இனி ரயில்கள் பறக்க போகுது.. சட்டென உயர்த்தப்பட்ட ரயில்களின் வேகம்.. தமிழ்நாட்டிற்கு குட் நியூஸ்
சென்னை: இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டு உள்ளதாக மத்திய ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
சரக்கு ரயில்களின் சராசரி வேகம் மணிக்கு 23.6 கிமீ ஆக உள்ளது. இந்த வேகத்தில் எந்த மாற்றமும் இருக்காது. தொடர்ந்து இதே வேகம் நீடிக்கும்.

அதேபோல் அதிவேக பயணிகள் ரயில்கள் 50 கிமீ வேகத்தில் இருந்து 52 கிமீ வேகமாக உயர்த்தப்பட்டு உள்ளது. சாதாரண ரயில்கள் 32 கிமீ வேகத்தில் இருந்து 35 கிமீ வேகத்திற்கு மாறி உள்ளது.
நாடு முழுக்க உயர்த்த திட்டம்: நாடு முழுவதும் உள்ள 53 முக்கிய வழித்தடங்களின் பிரிவு வேகத்தை மணிக்கு 130 கிமீ ஆக உயர்த்த ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. தெற்கு ரயில்வேயில், சென்னை எழும்பூர்-மதுரை மற்றும் திருவனந்தபுரம் சென்ட்ரல்-கோழிக்கோடு ஆகியவை மார்ச் 2024க்குள் வேகத்தை மேம்படுத்துவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட சில வழித்தடங்களில் அடங்கும்.
திருச்சி மதுரை: பயண நேரத்தைக் குறைப்பதற்கும், செயல்திறனை அதிகரிப்பதற்கும், அகலப் பாதைகளில் குறைந்தபட்சம் 130 கிமீ வேகத்திற்கு ரயிலின் வேகத்தை அதிகரிக்க ரயில்வே முடிவு செய்துள்ளது. முக்கியமாக சென்னை திருச்சி மதுரை சேலம் உள்பட ஆறு கோட்டங்களில் ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட உள்ளது.
பாதைகள் என்னென்ன: சென்னை சென்ட்ரல் - கூடூர் ரயிலின் வேகம் அதிகரிக்கப்பட உள்ளது. மேலும் சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் ஜோலார்பேட்டை ரயிலின் வேகம் அதிகரிக்கப்பட உள்ளது. சென்னை சென்ட்ரல் - ரேணிகுண்டா ரயிலின் வேகம் அதிகரிக்கப்பட உள்ளது. இந்த வழித்தடத்தில் மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
இதனால் மக்கள் பயணம் செய்யும் நேரம் குறையும். பெரும்பாலான தங்க நாற்கர வழிகளில் வேகம் ஏற்கனவே 130 கிமீ வேகத்தில் அதிகரிக்கப்பட்டுள்ளது. ரயில்வே துறை தற்போது பல்வேறு மண்டலங்களில் 53 வழித்தடங்களை தேர்வு செய்து, இந்த நிதியாண்டின் இறுதிக்குள் 130 கிமீ வேகத்தை எட்டுவதற்கான உள்கட்டமைப்பை மேம்படுத்துமாறு அந்தந்த பொது மேலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.
எங்கெல்லாம் அதிகரிக்கும்: தெற்கு ரயில்வே/தென்மேற்கு ரயில்வேயில், பின்வரும் வழித்தடங்களில் வேகம் மணிக்கு 130 கிமீ ஆக அதிகரிக்கப்படும் -- அரக்கோணம்-மைசூர் (436 கிமீ), திருவனந்தபுரம் சென்ட்ரல்-கோழிக்கோடு (400 கிமீ), சென்னை எழும்பூர்-மதுரை (496 கிமீ), ஜோலார்பேட்டை-பெங்களூரு. (148 கிமீ), பெங்களூரு-மைசூரு (138 கிமீ), கண்ணூர்-கோழிக்கோடு (89 கிமீ), திருவனந்தபுரம்-மதுரை (301 கிமீ) மற்றும் ஜோலார்பேட்டை-கோவை (289 கிமீ).
கவனம் பெறும் வந்தே பாரத்: வந்தே பாரத் ரயில் மக்கள் இடையே அதிக கவனம் பெற்றுள்ளது. இந்தியாவில் வந்தே பாரத் ரயில் அதிக கவனத்திற்கு உள்ளாகி வருகிறது. இந்த ரயிலை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன் சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி திறந்து வைத்தார். சென்னை முதல் பெங்களூர் வழியாக மைசூர் வரை ஏற்கனவே வந்தே பாரத் சேவை உள்ளது. முதல்முறையாக தமிழ்நாடு உள்ளேயே வந்தே பாரத் ரயில் சென்னை - கோவை இடையே திறக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 6 மணி நேரத்தில் கோவை செல்ல முடியும்.
வந்தே பாரத் சேவைகள்: தமிழ்நாட்டிற்கு அடுத்தடுத்து வந்தே பாரத் சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் ஏற்கனவே ஒரு உள் மாநில வந்தே பாரத் சேவை உள்ளது. அதாவது சென்னை - கோவை இடையே உள்ளது. மாநிலத்திற்கு வெளியே ஒரு வந்தே பாரத் சேவை உள்ளது. சென்னை - பெங்களூர் - மைசூர் வரை உள்ளது. இது போக மாநிலத்திற்கு உள்ளே மேலும் ஒரு சேவை தொடங்கப்பட உள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications