சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள்.. திருவண்ணாமலை தீபத்திருவிழாவை காண சூப்பர் ஏற்பாடு.. முழுவிபரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருவண்ணாமலை தீபத்திருவிழா தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் பொதுமக்கள் வசதிக்காக சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கும், திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கும் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

திருவண்ணாமலையில் புகழ்பெற்ற அருணாச்சலேஸ்வரர் கோவில் உள்ளது. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக இது உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இதில் மிகவும் பிரசித்தி பெற்றது என்பது திருக்கார்த்திகை தீப திருவிழாவாகும். கார்த்திகை மாதத்தில் இந்த விழா ஆண்டுதோறும் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கமாகும்.

கார்த்திகை தீபத்திருவிழா

கார்த்திகை தீபத்திருவிழா

அதன்படி இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 27 ம் தேதி கொடியேற்றுடன் துவங்கியது. வேதமந்திரங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் கோவிலில் உள்ள 67 அடி உயர தங்க கொடிமரத்தில் கொடியை ஏற்றினர். இதன்மூலம் 10 நாள் கார்த்திகை தீபத்திருவிழா தொடங்கியது. ஒவ்வொரு நாளும் காலையில் சந்திரசேகரர் மாலையில் விநாயகர், முருகர், அண்ணாமலையார் உண்ணாமலையம்மன், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகள் திருக்கோயிலின் ஐந்தாம் பிரகாரத்தை சுற்றி வலம் வருகிறார்கள்.

பரணி தீபம்

பரணி தீபம்

மேலும் ஒவ்வொரு நாளும் விசேஷ பூஜைகள், நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. 5ம் நாளான இன்று வெள்ளி தேரோட்டம் நடைபெற உள்ளது. மேலும் கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக பரணி தீபம்‌ , அண்ணாமலையார்‌ தீபம்‌ (மகா தீபம்‌) விஷ்ணு தீபம்‌, உள்ளிட்ட 5 தீபங்கள் ஏற்றப்படும். இது டிசம்பர் 6ல் நடக்கிறது. அன்று அதிகாலை‌ பரணி தீபம்‌ அண்ணாமலையார்‌ கருவறையில்‌ ஏற்றப்பட்டு, பின்னர்‌ அர்த்த மண்டபத்தில்‌ ஐந்து தீபங்களாக காட்டப்படும்‌.

மலையில் மகாதீபம்

மலையில் மகாதீபம்

அதைதொடர்ந்து அன்று மாலை 6 மணிக்கு, சிவனே மலையாக காட்சி தரும் 2,668 அடி உயர மலை உச்சியின் மீது மகா தீபம் ஏற்றப்படும். மலை உச்சியில் 5 அடி உயரம், 250 கிலோ எடை கொண்ட கொப்பரையில் 3500 லிட்டர் நெய் மற்றும் ஆயிரம் மீட்டர் காடா துணிகள் பயன்படுத்தப்பட்டு மகாதீபம் ஏற்றப்படும். இதனை காண தமிழகம் உள்பட பிற மாநிலங்களில் இருந்தும் ஆண்டுதோறும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள்.

சிறப்பு ரயில்கள் இயக்கம்

சிறப்பு ரயில்கள் இயக்கம்

இந்நிலையில் பக்தர்களின் வசதிக்காக தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து திருவண்ணாமலைக்கு கூடுதலாக பஸ்கள் இயக்கப்பட உள்ளன. மேலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. அதன்படி சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னை கடற்கரை மற்றும் சென்னை தாம்பரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

சென்னை கடற்கரையில் இருந்து..

சென்னை கடற்கரையில் இருந்து..

அதன்படி டிசம்பர் 5, 6, 7 ஆகிய தேதிகளில் இருந்து சென்னை கடற்கரையில் இருந்து காலை 6 மணிக்கு சிறப்பு ரயில் புறப்பட்டு திருவண்ணாமலை செல்ல உள்ளது. மறுமார்க்கமாக வரும் 6, 7, 8 ஆகிய தேதிகளில் திருவண்ணாமலையில் இருந்து காலை 3.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் சென்னை கடற்கரைக்கு வரும்.

தாம்பரத்தில் இருந்து சிறப்பு ரயில்

தாம்பரத்தில் இருந்து சிறப்பு ரயில்

மேலும் டிசம்பர் 6, 7 ஆகிய தேதிகளில் தாம்பரத்தில் இருந்து காலை 8.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் திருவண்ணாமலை நோக்கி செல்லும். அதேபோல் டிசம்பர் 6, 7 ஆகிய தினங்களில் திருவண்ணாமலையில் இருந்து மதியம் 1.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் தாம்பரம் நோக்கி செல்ல உள்ளது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+