600/600 சூப்பர் நந்தினி! முதல்வர் ஸ்டாலின் கொடுத்த "கூடை!" திறந்து பார்த்தால்.. "ஸ்வீட் சர்ப்ரைஸ்"
சென்னை: பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி நந்தினிக்கு, சாக்லேட் கூடையை பரிசளித்து முதல்வர் ஸ்டாலின் நேரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டெய்ரி மில்க், ஸ்னிக்கர்ஸ், ஹெர்ஷிஸ், உட்பட இன்னும் வகை வகையான விலை உயர்ந்த சாக்லேட்கள் ஸ்டாலின் கொடுத்த பரிசுக்கூடையில் இடம்பெற்றிருந்தன.

பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்ற திண்டுக்கல் அண்ணாமலையார் மில்ஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி நந்தினி, முதலமைச்சர் ஸ்டாலினை அவரது முகாம் அலுவலகத்தில் இன்று காலை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
பள்ளிக்கல்வித்துறையால் பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு முடிவுகள் நேற்றைய தினம் வெளியிடப்பட்டது. இத்தேர்வில் மாநிலம் முழுவதும் 94.03 சதவிகிதம் மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதில் மாணவிகள் 96.38 சதவிகிதமும், மாணவர்கள் 91.45 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில் திண்டுக்கல், அண்ணாமலையார் மில்ஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு பயின்ற வணிகவியல் மாணவி நந்தினி, அனைத்து பாடங்களிலும் முழு மதிப்பெண்னான 600-க்கு 600 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதல் இடம் பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, உடனடியாக மாணவி நந்தினியை நேற்றைய தினம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசி தனது வாழ்த்தை பகிர்ந்துகொண்டார்.

அதேபோல் திண்டுக்கல்லில் உள்ள தனது இல்லத்துக்கு அழைத்து மாணவி நந்தினிக்கு பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்திருந்தார் அமைச்சர் ஐ.பெரியசாமி.
இதனிடையே இன்று மாணவி நந்தினியுடனான சந்திப்பின் போது, உயர்கல்வி பயில்வதற்கு தேவையான அனைத்து உதவிகளும் அரசின் சார்பில் செய்யப்படும் என்ற உறுதியை முதல்வர் வழங்கினார்.












Click it and Unblock the Notifications