"மும்மொழி கொள்கை வைத்து பிரச்சாரம் செய்யும் தைரியம் இருக்கா.?" பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் சவால்
சென்னை: தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ள சூழலில், இந்தி திணிப்பு தொடர்பான விவாதத்தை திமுக எழுப்பியுள்ளது. மத்திய அரசு மீண்டும் இந்தியைத் திணிக்க முயல்வதாகச் சாடியுள்ள முதல்வர் ஸ்டாலின், தமிழகத்திற்கு வரும்போது தமிழகத்தில் மும்மொழி கொள்கையை அமல்படுத்துவோம் எனச் சொல்லி பிரச்சாரம் செய்யும் தைரியம் பிரதமர் மோடிக்கு இருக்கிறதா எனக் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், எடப்பாடி பழனிசாமி இந்த விவகாரத்தில் மவுனம் காப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 3 வாரங்கள் கூட இல்லாத சூழலில் பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் மாநிலம் முழுக்க பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இதற்கிடையே இப்போது இந்தி திணிப்பு தொடர்பான விவாதத்தை முதல்வர் ஸ்டாலின் தேர்தல் களத்தில் முன்வைத்துள்ளார்..

இந்தி
அதாவது சமீபத்தில் சிபிஎஸ்இ பாடத்தில் 6ம் வகுப்பு முதல் மும்மொழி கொள்கை கட்டாயம் என்பது போல மத்திய அரசு அறிவித்திருந்த சூழலில், அதற்கு முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனத்தைத் தெரிவித்திருந்தார். இதற்கிடையே இதை அவர் தேர்தல் களத்திலும் எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் மத்திய கல்வி அமைச்சரைக் கண்டிக்கும் துணிவு பழனிசாமிக்கு இருக்கிறதா?" எனப் பதிவிட்டுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின்
மேலும், முதல்வர் ஸ்டாலின் இந்தி திணிப்பு தொடர்பாகத் தனது உரையையும் பதிவிட்டுள்ளார். அதில் அவர், "சிபிஎஸ்இ பாடத்தில் 6ம் வகுப்பு முதல் மும்மொழி கொள்கை கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு நான் விரிவான கண்டனத்தை ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். நாம் அமைதியாக இருந்தாலும், மீண்டும் மீண்டும் இந்தியைத் திணிக்க எதாவது செய்து.. தமிழகத்தில் தனக்கு தானே குழி தோண்டிக் கொள்ளும் வேலையை பாஜக செய்கிறது.
எனது கண்டனத்திற்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதில் கொடுத்திருக்கிறார். அதாவது தமிழகத்தில் கல்வித் தரம் வளர விடாமல் நாம் தடுப்பதாகப் பேசியிருக்கிறார். இந்தி திணிப்பிற்கும் கல்வித் தரத்திற்கும் என்ன தொடர்பு? ஏற்கனவே நாம் இந்தியை ஏற்கவில்லை என்பதற்காகத் தமிழகத்திற்கு வர வேண்டிய கல்வி நிதியை வர விடாமல் தடுத்து நிறுத்தியுள்ளவர் தான் இந்த தர்மேந்திர பிரதான்.
சவால்
அது மட்டுமல்ல மும்மொழி கொள்கையை எதிர்த்ததாலேயே தமிழர்களை நாகரீகமில்லாதவர்கள் என நாடாளுமன்றத்திலேயே சொல்லி, அதன் பிறகு மன்னிப்பு கேட்டவர் தான் இந்த தர்மேந்திர பிரதான். அவருக்கும் பிரதமர் மோடிக்கும், அமித் ஷாவுக்கும் நான் வெளிப்படையாகவே ஒரு சேலஞ்ச் வைக்கிறேன். தமிழகத்திற்கு வரும்போது தமிழகத்தில் மும்மொழி கொள்கையை அமல்படுத்துவோம் எனச் சொல்லி பிரச்சாரம் செய்யும் தைரியம் உங்களுக்கு இருக்கிறதா? வாங்க வந்து பேசி பாருங்கள்..
எடப்பாடி மீதும் பாய்ச்சல்
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியிடம் நான் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன். உங்கள் கட்சிக் கொடியில் அண்ணா படத்தை வைத்துள்ளீர்கள்.. இரு மொழி கொள்கை தான் எங்கள் கொள்கை என்கிறீர்கள்.. அப்படி இருக்கும்போது மும்மொழி கொள்கை தொடர்பான தர்மேந்திர பிரதான் அறிக்கையை உங்களால் ஏன் கண்டிக்க முடியவில்லை. ஏன் அதைத் திரும்பப் பெறச் சொல்ல முடியவில்லை. நான் இதை சவாலாகவே உங்களுக்கு விடுகிறேன்" என்று அவர் குறிப்பிட்டார்..
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications