கட்டுக்கடங்காத டிராபிக்.. தாம்பரம் தாண்டி சென்னை உள்ளே வர சிறப்பு வசதி.. உடனே இதை நோட் பண்ணுங்க
சென்னை: சென்னை உள்ளே வரும் பயணிகளின் வசதிக்காக இன்று காட்டாங்குளத்தூர் - தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. 30 நிமிட இடைவெளியில் 9 சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படும், என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை நாடு முழுக்க லோக்சபா தேர்தல் திருவிழா பிரம்மாண்டமாக தொடங்கியது. கடந்த 2019ம் ஆண்டை போலவே இந்த முறையும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை 2024 மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்தது. தமிழ்நாட்டின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்தது. தமிழ்நாட்டில் மொத்தம் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நாடு முழுவதும் 21 மாநிலங்களில் உள்ள 102 லோக்சபா தொகுதிகளுக்கு முதற்கட்டமாக தேர்தல் நடந்தது.

மொத்தமுள்ள 534 லோக்சபா தொகுதிகளில் 102 தொகுதிகளுக்கு முதல் கட்டத் தேர்தல் நடந்தது. தமிழகத்தில் உள்ள 39 லோக்சபா தொகுதிகளில் பதிவான ஓட்டு சதவீதத்தை 3வது முறையாக இந்திய தேர்தல் ஆணையம் மாற்றி கூறியுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் மொத்தம் 69.71 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதோடு, தொகுதி வாரியாக பதிவான ஓட்டு சதவீதம் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
கடுமையான நெரிசல்: தேர்தல் விடுமுறை முடிந்ததால் தென்மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வரும் மக்கள் காரணமாக சென்னையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது. திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது.
சென்னை உள்ளே வரும் பயணிகளின் வசதிக்காக இன்று காட்டாங்குளத்தூர் - தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. சென்னை உள்ளே வரும் ரூட்டில் எல்லாம் கடுமையான நெரிசல் ஏற்பட்டு உள்ளது. இதனால் தாம்பரம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது.
சென்னை உள்ளே வரும் பயணிகளின் வசதிக்காக இன்று காட்டாங்குளத்தூர் - தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. முக்கியமாக கிளாம்பாக்கம் பயணிகள் வசதிக்காக இன்று காட்டாங்குளத்தூர் - தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.
பொதுவாக விடுமுறைக்கு பின் வார தொடக்கத்தில் சென்னையின் நுழைவாயில்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, பேருந்துகளின் தேவை அதிகரிக்கும். அதிக நெரிசலில் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும். சமயங்களில் போதிய பேருந்துகள் இல்லாத காரணத்தால் மக்கள் கஷ்டப்படும் அவலமும் ஏற்படும். இந்த நிலையில்தான் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக கிளாம்பாக்கம் பயணிகள் வசதிக்காக இன்று காட்டாங்குளத்தூர் - தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் எற்படும் கூட்ட நெரிசலை குறைக்கும் விதமாக தாம்பரம் - காட்டாங்குளத்தூர் இடையே சிறப்பு மின்சார ரயில் நாளை இயக்கப்பட உள்ளது. அந்த வகையில், தாம்பரத்தில் இருந்து காட்டாங்குளத்தூருக்கு காலை 4 மணி முதல் 9.30 மணி வரையிலும், காட்டாங்குளத்தூரில் இருந்து தாம்பரத்திற்கு காலை 4.40 மணியில் இருந்து 10.05 மணி வரையிலும் 30 நிமிட இடைவெளியில் 9 சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படும், என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications