காவ்யா... இவங்க தான் இப்போ நெட்டிசன்சோட லேட்டஸ்ட் க்ரஷ்!
சென்னை: சமீப நாட்களாக இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறார் காவ்யா மாறன்.
மாறன் என்ற பெயரை கேட்டவுடன் கண்டிப்பாக சன் டிவி குழுமம் தான் நம் நினைவுக்கு வரும். ஆம்..சரிதான் சன் குழும நிறுவனர் கலாநிதி மாறனின் மகள் தான் இந்த காவ்யா மாறன்.
ஐபிஎல் போட்டிகளில் பங்கு பெரும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் நிர்வாக இயக்குனர் இவர். சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பங்கு பெரும் அனைத்து ஐபிஎல் போட்டிகளிலும் இவரை பார்க்க முடிகிறது.

அப்பாவுடன் போட்டிகளில்
தன்னுடைய அப்பாவான கலாநிதி மாறனுடன் ஐபிஎல் போட்டிகளை கண்டு களித்து வருகிறார். அவ்வப்போது விழும் பவுண்ட்ரிகளுக்கும், சிக்ஸர்களுக்கும் இவர் எழுந்து நின்று கை தட்டியும் தங்கள் அணியின் கொடியை அசைத்தும் வீரர்களை உற்சாகப்படுத்தும் விதம் மிகவும் க்யூட்.

கம்பீர அழகு
அவருடைய அணியின் யூனிஃபார்மாகிய ஆரஞ்சு ஜெர்சியில் ஆளும் க்யூட்டாக உள்ளார். அதனால் தானோ என்னவோ இவரை கேமராவும் ஃபோகஸ் செய்ய தவறுவதே இல்லை. அதே போல் ஒவ்வொரு ஐபிஎல் ஏலத்தின் போதும் போட்டிகளின் போதும் நெட்டிசன்களும் இவரை கவனிக்க தவறியதில்லை.

இளமையிலேயே திறமை
இவர் 1992 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதி பிறந்தார். 25 வயதான இவருக்கு கிரிக்கெட் விளையாட்டின் மீது அலாதி ப்ரியமாம். இதனால் தான் கூட இவருக்கு சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் நிர்வாக இயக்குனர் பொறுப்பு கிடைத்திருக்கலாம். கிரிக்கெட் மட்டும் அல்ல இசை மீதும் இவருக்கு ஆர்வம் அதிகமாம். மேலும் இவர் சன் டிவியின் சன் மியூசிக் சானலில் தலைமை பொறுப்பிலும் உள்ளார்.

கிரிக்கெட் மட்டுமல்ல இசையும்
எம்.பி.எ படித்துள்ள இவருக்கு பயணம் செய்வதில் மிகுந்த ஆர்வம் உண்டு.மேலும் இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பதும் தற்போது வரை எவரையும் காதலிக்கவில்லை என்பதும் கூடுதல் தகவல். இவருடைய தாய் காவேரி மாறன் பன்முகத் திறமை கொண்டவர் என்பதோடு உலகின் மிகப்பெரிய பணக்கார பெண்மணிகளின் வரிசையில் இருப்பவர் என்பது நினைவிருக்கலாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications