"போலியோ மாடல்".. ஸ்பாட் ரிஜிஸ்டிரேஷன்.. வேக்சின் போடுவதில் அசத்தும் தமிழக அரசு.. குட்நியூஸ்!
சென்னை: தமிழகத்தில் கொரோனா வேக்சின் கொடுக்கும் பணிகள் மிக வேகமாக நடந்து கொண்டு இருக்கிறது. மற்ற மாநிலங்களை விட தற்போது வேக்சின் கொடுப்பதில் தமிழக அரசு துரிதம் காட்ட தொடங்கி உள்ளது.
Recommended Video
தமிழகத்தில் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வரும் நிலையில் வேக்சின் கொடுப்பது மட்டுமே, கொரோனா பரவலை தடுக்கும் ஒரே தீர்வாக உள்ளது. கொரோனா வேக்சின் கொடுப்பது மட்டுமே இரண்டாம் அலை பரவலை தடுத்து, மூன்றாம் அலை ஏற்படாமல் தடுக்கும்.
ஆனால் அதிமுகவின் முந்தைய ஆட்சியில் தமிழகத்தில் சரியாக வேக்சின் போடப்படவில்லை. அதோடு வாங்கப்பட்ட வேக்சின்கள் 6 சதவிகிதம் வரை வேஸ்ட் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசு
இந்த நிலையில் தற்போது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்தே வேக்சின் அளிப்பதை வேகப்படுத்தி வருகிறது. ஆட்சிக்கு வந்த முதல் வாரம் வேக்சின் கொடுப்பதில் கொஞ்சம் சுணக்கம் இருந்தாலும், போக போக தினமும் போடும் வேக்சின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டது. ஆனாலும் கோவின் ஆப் லாக்இன் உள்ளிட்ட பல விஷயங்களால் மக்களால் சரியாக வேக்சின் போட முடியவில்லை.

சிக்கல்
அதோடு 18+ வயது உள்ளவர்களுக்கும் வேக்சின் போடப்படாமல் இருந்தது. இதையடுத்துதான் தமிழக அரசு இரண்டு முக்கிய நடவடிக்கைகளை எடுத்தது. அதன்படி 18+ வயது கொண்ட எல்லோருக்கும் வேக்சின் போடப்படும் என்று அறிவித்தது. அதன்பின் கோவின் ஆப் ரிஜிஸ்டிரேஷன் இல்லாமலே வேக்சின் போடலாம் என்று தமிழக அரசு அறிவித்தது.

மத்திய அரசு
மத்திய அரசின் கோவின் ஆப் லாக்இன் செய்வதே பெரிய போராட்டமாக உள்ள நிலையில், தமிழக அரசு முகாம்களிலேயே பதிவு செய்து வேக்சின் போடும் நடைமுறையை கொண்டு வந்தது. அதோடு தமிழகம் முழுக்க வேக்சின் முகாம்கள் போடப்பட்டது. தமிழகம் முழுக்க ஒவ்வொரு நகரங்களிலும் பல வேக்சின் கேம்ப் போடப்பட்டு, மக்களுக்கு வேக்சின் எளிதாக கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

எப்படி
முக்கியமாக சென்னையில் அடுக்குமாடி குடியிருப்புகளில் மொத்தமாக வேக்சின் போடப்பட்டது. உதாரணமாக மன்னார்குடி போன்ற சின்ன நகரங்களில் கூட 5-6 இடங்களில் வேக்சின் முகாம்கள் போடப்படுகின்றன. கிட்டத்தட்ட போலியோவிற்கு எதிராக எப்படி தமிழகம் சொட்டு மருந்து போடப்பட்டு, போலியோ ஒழிக்கப்பட்டதோ அதேபோல்தான் தற்போது வேக்சின் போடப்பட்டு வருகிறது. போலியோ மாடல் விழிப்புணர்வுதான் தற்போது ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

போலியோ
போலியோ சொட்டு மருந்து போடுவது கிட்டத்தட்ட மக்கள் இயக்கம் போல நடத்தப்பட்டது. அதற்கு இணையாக தற்போது தமிழகத்தில் வேக்சின் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று முதல்வர் ஸ்டாலின் கூட வேக்சின் போடுவதை மக்கள் இயக்கமாக மாற்ற போகிறேன் என்று தெரிவித்து இருந்தார். அவர் சொன்னது போலவே ஒவ்வொரு மாவட்டத்திலும் எம்எல்ஏக்கள் மூலம் வேக்சின் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. வீட்டுக்கு அருகிலேயே நேரடியாக மக்களே கேம்ப்களுக்கு சென்று வேக்சின் போடும் வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது.

வேக்சின்
ஸ்பாட் ரிஜிஸ்டிரேஷன், வீட்டுக்கு அருகிலேயே முகாம் என்று பல காரணங்களால் வேக்சின் போடுவது ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் தினமும் 2 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு வேக்சின் போடப்படுகிறது. தென்னிந்தியாவில் இது மிக அதிகம். இதே வேகத்தில் சென்றால், இந்த வருட இறுதிக்குள் 3-4 கோடி பேருக்கு தமிழகத்தில் வேக்சின் போட முடியும்.

சாதனை
கடந்த சில நாட்களாக வேக்சின் போடப்பட்ட விவரம்
மே 19 = 29,338
மே 20 = 30,553
மே 21 = 32,645
மே 22 = 41,689
மே 23 = 55.655
மே 24 = 93,926
மே 25 = 2,24,543
மே 26 = 2,58,583
இந்த வேகம் வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கப்படும் என்று கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications