ரூ.4,000 கோடிக்கு வடிகால் அமைத்ததால் தான் சென்னை வெள்ளத்திலிருந்து தப்பியது! -முதலமைச்சர் ஸ்டாலின்
சென்னை: ரூ.4,000 கோடிக்கு வடிகால் அமைத்ததால் தான் சென்னை வெள்ளத்திலிருந்து தப்பியதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறினார்.
மிக் ஜாம் புயலால் சென்னையில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புகளை தாம் அரசியலாக்க விரும்பவில்லை என்றும் இருப்பினும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி 4,000 கோடி செலவு செய்தும் சென்னை வெள்ளத்தில் மிதப்பதாக கூறி வருகிறார் எனவும் அவருக்கு தாம் சொல்லும் ஒரே பதில், ரூ.4,000 கோடிக்கு வடிகால் அமைத்ததால் தான் சென்னை வெள்ளத்திலிருந்து தப்பியது என்றார்.

4,000 கோடி ரூபாய்க்கு வடிகால் அமைக்காவிட்டால் நிலைமை இன்னும் மோசமாகி இருக்கக் கூடும் என்றும் அதிமுக ஆட்சியில் மழைநீர் வடிகால் எதுவும் அமைக்கப்படவில்லை எனவும் கூறிய முதலமைச்சர் ஸ்டாலின், இது பற்றி மேலும் பேசி அரசியலாக்க விரும்பவில்லை என்றார். அவரைத் தொடர்ந்து விளக்கம் அளித்த நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, வெள்ள நீரை வெளியேற்ற மாநகராட்சி சார்பில் 1,000 மோட்டார் பம்பு செட்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தும் பல இடங்களில் மோட்டார் பம்பு செட்டுகளையே வெள்ளம் மூழ்கடித்தாவாறு சீறி பாய்ந்தால் பம்பு செட் வேலை செய்யவில்லை என்றார்.
இன்னும் இரண்டே நாட்களில் சென்னை முழுவதும் சீரமைப்பு பணிகள் முடிக்கப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி விடும் என்று உறுதியளித்த அமைச்சர் கே.என். நேரு, நெவேலியிலிருந்து ராட்சத மோட்டார்கள் கொண்டு வரப்பட்டு தண்ணீர் முழுமையாக வெளியேற்றப்படும் எனவும் தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து பேசிய தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, சென்னை மற்றும் தாம்பரம் மாநகராட்சிகளில் 2 லட்சத்து 80,000 பால் பாக்கெட்கள் அரசு சார்பில் இன்று காலை விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.













Click it and Unblock the Notifications