ஸ்டாலின் பின்னணியில் ஆட்சி அமைக்கிறார் எடப்பாடி பழனிசாமி? தமிழக அரசியலில் இதென்ன புது திருப்பம்
சென்னை: தமிழக அரசியலில் இதுவரை கண்டிராத மிகப்பெரிய திருப்பமாக அதிமுக ஆட்சி அமைக்க திமுக பின்னணியில் இருந்து ஆதரவு தரப்போவதாக மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.. தமிழகத்தின் நலன் கருதியும் தவெக ஆட்சிக்கு வருவதைத் தடுக்கவும் பிரதான இரு கட்சிகளும் இந்த ரகசிய திட்டத்தை முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.. குறிப்பாக திமுகவின் மக்கள் நலத் திட்டங்களை அதிமுக தொடர வேண்டும் என்ற ஒற்றை நிபந்தனையுடன் இந்த அரசியல் நகர்வு மிகவேகமாக நடந்து வருவதாகவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
News Time TN என்ற யூடியூப் சேனலில் பேசியிருக்கும் மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ், "தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைக்கிறது.. அதிமுக வெறும் 40, 45 தொகுதிகள் தான் ஜெயிச்சிருக்கு.. அப்படியிருக்கும்போது அந்த கட்சி எப்படி ஆட்சி அமைக்க முடியும்? 108 தொகுதிகளுடன் விஜய் காத்திருக்கும்போது, எப்படி அதிமுக ஆட்சி அமைக்கும்? அதுதான் இப்போது மிகப்பெரிய விஷயமாக மாறி உள்ளது.

தவெக ஆட்சி அமைப்பது என்பது கிட்டத்தட்ட தமிழகத்துக்கு சூசைடு.. காரணம், எந்தவிதமான தகுதியான கொள்கையோ திட்டமோ புரோகிராமோ இல்லாத ஒரு கட்சி தவெகதான்-. தவெக 113 பேர் பட்டியலை ஆளுநரிடம் தந்தாங்க.. உடனே ஆளுநர், 118 பேர் வேணும், நீங்க ரெண்டு நாள் அவகாசம் எடுத்துக்கோங்க என்றார்.
விசிக, கம்யூனிஸ்ட்கள்
இதையடுத்து தவெக, 2 கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிகவுடன் பேசினாங்க.. காதர் மொயதீனிடம் அருண்ராஜ் நேரடியா பார்த்து பேசினார்.ஆனால் காதர் மொய்தீன் அவர்களுக்கு ஆதரவு தர மறுத்துவிட்டார்.. இதேபோல விசிகவும் எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்தி முடிவு செய்வதாக சொன்னார்கள். ஆனால், எம்எல்ஏக்கள் கூட்டத்தை விசிக நடத்தவில்லை.. பிறகு இந்த தலைவர்கள் அனைவரும் ஸ்டாலினை சென்று பார்த்து பேசியிருக்கிறார்கள்.
"இன்று காங்கிரஸ் வெளியே போயிருக்கக்கூடிய சூழ்நிலையில், நீங்க எதிர்காலத்தில பிஜேபியோட கூட்டணி சேர்வீங்களா" என்று கேட்டுள்ளனர்.. அதற்கு ஸ்டாலின், "என்னை நம்புங்க என்னுடைய வார்த்தைகளை நம்புங்க, நான் என்னைக்குமே பாஜகவுடன் சேர மாட்டேன்" என்று கூறியிருக்கிறார்.
ஸ்டாலின் சொன்ன பதில்
அதற்கு மற்ற கூட்டணி தலைவர்களும், "நாங்களும் தவெகவுக்கு ஆதரவை தர மாட்டோம்" என்று உறுதி பட ஸ்டாலினிடம் சொல்லியிருக்கிறார்கள். பின்னர் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வை பற்றி அனைத்து கட்சி தலைவர்களுமே ஸ்டாலினிடம் விவாதித்துள்ளனர்.
அப்போதுதான் அதிமுகவுக்கு ஆதரவு தருவது என்ற முடிவை திமுக முன்வைத்துள்ளது. "அதிமுக ஆட்சி அமைத்தாலும், நாமும் ஆதரிப்போம்.. ஏனென்றால் இன்னொரு தேர்தலை மக்கள் விரும்பவில்லை, தமிழகமும் தாங்காது..
அதேபோல தவெக ஆட்சிக்கு வந்தாலும் இன்று இருக்கக்கூடிய வளர்ச்சி என்பது தமிழகத்தில் மேலோங்காது, அது பின்னோக்கி போய்விடும்.. அதிமுக ஆட்சி அமைந்தால், அதிமுக கூட்டணி கட்சிகள் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ளலாமே தவிர, நாம் அந்த ஆட்சியில் பங்கெடுக்கக் கூடாது.
இதுதான் திட்டம்
பாஜகவின் திட்டங்களான பிஎம் ஸ்ரீ போன்ற திட்டங்கள் வந்தால் அதை நாம் எதிர்க்க வேண்டும், அதை அதிமுக அரசு ஏற்கக் கூடாது.. அதேபோல திமுக அரசு கொண்டு வந்த மக்கள் நல திட்டங்களான காலை உணவுத் திட்டம் மற்றும் பெண்களுக்கான இலவச பேருந்து போன்ற பல நல்ல திட்டங்களை அதிமுக அப்படியே தொடர வேண்டும், ஒருவேளை அவர்கள் பாஜக திட்டங்களை அதிமுகவில் அமல்படுத்தினால், நாம் அளித்துள்ள வாபஸ் வாங்கிவிடலாம்" என்றெல்லாம் பேசி முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
எடப்பாடி பழனிசாமி ஆட்சி அமைக்கிறார்
அதாவது அதிமுக அரசு அமைவதற்கு திமுக பின்னணியில் நிற்கிறது.. இதில் ஊட்டியில் வெற்றி பெற்ற பாஜக போஜராஜன் எம்எல்ஏ மட்டும் வெளியே நிற்பார்.. அப்படியென்றால் மொத்தம் திமுக, அதிமுக 120 எம்எல்ஏக்கள் கிடைத்துவிடுவார்கள்.. இதுதான் திமுக கூட்டணி திட்டம்.. இந்த திட்டத்தை நோக்கிதான் வந்து இவங்க போயிட்டு இருக்காங்க.. எல்லா வேலையும் வந்து வேகமா நடந்துகிட்டு இருக்கு..
திமுக அரசு கொண்டு வந்த மக்கள் நல திட்டங்களை தொடரணும் அப்படின்றதுதான் ஒரே சிங்கிள் அஜெண்டா.. அந்த அடிப்படையில தமிழகத்துல பெரிய ஆட்சி மாற்றம் ஒன்னு இப்போ திட்டமிட்டு பிளான் பண்ணப்பட்டு, எல்லா மட்டத்திலயும் பேசி முடிவு பண்ணி ஒரு மூவ் வந்து நடந்து சக்சஸ்ஃபுல்லா போயிட்டு இருக்கு.. ஆளுநரை எடப்பாடி பழனிசாமி சந்தித்தவுடன் ஆட்சி அமைப்பதற்கான முயற்சிகள் நடக்கிறது" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications