத்தில் பிறந்திருந்தாலும், தன்னை வளர்த்த கார்த்திகை பெண்களின் தாய்மையை போற்றும் விதமாக கார்த்திகை நாட்களில் விசேஷ நாளாகவும் அன்றும் மக்கள் வேண்டிக் கொண்டால் நல்லதே நடக்கும் என்பது ஐதீகம்.

அந்த வகையில் வரும் 22 ஆம் தேதி கிருத்திகை நாளன்று மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாட்டிற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார். இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.
இந்த மாநாட்டில் அரசியல் பேசப்படாது என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இந்த மாநாட்டில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.
நடிகர் ரஜினிகாந்திற்கும் இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. அவரும் கலந்து கொள்வதாக தெரிவித்துள்ளார். அவர் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டவர் என்பதால் அவர் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது என்கிறார்கள்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோருக்கும் அழைப்பிதழ்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இவர்களும் பங்கேற்க அதிக வாய்ப்புகள் உள்ளன.
இந்த நிலையில் முருக பக்தர்கள் மாநாட்டிற்காக சென்னையில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. வரும் 21 ஆம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
அது போல் மறுமார்க்கமாக 22 ஆம் தேதி நெல்லையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அறுபடை வீடுகள் உள்பட தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களா சீரமைக்க வலியுறுத்தியும் முருக பக்தர்களை ஒன்று திரட்டவும் குன்றம் காக்க, கோயிலை காக்க என்ற பெயரில் மாநாடு நடக்கிறது.
இதில் பங்கேற்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான முருக பக்தர்கள் ஒன்று திரள்வார்கள் என தெரிகிறது. அவர்களின் வசதிக்காக அறுபடை வீடுகளை இணைக்கும் வகையில் சிறப்பு ரயில்களை இயக்க பக்தர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
அறுபடை வீடுகளில், மதுரை மாவட்டத்தில் திருப்பரங்குன்றம், சோலைமலை, திண்டுக்கல்லில் பழநி, துாத்துக்குடியில் திருச்செந்துார், தஞ்சாவூரில் சுவாமிமலை, திருவள்ளூரில் திருத்தணி உள்ளன. இந்த வழித்தடங்களில் செல்லும் வகையில் ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications