பூரித்துப்போன விஜய்.. இலங்கையில் இருந்து வந்த செய்தி.. நாடாளுமன்றத்தில் ஒலித்த TVK பெயர்!

Subscribe to Oneindia Tamil

தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் சட்டமன்ற தேர்தலில் பதிவு செய்துள்ள வரலாற்று வெற்றிக்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் (ஈழத் தமிழர் கட்சி) நாடாளுமன்றக் குழுத் தலைவர் சாணக்கியன் இராசமாணிக்கம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மே 5 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இலங்கை நாடாளுமன்ற கூட்டத்தில் தவெக கட்சியின் வெற்றியையும், விஜய்யின் 2 தொகுதிகளில் போட்டிப்போட்டு வெற்றி பெற்றதை வாழ்த்தினார். விஜய்-யின் வெற்றி தமிழக அரசியல் மட்டுமின்றி, இலங்கைத் தமிழர் அரசியல் மட்டத்திலும் முக்கிய விஷயமாக மாறியுள்ளது.

TVK Vijay Politics srilanka Vijay Sri Lanka Parliament Congratulation Sannakiyan Rasamanickam TVK Victory Eelam Tamils Sri Lankan Parliament TVK Eelam Tamil Issue Tamil Nadu Thalapathy Vijay TVK victory Sri Lanka Sri Lankan Parliament congratulates Vijay Sannakiyan Rasamanickam Vijay Illankai Tamil Arasu Katchi TVK Eelam Tamil issues India Tamil Nadu Tamil Nadu 2026 election international recognition Vijay historic win Sri Lanka reaction Sri Lankan MP congratulates Vijay joint action Eelam Tamils Tamilaga Vettri Kazhagam Sri Lanka May 5 Sri Lanka Parliament Vijay Eelam Tamil problem Tamil Nadu government Vijay TVK global support Sri Lanka Tamil party praises Vijay Tamil Nadu politics Eelam Tamil support 2026 5

இலங்கை நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய சாணக்கியன் இராசமாணிக்கம், "வரலாற்று சாதனைப் படைத்து வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்க்கு இலங்கையின் உயரிய சபை வாயிலாக வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டார். இந்த வாழ்த்து வெறும் தனிப்பட்ட அங்கீகாரமாக மட்டும் இல்லாமல், இலங்கை பாராளுமன்றத்தின் அதிகாரப்பூர்வ மேடையில் இருந்து வந்தது என்பதால் முக்கியதுவம் வாய்ந்தது.

சாணக்கியன் இராசமாணிக்கம் மேலும் முக்கியமான ஒரு தகவலைப் பகிர்ந்தார். ஈழத் தமிழர் தொடர்பான பிரச்சினைகளில் இந்திய மத்திய அரசும், தமிழக அரசும் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்திற்கு பின்பும் இலங்கைத் தமிழர் விவகாரங்கள் பற்றிய புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. தவெக தலைவர் விஜய்யின் வெற்றி தமிழகத்துக்கு மட்டுமல்லாமல், உலகத் தமிழர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது.

இதோடு இலங்கை தமிழ் பத்திரிகைகளிலும் தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றி முக்கிய செய்தியாக இடம்பெற்றுள்ளது. திராவிட அரசியல் பலம் கொண்ட நிலப்பரப்பில் வெற்றிக்கொடி நாட்டினார் விஜய், வீரகேசரி பத்திரிக்கைில் தமிழக அரசியல் வரலாற்றில் திருப்பம் தவெக அமோத வெற்றி முதலமைச்சராகிறார் விஜய் என்றும், தினகுரல் பத்திரிக்கையில் 60 வருட திராவிட ஆட்சி முடிவுக்கு வந்தது தமிழ்கத்தில் விஜயின் விஸ்வரூப வெற்றி என முதல்பக்கத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

விஜய்-யின் வெற்றி எல்லைகளை தாண்டி தமிழர் அரசியல் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஆகஸ்ட் 2025-ல் கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று விஜய் வலியுறுத்தியது இலங்கை அரசியல் வட்டாரத்தில், குறிப்பாகக் கொழும்பில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கச்சத்தீவு பேச்சால், இலங்கையில் உள்ள அவரது ரசிகர்கள் வருத்தமடைந்தனர், Jaffna-வில் அவரது போஸ்டர்கள் அகற்றப்பட்டன, இலங்கைத் திரையரங்குகளில் அவரது படங்கள் வெளியாவது கேள்விக்குறியானது.

கச்சத்தீவு மீட்கப்படுவதே மீனவர்களின் பாதுக்காப்புக்கான நிரந்தர தீர்வு என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். 1974ஆம் ஆண்டு கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டதற்கு திமுகவே காரணம் என்று அப்போது விஜய் விமர்சித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+