ஆம் அந்த சென்னை ரயில் தான்.. வேகமும் நேரமும் அடியோடு மாறுது.. தென்மாவட்ட மக்களுக்கு ஹேப்பி நியூஸ்
சென்னை: சென்னை எழும்பூர் - கொல்லம் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் அதிவேக எக்ஸ்பிரஸ் ரயிலாக வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் மாற்றப்படுவதால் பயண நேரம் கணிசமாக குறையப்போகிறது.
சென்னையில் இருந்து தென்மாவட்டங்கள் வழியாக செல்லும் ரயில்களில் மிக முக்கியமானது அனந்தபுரி விரைவு ரயில், இந்த ரயில் தமிழகத்தின் சென்னை தொடங்கி, கடைக்கோடியான நாகர்கோவில் வரை செல்கிறது. அங்கிருந்து கேரளாவில் நுழைந்து கொல்லத்திற்கு செல்கிறது. இந்த ரயிலில் எப்போதுமே கூட்டம் அதிகமாக இருக்கும்.

அனந்தபுரி விரைவு ரயில் திருநெல்வேலி, நாகர்கோவில், கேரளாவில் கொல்லம் ஆகிய மாவட்டங்களுக்கு முக்கியமான ரயிலாக உள்ளது. இந்த ரயிலில் இரவில் பயணித்தால் காலையில் நாகர்கோவில் செல்ல முடியும். தென்மாவட்டத்தினர் தினமும் கேரளா செல்லவும், கேரளாவைச் சேர்ந்தவர்கள் தமிழகம் வரவும் இணைப்பு பாலமாக அனந்தபுரி உள்ளது.
இந்நிலையில் சென்னை எழும்பூர் - கொல்லம் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலின் வேகத்தை அதிகரிதது, அதனை அதிவிரைவு ரயிலாக மாற்றி தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது. அத்துடன் அனந்தபுரி ரயிலின் நேர அட்டவணையும் மாறி உள்ளது. அக்டோபர் 1ம் தேதி முதல் அனந்தபுரி ரயில் எப்படி இயங்கும் என்பது குறித்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதனை இப்போது பார்ப்போம்.
இதுபற்றி தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: "சென்னை எழும்பூரில் இருந்து கேரள மாநிலம் கொல்லத்துக்கு செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்.16823/16824) வருகிற அக்டோபர் 1-ந்தேதி முதல் அதிவேக எக்ஸ்பிரஸ் ரெயிலாகவும் மற்றும் வண்டி எண்களும் மாற்றப்படுகிறது. இந்த ரயில் (20635) எழும்பூரில் இருந்து இரவு 8.10 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 20 நிமிடத்துக்கு முன்னதாக இரவு 7.50 மணிக்கும் புறப்படும்.

தாம்பரத்துக்கு 8.18 மணிக்கும், செங்கல்பட்டுக்கு 8.48 மணிக்கும், விழுப்புரத்துக்கு 10.28 மணிக்கும், திருச்சிக்கு நள்ளிரவு 1.05 மணிக்கும், திண்டுக்கல்லுக்கு அதிகாலை 2.17 மணிக்கும், மதுரைக்கு அதிகாலை 3.20 மணிக்கும், விருதுநகருக்கு அதிகாலை 4.10 மணிக்கும், திருநெல்வேலிக்கு காலை 6.05 மணிக்கும், நாகர்கோவிலுக்கு 7.40 மணிக்கும், கொல்லத்துக்கு காலை 11.15 மணிக்கும் சென்றடையும்.
அதே ரயில் மறுமார்க்கமாக கொல்லத்தில் இருந்து (20636) மதியம் 3.40 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 50 நிமிடம் முன்னதாக மதியம் 2.50 மணிக்கு சென்னை எழும்பூர் நோக்கி இயக்கப்படும், இந்த ரயில் அடுத்தநாள் காலை 6.05 மணிக்கு வந்தடையும்" இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications