ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச்
சென்னை: 2021 தேர்தலை திமுக சந்திப்பதற்கு முன்பாக, அதிமுக ஆட்சிக்கு எதிராக வாக்காளர்களை அக்கட்சி எப்படி தயார் செய்தது என்பதைப் பற்றி விரிவாக விவாதிக்கலாம். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அஇஅதிமுக தன் அசுர பலத்தில் பாதியை இழந்தது. 2016 தனித்துப் போட்டியிட்ட ஜெயலலிதா, அதுவரை எந்தக் கட்சியும் எட்டமுடியாத உயரத்தைத் தொட்டார்.
ஜெயலலிதா மறைந்த உடன் அவரது அன்பு பட்டியலில் முதலிடத்திலிருந்த ஓ.பன்னீர்செல்வம் தற்காலிக முதல்வராக நியமிக்கப்பட்டார். மீதமுள்ள ஆட்சிக்காலத்தை அவரே நிறைவு செய்வார் எனப் பலரும் நினைத்துவந்த வேளையில் அதிமுகவுக்குள் நிலவிவந்த அதிகார சண்டை வெளிச்சத்திற்கு வந்தது.
பிப்ரவரி 5, 2017 அன்று திடீரென்று பதவி விலகினார் பன்னீர்செல்வம். அதிமுக ஆட்சி தொடருமா? என்ற பதற்றம் கூடியது. அடுத்து 7 ஆம் தேதி ஜெயலலிதா சமாதி முன் உட்கார்ந்து கண்களை மூடிக்கொண்டு தியானம் செய்தார் பன்னீர் செல்வம். 40 நிமிடங்கள் அவர் உறைந்துபோய் உட்கார்ந்திருந்தார். அதிமுகவிற்கு 'தர்மயுத்தம்' தொடங்கியது.

"தன்னைக் கட்டாயப்படுத்தி ராஜினாமா கடிதத்தைப் பெற்றார்கள்" எனப் புகார் எழுப்பினார் பன்னீர்செல்வம். அதற்கு முன்னதாகவே ஆட்சிப் பொறுப்பை சசிகலா ஏற்க ஏற்பாடுகள் நடத்தாக தகவல்கள் கசிந்தன. அவரும் பன்னீர்செல்வம் மீது கடும் கோபத்தை வெளிப்படுத்தினார். 'ஸ்டாலினைப் பார்த்து பன்னீர் செல்வம் சிரித்தார்' என்பதை அநாகரிக உடல்மொழியில் வெளிப்படுத்தினார் சசிகலா.
பின்னர் அதிமுகவுக்குள் தர்மயுத்தத்தின் எதிரொலியாக நாற்காலி சண்டை நடந்தது. சட்டமன்ற உறுப்பினர்களைக் கூவத்தூர் கொண்டுசென்றது சசிகலா தரப்பு. பன்னீர் இடத்திற்கு எடப்பாடி பழனிசாமியைத் தேர்வு செய்து அறிவித்தார் சசிகலா.
பலம் பெற்ற எடப்பாடி பழனிசாமி
அதற்கு அவர் சிறைச்சாலை வரவேற்றது. அதிமுகவின் முதல்வராக எடப்பாடி பழனிசாமிக்கு 2017 பிப்ரவரி 16 ஆம் தேதி பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். அதிமுக ஆட்சி பழனிசாமி கைக்குச் சென்றது. சசிகலாவின் விசுவாசியான பழனிசாமி, பின் ஓ.பன்னீர்செல்வத்திற்குக் கட்சியின் நிர்வாகத்தை வழங்க முன்வந்தார். அதற்கு மத்திய அரசு சமரசம் செய்து வைத்ததாகப் பேச்சுகள் ஒலித்தன.
பின் பன்னீர்செல்வம் துணையுடன் அதிமுகவிலிருந்து சசிகலாவை வெளியேற்றினார் பழனிசாமி. இதனால், கட்சியின் வலிமை குறைந்தது. ஒரு பக்கம் டிடிவி தினகரன், மற்றொரு பக்கம் சசிகலா எனக் கட்சி சிதறியது. இறுதிக்கட்டமாகப் பன்னீர்செல்வத்தையும் கட்சியிலிருந்து அகற்றினார் பழனிசாமி.
சசிகலா அதை எதிர்த்து நீதிமன்றம் சென்றார். டிடிவி தினகரன் ஜெ மறைவுக்குப் பின் சுயேச்சையாக ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அப்போது வேறு வழியின்றி அதிமுக அவரை ஆதரித்தது. இந்தத் தொகுதி ஜெயலலிதா மூலம் பிரபலமானது. தண்டை பெற வேண்டி சிறை சென்று திரும்பிய ஜெயலலிதா 2015 இடைத்தேர்தலில் இங்கே போட்டியிட்டார்.
யாரும் சென்னையில் ஜெயலலிதா நிற்பார் என யூகிக்கவே இல்லாத தருணத்தில் இங்கே நின்றார். அதில் 1 லட்சத்து 50 ஆயிரத்து 722 வாக்குகளைப் பெற்று வெற்றிக் கனியைப் பறித்தார். மீண்டும் 2016 அதே தொகுதி நின்றார் ஜெ. 97,218 வாக்குகளில் வெற்றி. மூன்று முறை இத்தொகுதி ஜெயலலிதாவின் கோட்டையாக இருந்தது. அவருக்கு முன் அதிமுகவைச் சேர்ந்த வெற்றிவேல் வென்ற தொகுதி.
ஆக, ஜெயலலிதா தொகுதி டிடிவி தினகரன் கைக்குச் சென்றது மட்டுமல்ல, திமுக டெபாசிட் இழந்தது. அதற்குத் தினகரன் அறிமுகம் செய்த '20 ரூபாய்' ஓட்டு அரசியல் என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டினர்.
எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு வேறுவிதமாக செக் வைக்கப்பட்டது. டிடிவி தினகரன் தனியாக அமமுகவைத் தொடங்கே அங்குச் சென்றனர். திரைமறைவில் பழனிசாமி ஆட்சிக்கு நெருக்கடிகள் மிகுந்தன. ஆட்சி அதிகாரத்தைத் தக்கவைக்க 13 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தேவையானது. பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயம். நாடாளுமன்றத் தேர்தலுடன் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதில், 13 இடங்களைப் பிடித்து ஆட்சியைச் சாமர்த்தியமாகத் தக்கவைத்தார் எடப்பாடி பழனிசாமி.
அதிகாரம் அவரிடம் குவிந்ததால் தினகரன், சசிகலா, பன்னீர்செல்வம், புகழேந்தி, கே.பி.முனுசாமி எனப் பலர் அதிமுகவிலிருந்து தூக்கி வீசப்பட்டனர். தென்மாவட்டங்களில் பிரச்சாரம் செய்த சசிகலா, ஒருநாள் ஓபிஎஸ் சகோதரர் ராஜாவைச் சந்தித்தார். கட்சித் தலைமை சசிகலா கைக்குத் திரும்ப வேண்டும் என்றார். அவரையும் நீக்கினார் பழனிசாமி.
திமுக நடத்திய போராட்டங்கள்
ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பின்பே பழனிசாமி மீது ஊடக வெளிச்சம் விழுந்தது. அவர் ஜெயலலிதா காலத்திலிருந்தே கட்சியில் பணியாற்றிய மூத்த சட்டமன்ற உறுப்பினர். 1989இல் 'ஜெ' அணி சார்பில் களம் கண்டவர். 77 மற்றும் 80களில் அதிமுக வசம் இருந்த தொகுதி. இத்தொகுதியில் அதிக முறை போட்டியிட்டவர் பழனிசாமிதான். 2011 முதல் 2021 வரை தொடர்ந்து மூன்று முறை தொகுதியை தன் வசம் வைத்திருப்பவர்.
ஆட்சியை எடப்பாடி பழனிசாமி தக்கவைத்திருந்தாலும் அவரை எதிர்த்து எதிர்க்கட்சியான ஸ்டாலின் பலமாக மோதினார். மத்திய அரசே எடப்பாடி ஆட்சியைக் காப்பாற்றி வருவதாக விமர்சித்தார். ஒரு பக்கம் தனது சொந்தக் கட்சித் தலைவர்களின் ஆதரவை இழந்தார் பழனிசாமி. மற்றொரு பக்கம் திமுக போன்ற நீண்ட அரசியல் அனுபவம் மிக்க எதிர்க்கட்சியின் தாக்குதலுக்கும் ஆளானார்.
எடப்பாடி பழனிசாமி ஆட்சிக் காலத்தில் மூத்த அரசியல் தலைவரான மு.கருணாநிதியின் உடல்நிலை குன்றியது. அவர் இறுதியாக 2018 ஆகஸ்ட் 7 ஆம் தேதி காவேரி மருத்துவமனையில் தன் இறுதியுரையை எழுதினார். அவருக்கு மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமியை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் சந்தித்து கோரிக்கை வைத்தார். ''இடம் மறுக்கப்பட்டுள்ளதாக' தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அரசு தரப்பில் கூறினார். அதை எதிர்த்து நீதிமன்றம் சென்றது திமுக. உரிய இடத்தை வழங்குமாறு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அது எடப்பாடி பழனிசாமியின் அரசியல் வாழ்வுக்குப் பின்னடைவாக மாறியது.
இந்நிலையில்தான் கொரோனா நோய்த் தொற்று உலகை அச்சுறுத்தியது. அன்றாட வாழ்க்கைப் பாதிப்புக்குள்ளானது. ஊரடங்கு உத்தரவு போடவேண்டிய சூழல் 2019 உருவானது. முதல் அலை, இரண்டாவது அலை என கொரோனா கிருமியின் பரிணாமம் பல விளைவுகளை உண்டாக்கின. பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. அரசு மருத்துவத்திற்காக அதிகப்படியான நிதியைச் செலவழிக்க வேண்டி இருந்த நிலையில், மற்றொரு பக்கம் வருவாய் குறைந்தது.
அதிமுக பலவீனமாக உள்ளதை உணர்ந்த திமுகவும் அதன் செயல் தலைவர் ஸ்டாலினும் மோடி அரசுக்கும் எடப்பாடி அரசுக்கும் எதிரான போராட்டங்களைக் கூர்தீட்டின. கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம், சட்டமன்ற புறக்கணிப்பு, ஆளுநர் மாளிகை முன் ஆர்ப்பாட்டம், மதுக்கடைகளை மூடச் சொல்லி ஆர்ப்பாட்டம் என வேகம் காட்டியது.
இடையில் 2019இல் பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தை மாநில அளவில் கொண்டு சென்றது திமுக. 9 பேர் கொண்ட கும்பல் இளம் பெண்களை வேட்டையாடிய காணொளி ஆதாரங்கள் பொதுவெளிக்கு வந்தன. அதனால் ஒரு தாக்கம் ஏற்பட்டது. முன்னதாக ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தென்மாவட்ட மக்களை அதிமுகவுக்கு எதிராக அணிசேர வைத்தது. போராட்டக்காரர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டை 'டிவியில் பார்த்துத் தெரிந்துகொண்டேன்' என முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதை திமுக அவருக்கு எதிரான ஆயுதமாக மாற்றியது.
2020 ஆண்டு ஜூன் மாதம் சாத்தான்குளத்தில் ஒரே குடும்பத்தைச் சார்ந்த தந்தை மற்றும் மகன் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரும் சிறைக் காவலிலிருந்தபோது பலியாகினர். அது ஒரு கொலை என்று திமுக நியாயம் கேட்டது. சட்டம் சீர்குலைந்ததாக திமுக ஒரு பரப்புரையைத் தொடங்க இந்தக் குற்றப் பின்னணிகள் ஆயுதமாகின. எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு எதிராகப் பற்றி எரிந்த சர்ச்சையை திமுக, அணைய விடாமல் அரசியலைத் தீவிரப்படுத்தியது. இந்நிலையில்தான் 2021 ஆக்கான சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆட்சி மாற்றம் உறுதி என திமுக சூளுரை செய்தது.
எழுதியவர்: கடற்கரய்
-
கலைஞரின் மகள் கனிமொழி நெல்லையில் போட்டியா? அடம் பிடிக்கும் ஆதரவாளர்கள்! தலைமை போடும் வேறு கணக்கு! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியம்.. பாஜகவை கண்ட்ரோல் செய்துட்டாரே.. தொகுதி ஒதுக்கீட்டில் ஓங்கிய அதிமுக கை! -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
நாங்கள் எல்லாம் சிவி சண்முகத்தின் அடிமைகளா? பலிகடா ஆகணுமா? பொங்கி எழுந்த ரத்தத்தின் ரத்தங்கள் -
மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும்.. 297 அறிவிப்புகள் அடங்கிய அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட எடப்பாடி -
பாம்புக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் என்ன வித்தியாசம்? நாஞ்சில் சம்பத் ஒற்றை கேள்விக்கு அதிமுக நறுக் -
2026ல் மீண்டும் ஸ்டாலின் முதல்வர்.. 180+ இடங்களை வெல்லும் திமுக கூட்டணி.. ANS சர்வே முடிவுகள்! -
விஜய்க்கு ஷாக்.. தமிழக வெற்றி கழகத்துக்கு செக்! 10 சதவீதத்துக்கும் கீழே ‘தவெக’ - சறுக்கிய வியூகம்?












Click it and Unblock the Notifications