ஸ்ரீலீலா வீட்டில் விசேஷம்..நலங்கு வைத்த உறவுகள்! தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் சொந்தம்! கல்யாணமா?
சென்னை: இன்று தனக்கு மிக முக்கிய நாள் என நடிகை ஸ்ரீலீலா சில புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருக்கிறார். நலங்கு வைப்பது போல் அந்த புகைப்படங்கள் இருப்பதால் அவருக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வரலாம் என கமெண்ட் செய்து வருகின்றனர் ரசிகர்கள். சிலரோ வழக்கம் போல் இது ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட படங்களாக இருக்கலாம் என்கின்றனர்.
தெலுங்கு மட்டுமல்லாது தமிழ், கன்னடம் என தென் இந்திய திரையுலகில் தற்போதைக்கு ஸ்ரீலீலா தான் ஹாட் டாபிக். குண்டூர் காரம் படத்தில் அவரது நடனம் வெகுவாக பேசப்பட்ட நிலையில் பல படங்களில் அவர் நடிக்க கூட வேண்டாம் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினால் போதும் என்ற அளவுக்கு ஆகிவிட்டது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான அல்லு அர்ஜுனின் புஷ்பா - 2 படத்தில் அவர் நடனமாடியது ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் என பழ மொழிகளில் ஸ்ரீலீலா நடித்து வருகிறார்.

அந்த வகையில் வெங்கி குடுமலா இயக்கத்தில் நிதினுக்கு ஜோடியாக ராபின்ஹூட் என்ற படத்தில் ஸ்ரீலிலா நடித்திருந்தார். ராஜேந்திர பிரசாத், ஷைன் டேம் சாக்கோ, வெண்ணெய்லா கிஷோர், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படம் கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது தமிழில் பராசக்தி படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். 2019 ஆம் ஆண்டு கன்னட திரைப்படத்தில் அறிமுகமானாலும் தெலுங்கில் தான் பிரபலம்.
முன்னர் வெளியான பகவத் கேசரி, குண்டூர் காரம் ஆகிய படங்கள் பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது அதிக பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது, அமெரிக்காவில் பிறந்தாலும் பெங்களூருவில் வளர்ந்த ஸ்ரீலிலா மருத்துவப் படிப்பை முடித்தவர் என்பது பலருக்கும் தெரியாது, அதே நேரத்தில் நடனம் மற்றும் நடிப்பின் மீது அதிக ஆர்வம் இருந்ததால் தற்போது திரைத்துறையில் காலடி பதித்து வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இன்னும் திருமணம் ஆகா விட்டாலும் மூன்று குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார் ஸ்ரீலீலா. இந்த நிலையில் ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரீலாலா தனக்கு நலங்கு வைப்பது போலவும் மணக் கோலத்தில் இருக்கும் சில புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார். மணப்பெண் போலவே அலங்காரத்தோடு இருக்கும்ஸ்ரீலீலாவுக்கு சிலர் கன்னங்களில் மஞ்சள் தடவி ஆசீர்வதிப்பது போலவும் அந்த புகைப்படங்கள் இருக்கிறது.
இன்று எனக்கு மிகப்பெரிய நாள் விரைவில் முழு விவரங்களை நான் உங்களுக்குச் சொல்கிறேன் மீண்டும் விரைவில் வருவேன் என ஸ்ரீலீலா பதிவிட்டு இருக்கிறார். இதனால்ஸ்ரீலீலாவுக்கு திருமணமா? நலங்கு வைத்த புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறாரா? அல்லது நிச்சயதார்த்தம் நடைபெற்றதா? என ரசிகர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர். சிலரோ இது திருமண நிகழ்ச்சி இல்லை சூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார் எனவும் கூறி வருகின்றனர். எது எப்படியோ ஸ்ரீலீலா சந்தோசமாக இருந்தால் தங்களுக்கும் சந்தோசம் தான் எனவும் அவரது ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications