கச்சத்தீவு அந்தோணியார் கோவில் திருவிழா- தமிழக பக்தர்கள் பங்கேற்க இலங்கை அரசு தடை!
சென்னை: கொரோனா பரவலை காரணம் காட்டி கச்சத்தீவு அந்தோணியார் கோவில் திருவிழாவில் தமிழக பக்தர்கள் பங்கேற்க இலங்கை அரசு தடை விதித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மன்னார் வளைகுடாவில் உள்ள கச்சத்தீவு தமிழர்களின் பாரம்பரிய மீன்பிடி பகுதியாகும். தமிழகத்துக்குச் சொந்தமான இந்த கச்சத்தீவு மத்திய அரசால் ஒருதலைபட்சமாக இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. இதற்கு தமிழகம் தொடக்கம் முதலே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

தமிழகத்துக்கு சொந்தமான கச்சத்தீவை மீட்க கோரி வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன. இலங்கைக்கு கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டாலும் அந்தோணியார் கோவில் திருவிழாவில் பங்கேற்கவும் தமிழக மீனவர்கள் வலைகளை உலர்த்தி ஓய்வெடுக்கவும் அனுமதி உண்டு. ஆனால் இலங்கை இதுவரை இந்த சரத்துகளை மதித்து நடந்தது இல்லை.
இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தம் நடைபெற்ற காலத்தில் கச்சத்தீவு திருவிழாவுக்கு தமிழக பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது இல்லை. 2009-ம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் தமிழக பக்தர்களுக்கு கச்சத்தீவு அந்தோணியார் திருவிழாவில் பங்கேற்க பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டு வந்தது. கச்சத்தீவு அந்தோணியார் கோவில் திருவிழா என்பது தமிழகம்- ஈழத் தமிழர்கள் இடையேயான கலாசார திருவிழாவாகவும் கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு கச்சத்தீவு அந்தோணியார் கோவில் திருவிழா மார்ச் 11,12 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது. இந்த திருவிழாவில் இலங்கையை சேர்ந்த 500 பேர் மட்டுமே பங்கேற்க அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் கொரோனா பரவலை காரணம் காட்டி தமிழக பக்தர்களுக்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளது. இது தமிழக பக்தர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications