ஒபாமாவுக்கு அடுத்து ஸ்டாலின்தான் "பெஸ்ட்".. ஒரே போடாக போட்ட வைகோ.. அதுக்கு சொன்ன காரணம்தான்.. அடடே!
சென்னை: அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவிற்கு அடுத்து தமிழக எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின்தான் சிறந்தவர் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக இடம்பெற்றுள்ளது. திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் 6 இடங்களில் மதிமுக போட்டியிடுகிறது.
இந்த நிலையில் மதிமுக வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்யும் அதே நேரத்தில் திமுக வேட்பாளர்களை ஆதரித்தும் வைகோ பேசி வருகிறார். ஸ்டாலினை எப்படியாவது முதல்வராக்கிவிட வேண்டும் என்பதில் வைகோ மிகவும் உறுதியாக இருக்கிறார்.

பிரச்சாரம்
இந்த நிலையில் கொளத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் ஸ்டாலினை ஆதரித்து வைகோ நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். இதில் பேசிய வைகோ.. ஸ்டாலின் தன்னை சிறந்த நிர்வாகி என்று பலமுறை நிரூபித்துள்ளார் . சென்னை மேயராக இருந்தே போதே பல பாலங்களை கட்டி தன்னுடைய நிர்வாக திறனை வெளிக்காட்டினார். இவரை போல இந்தியாவில் வேறு எந்த மேயரும் துடிப்பாக செயல்பட்டது இல்லை.

ஸ்டாலின்
அதிமுக அரசை அகற்றுவதே நமது நோக்கமாக இருக்க வேண்டும். தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை நினைத்தால் இப்போதும் என் ரத்தம் கொதிக்கிறது. அந்த மக்களின் கண்ணீரை நான் நேரில் பார்த்தவன். மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வருவதை நாம் எப்போதும் அனுமதிக்கவே கூடாது. அதிமுக ஆட்சியில் நடந்த அவலங்களை மறக்கவே கூடாது.

மறக்க கூடாது
பொள்ளாச்சி கொடூரம், சாத்தான்குளம் இரட்டையர் கொலை என்று எதையும் மக்கள் மறக்க கூடாது. மீண்டும் மக்களின் ஆட்சி அமைய ஸ்டாலினுக்கும் திமுக கூட்டணிக்கும் வாக்களிக்க வேண்டும். ஸ்டாலின் என்னை பொருத்த வரை உலகத்தரமான தலைவர். ஒபாமாவிற்கு அடுத்து இவரை நான் சிறந்த தலைவராக பார்க்கிறேன்.

சிறந்த தலைவர்
ஸ்டாலின் தேர்தல் நேரத்தில் மட்டுமின்றி சாதாரண நேரங்களிலும் மக்களை சென்று சந்திக்கிறார். ஒபாமா மட்டுமே அமெரிக்காவில் இப்படி செய்தார். ஒபாமாவிற்கு அடுத்தது ஸ்டாலின் மட்டுமே மக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டு வருகிறார். மக்களுக்காக சிறை சென்றவர் ஸ்டாலின்.

போராளி
ஸ்டாலின் ஒரு போராளி. மக்களுக்காக உழைத்து , போராட்டம் செய்து சிறைக்கு சென்றவர் ஸ்டாலின். இவர்தான் கொளத்தூர் வேட்பாளர் என்பதில் கொளத்தூர் மக்கள் பெருமை கொள்ள வேண்டும், என்று வைகோ புகழ்ந்து பேசி உள்ளார்.
-
விசிகவுக்கு 'டாட்டா'.. திமுகவுக்கு 'நோ'! தனிக்கட்சி தொடங்குகிறாரா ஆளூர் ஷாநவாஸ்? பின்னணி -
“திமுக - அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க சதி திட்டம் தீட்டியது யார்?” ஸ்டாலினுக்கு செங்கோட்டையன் கேள்வி -
பெப்பே காட்டிய விஜய்.. விஷத்தை கடைந்த ராகுல்.. திமுக, காங்கிரஸ் பந்தம் டோட்டலாக க்ளோஸ் ஆயிருச்சே -
"பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி".. மரியா வில்சனின் வெள்ளை அறிக்கையை விமர்சித்த திமுக -
தண்ணீர் பாட்டில் வீசுனாங்க.. ஆனால் இன்னைக்கு! ஓபிஎஸ் சொன்னதுமே ஸ்டாலின் கொடுத்த ரியாக்ஷன் -
தவெக ஆட்சி முடிவில் தமிழக கடன் ரூ.20 லட்சம் கோடியாக உயரும்.. சவால்விட்டு சொன்ன தங்கம் தென்னரசு! -
'Sofa Model' தவெக ஆட்சியில் எம்எல்ஏ-க்களை கொள்முதல் செய்றாங்க.. உதயநிதி ஸ்டாலின் நேரடி அட்டாக்! -
வெளியே போறோம்..புரட்சி செய்யும் புதுக்கோட்டை மும்மூர்த்திகள்! சி.விஜயபாஸ்கருக்கு சிக்கல்! என்னாச்சு? -
OG திமுக இதுதான்.. ரெண்டு பேருமே பெரிய தலக்கட்டாச்சே! மணி & கோவை தட்டித் தூக்கும் திமுக! பரபர கொங்கு -
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
விஜய் சார் இதை மறந்துடாதீங்க.. திமுக ஐடி விங்க் வெளியிட்ட மீம் வீடியோ..! -
திமுக செய்த சாதனை.. உண்மையை ஒப்புக்கொண்ட TVK.. அப்போ பெண்களுக்கான 'இந்த' திட்டம் வருமா? வரதா?












Click it and Unblock the Notifications