10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, டிகிரி படித்தவர்கள் மத்திய அரசு பணியில் சேர சூப்பர் வாய்ப்பு
சென்னை: மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், அமைப்புகளில் 2049 காலியிடங்கள் உள்ளன. 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு மற்றும் டிகிரி படித்தவர்கள் இந்த பதவிக்கு விண்ப்பிக்கலாம். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள மத்திய அரசு பணிகளில் சேர இந்தவாய்பை பயன்படுத்தலாம்.. விண்ணப்பிக்க மார்ச் 18ம் தேதி கடைசி நாள் ஆகும்.
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான எஸ்எஸ்சி, 2024ம் ஆண்டுக்கான 12ம் கட்ட ஆட்சேர்ப்பில், 2049 காலிபணியிடங்களுக்கான அறிவிப்பினை கடந்த பிப்ரவரி 26 அன்று வெளியிட்டது. 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் , 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் பட்டதாரிகள் பல்வேறு தேர்வு பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள், விண்ணப்பிக்க தேவையான தகுதி அறிந்து கொண்டு, ssc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் மட்டும் மார்ச் 18, 2024 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதத்தை திருத்திக் கொள்ள வாய்ப்பு வழங்கப்படும். மார்ச் 22 அன்று முதல் மார்ச் 24 விண்ணப்பங்களில் தவறுகள் இருந்தால் திருத்திக் கொள்ள முடியும் . SSC தேர்வு தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி மே 6 முதல் 8 வரை இருக்கிறது.
எஸ்எஸ்சி மொத்தம் 2049 காலியிடங்களை அறிவித்துள்ளது, பொதுபிரிவினருக்கு 1028 காலியிடங்கள், ஓபிசிக்கு 456, எஸ்சிக்கு 255, எஸ்டிக்கு 124 மற்றும் EWS க்கு 186 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்த காலியிடங்கள் வெவ்வேறு பதவிகள் மற்றும் படி நிலைகளை பொறுத்து வேறுபடும். குறிப்பிட்ட பதவியின் அடிப்படையில் சம்பளமும் மாறுபடும் அடிப்படை சம்பளம் ரூ. 5200 - ரூ. 34800 என்கிற அளவில் இருக்கும் நீங்கள் தேர்ந்தெடுக்கப்படும் பதவியைப் பொறுத்து சம்பளம் பல ஆயிரங்களில் இருக்கும்.. அதாவது 7வது ஊதிய கமிஷன் அளித்த பரிந்துரைகளின் படி சம்பளம் வழங்கப்படும்.
SSC ஆட்சேர்ப்பு 2024: மொத்தம் 2049 காலி பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு அடிப்படையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். வயது தேர்வு செயல்முறைக்கான விவரங்கள் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு பின்னர் தெரிவிக்கப்படும். வயது வரம்பை பொறுத்தவரை குறைந்தபட்ச 18 வயது முதல் அதிகபட்சம் 42 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். பொது மற்றும் ஓபிசி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ. விண்ணப்பக் கட்டணமாக 100 செலுத்த வேண்டும். எஸ்சி எஸ்டி மற்றும் பெண் விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் தேதி 26.02.24 அன்று தொடங்கியது. மார்ச் 18 வரை விண்ணப்பிக்கலாம்.
இந்த முறை அறிவிக்கப்பட்டுள்ள மத்திய அரசு பணிகளில் தமிழகத்தைச் சேர்ந்த 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு மற்றும் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மக்களிடம் ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசின் பத்திரிகை தகவல் மையம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பும் வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், "மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், அமைப்புகளில் பணி நியமனத்திற்கான தேர்வு குறித்த அறிவிக்கையை பணியாளர் தேர்வாணையம் கடந்த 26-ந் தேதி வெளியிட்டுள்ளது.பதவிகளின் விவரம், வயது வரம்பு, தேவையான கல்வித்தகுதி, கட்டணம், தேர்வு விவரம், எவ்வாறு விண்ணப்பிப்பது என்பன போன்ற விவரங்கள் ஆட்சேர்ப்பு அறிவிப்பில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் இந்த ஆணையத்தின் http://ssc.gov.in என்ற இணைய தளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி வருகிற 18-ந் தேதி ஆகும். மறுநாள் (19-ந் தேதி) இணைய தளம் மூலம் கட்டணம் செலுத்த கடைசி தேதி. தென் மாநிலங்களில் மே மாதம் 6-ந் தேதியில் இருந்து 8-ந் தேதி வரை கணினி அடிப்படையிலான தேர்வுகள் நடைபெறும். தமிழ்நாட்டில் 8 மையங்களில் தேர்வு நடக்கிறது" இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications