அமைச்சர்களிடம் விசாரித்த ஸ்டாலின்! வெளிநாடு போகும் முன்.. மம்தா, கெஜ்ரிவாலுக்கு போனை போட முடிவு! ஆஹா
சென்னை: இந்தியா கூட்டணி உருவாவதற்கு முக்கியமான காரணமாக இருந்தவர்களில் ஒருவர் முதல்வர் ஸ்டாலின். இந்த நிலையில் தற்போது இந்தியா கூட்டணியில் ஏற்பட்டுள்ள பிளவை சரி செய்யும் முடிவை ஸ்டாலின் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
பல்வேறு கட்சிகள் தேசிய அளவில் ஒன்றிணைந்து உருவாக்கியிருக்கும் இந்தியா கூட்டணியின் 4-வது ஆலோசனைக்கூட்டம் சமீபத்தில் டெல்லியில் நடந்தது. இதில்தான் இந்தியா கூட்டணியின் முதல் மோதல் வெளிப்படையாக நடந்தது. சோனியா காந்தி, ராகுல்காந்தி, மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு, நிதிஷ்குமார், லல்லுபிரசாத் யாதவ், சரத்பவார், மம்தா, அரவிந்த் கெஜ்ரிவால் உள்பட 28 கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டணியில் சமீப காலமாகவே மோதல்கள் வெடிக்க தொடங்கி உள்ளன. ஒவ்வொரு கூட்டத்திலும் அடுத்த கூட்டம் எப்போது நடக்கும் என்று மட்டுமே ஆலோசனைகள் செய்யப்படுகின்றன. மற்றபடி சீட் ஷேரிங், கூட்டணியின் கொள்கை, பிரதமர் வேட்பாளர் என்று எதுவும் அறிவிக்கப்படுவது இல்லை.
மம்தா ஷாக் அறிவிப்பு; இப்படிப்பட்ட நிலையில்தான், தேசிய அரசியலில் என்ன நடந்தாலும், எங்களுக்கு கவலை இல்லை. நாங்கள் லோக்சபா தேர்தலில் தனித்து போட்டியிடுவோம் என்று மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
நாங்கள் மதச்சார்பற்ற கட்சி, மேற்கு வங்க மாநிலத்தில் பாஜகவுக்கு எதிராக தனித்து போட்டியிட்டு, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும். இந்தியா கூட்டணியில் இருந்தாலும் லோக்சபா தேர்தலில் மேற்கு வங்கத்தில் தனித்து போட்டியிடுவோம் என்று மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். இந்தியா கூட்டணியில் இருக்கிறோம் .. ஆனால் தனித்து போட்டியிடுவோம் என்று அவர் கூறியது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதேபோல் பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சியும் லோக்சபா தேர்தலில் தனித்து போட்டியிடும் என்று அறிவித்துள்ளது. காங்கிரஸ் உடன் இருக்க மனமின்றி பஞ்சாப்பில் ஆம் ஆத்மி இந்த முடிவை எடுத்துள்ளது. இந்த தொடர் முடிவுகள் பாஜகவிற்கு சாதகமாக மாறும் வாய்ப்புகள் உள்ளன. இந்தியா கூட்டணியில் அடுத்தடுத்து ஏற்பட்டு வரும் பிளவுகள் லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் பாஜகவிற்கு சாதகமாக திரும்பும் சூழ்நிலைகளை ஏற்படுத்தி உள்ளது.
பிளவு: இந்தியா கூட்டணி உருவாவதற்கு முக்கியமான காரணமாக இருந்தவர்களில் ஒருவர் முதல்வர் ஸ்டாலின். இந்தியா கூட்டணியில் காங்கிரசை ஏற்றுக்கொண்டு மற்ற கட்சிகள் வருவதற்கு காரணமே திமுகதான். திமுக செய்த சமாதானம், அவர்கள் போட்டுக்கொடுத்த ரூட்தான் இந்த கூட்டணி உருவாக முக்கியமான காரணமாக இருந்தது.
இந்த நிலையில் தற்போது இந்தியா கூட்டணியில் ஏற்பட்டுள்ள பிளவை சரி செய்யும் முடிவை ஸ்டாலின் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது ஏற்பட்டுள்ள பிளவை மதுரையில் இருந்தபடிதான் முதல்வர் ஸ்டாலின் அமைச்சர்கள் மூலம் தெரிந்து கொண்டார். பிளவுக்கான காரணத்தை அமைச்சர்களிடம் விசாரித்து ஸ்டாலின் தெரிந்துகொண்டுள்ளார்.
இந்த நிலையில் மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரிடம் ஸ்டாலின் பேச முடிவு செய்துள்ளாராம். கூட்டணியை சரி செய்வதற்கான ஆலோசனைகளை செய்ய முடிவு செய்துள்ளாராம். இருவருக்கும் போன் செய்து ஸ்டாலின் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மார்ச் மாதம் தமிழ்நாட்டில் இந்தியாவின் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்த ஸ்டாலின் ஏற்பாடு செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தைக்கு முன்பாக இவர்களை சமாதானம் செய்ய ஸ்டாலின் முடிவு செய்துள்ளாராம்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications