மைத்துனர் மகன் திருமணம்! நேரில் சென்று வாழ்த்திய முதலமைச்சர் ஸ்டாலின்! உறவுகள் ஒன்றுகூடல்!
சென்னை: துர்கா ஸ்டாலினின் சகோதரர் டாக்டர் ராஜமூர்த்தி இல்லத் திருமண விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
அப்போலோ மருத்துவமனையில் ரொட்டின் செக் அப் செய்துகொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் மருத்துவர்கள் அறிவுறுத்தல் படி 2 நாட்கள் ஓய்வில் இருந்தார். இந்நிலையில் தனது மைத்துனர் இல்ல மணவிழாவில் உற்சாகமாக கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலினுக்கு சாருமதி, ஜெயந்தி, என இரண்டு சகோதரிகளும் ராஜமூர்த்தி என ஒரு சகோதரர் உள்ளனர். தனது சகோதரர் மீதும் சகோதரிகள் இருவர் மீதும் துர்கா ஸ்டாலின் அளவுக்கடந்த பாசம் வைத்திருப்பவர். இந்நிலையில் சாருமதி அண்மையில் காலமான நிலையில், ஜெயந்தியும், ராஜமூர்த்தியும் தங்களது அக்கா துர்கா ஸ்டாலின் மீது பற்றும் மரியாதையும் கொண்டிருக்கிறார்கள்.
துர்கா ஸ்டாலினின் தம்பி ராஜமூர்த்தியை பொறுத்தவரை இ.எஸ்.ஐ. மருத்துவமனைகளின் இயக்குநராக உள்ளார். மேலும், இவர் பட்டிமன்ற பேச்சாளரும் கூட. சொற்பொழிவு நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்கக்கூடியவர். தனது மாமா ஸ்டாலின் முதலமைச்சராக இருப்பினும், யாரிடமும் அரசியல் பற்றி பேசாதவர்.
இவரது மகன் சாரங்கராஜன் என்ற சஞ்சய்க்கும் கீர்த்தனாவுக்கும் திருமணம் நடைபெற்ற நிலையில் அதற்கான வரவேற்பு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் குடும்பத்துடன் கலந்துகொண்டார். இந்த திருமண விழாவில் முதலமைச்சருடன் அமைச்சர் எ.வ.வேலு மட்டும் சென்றிருந்தார். மற்றபடி வேறு எந்த அமைச்சரையும் பார்க்க முடியவில்லை.
அதே நேரத்தில் கவிஞர் வைரமுத்து உட்பட சொற்பொழிவாளர்கள், இலக்கியவாதிகள், என பலரும் திருமண வரவேற்பு விழாவுக்கு வந்திருந்தனர். அரசியல் பிரமுகர்களை அழைப்பதை ராஜமூர்த்தி தவிர்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications