“பாஜக நெருக்கடி தரும்.. சீக்கிரம் ஆரம்பிங்க” - திமுக அரசு இந்த பணியை வேகப்படுத்தியதன் பின்னணி என்ன?
சென்னை : தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக மாநில கல்விக் கொள்கையை வடிவமைப்பதற்கான வழிகாட்டுதல் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
ஓராண்டுக்குள் கல்விக் கொள்கையை உருவாக்கி அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும் என 13 உறுப்பினர்கள் மற்றும் ஒரு தலைவரை கொண்ட மாநில கல்விக் கொள்கையை வடிவமைக்க அமைக்கப்பட்ட குழுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மாநில கல்வி அமைச்சர்கள் மாநாட்டை தமிழக அரசு புறக்கணித்துள்ள நிலையில், மாநாடு நடக்கும் நேரத்திலேயே மாநில கல்விக் கொள்கை வடிவமைப்பு ஏற்பாடுகளை வேகப்படுத்தியுள்ளது திமுக அரசு.

தேசிய கல்விக் கொள்கை
தேசிய கல்விக் கொள்கையை கடந்த 2020-ஆம் ஆண்டில் மத்திய பாஜக அரசு அறிமுகம் செய்தது. இந்த புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு தமிழக அரசு ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. பாஜக ஆட்சியில் இல்லாத பல்வேறு மாநிலங்களும் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. கொரோனா தொற்று அச்சுறுத்தலால் பள்ளிகள் சரிவர செயல்படாத நிலையில் புதிய கல்வி கொள்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில் பாஜக அரசு ஆர்வம் காட்டி வருகிறது.

தொடர்ந்து பேசி வரும் மோடி
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக ஆளுநர் அர்.என்.ரவி உள்ளிட்டோர் சமீபமாக தேசிய கல்வி கொள்கை பற்றி தொடர்ந்து பேசி வருகின்றனர். மாநில கல்வி அமைச்சர்களின் இரண்டு நாள் மாநாடு, குஜராத்தில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் தமிழக அரசு சார்பில் யாருமே கலந்து கொள்ளவில்லை. தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்தவே இந்த மாநாடு நடைபெறுகிறது என்பதற்காக அமைச்சர்கள் இதனை புறக்கணித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

வேகப்படுத்தும் அரசு
தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக தமிழ்நாட்டில் மாநில கல்விக் கொள்கை வடிவமைக்கப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. தமிழக அரசின் மாநில கல்வி கொள்கைக்காக கல்வியாளர்கள், வல்லுநர்கள் கொண்ட மாநில அளவிலான குழுவை அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏப்ரல் மாதம் அறிவிப்பு வெளியிட்டார். மாநில கல்விக் கொள்கையை வடிவமைக்க ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 13 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டது.

14 பேர் கமிட்டி
இதன் உறுப்பினர்களாக சவீதா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எல்.ஜவகர் நேசன், தேசிய கணிதவியல் ஆய்வு நிறுவனத்தின் ஓய்வுபெற்ற பேராசிரியர் ராமானுஜம், மாநில திட்டக் குழு உறுப்பினர்கள் சுல்தான் இஸ்மாயில், ராம சீனுவாசன், யுனிசெப் முன்னாள் கல்வி நிபுணர் அருணா ரத்னம், கல்வியியல் எழுத்தாளர் மாடசாமி, எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், சதுரங்க சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா, கல்வியாளர் துளசிதாஸ், அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் இரா.பாலு, அகரம் அறக்கட்டளை தலைவர் ஜெயஸ்ரீ தாமோதரன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

அரசாணை
இந்நிலையில், மாநில கல்விக் கொள்கைக்கான வழிகாட்டுதல்கள் அடங்கிய அரசாணையை பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் காகர்லா உஷா நேற்று வெளியிட்டுள்ளார். அதன்படி, தமிழகத்தின் வரலாற்று மரபு, தற்போதைய நிலைமை, எதிர்கால தேவைக்கேற்ப மாநிலத்துக்கான தனித்துவமான கல்விக் கொள்கையை தயார் செய்ய கல்வி நிறுவனங்கள், மாணவர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என்று பல்வேறு தரப்பினரிடம் கருத்துகளை பெற வேண்டும் என குழுவினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்புக்கு ஏற்ற
தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தை மனதில் வைத்தும், உலகளாவிய கல்வி, வளரிளம் பருவத்தினருக்கான கல்வி, தொழில்நுட்பங்கள் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டும் கல்விக் கொள்கையை தயாரிக்க வேண்டும். ஆசிரியர், பேராசிரியர் நியமனம் மற்றும் தேர்வு முறைகளில் செய்ய வேண்டிய சீரமைப்புகள், உயர்கல்வி ஆராய்ச்சிகளை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளை வழங்க வேண்டும். சமத்துவக் கல்வி, வேலைவாய்ப்புக்கு ஏற்ற பாடத்திட்டம் இவற்றுடன் பள்ளிப்படிப்பை முடிப்போர் அனைவரும் உயர்கல்வியை தொடரும் வகையில் கல்விக் கொள்கை இருக்க வேண்டும். இவற்றை அடிப்படையாகக் கொண்டு கல்விக் கொள்கையை ஓராண்டுக்குள் தயார் செய்து அரசிடம் சமர்ப்பிக்கவேண்டும்.

வேகம் ஏன்?
தொடர்ந்து தேசிய கல்விக் கொள்கை பற்றி பிரதமர் மோடி முதற்கொண்டு பாஜகவினர் பலரும் பேசி வருவதால் மாநில கல்விக் கொள்கையை விரைந்து தயாரிக்க தமிழக அரசு வேகப்படுத்தியுள்ளது. மாநில கல்வி அமைச்சர்கள் மாநாட்டையும் தமிழக அரசு புறக்கணித்துள்ளதால், அதுகுறித்த சர்ச்சைகள் இனி தொடர்ந்து பாஜகவினரால் எழுப்பப்படலாம் என திமுக அரசு தரப்பு எதிர்பார்க்கிறது.

மாநாடு நடக்கும்போதே
அதனால்தான் குஜராத்தில் மாநில அமைச்சர்கள் மாநாடு நடக்கும் நேரத்திலேயே, ஓராண்டிற்குள் கல்விக் கொள்கையை வடிவமைக்க வேண்டும் என்கிற அரசாணையும் இங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது என அரசு வட்டாரத்தில் பேசப்படுகிறது. தேசிய கல்விக் கொள்கையை நிராகரிப்பதற்கான வலுவான வாதங்கள் இருக்கும் விதத்தில் இந்த மாநில கல்விக் கொள்கையை வடிவமைக்க வேண்டும் என்பதுதான் முதல்வர் ஸ்டாலினின் ஆர்டர் என்கிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications