கனடா வர முடியவில்லையே என்ற வருத்தம் எனக்கு இருக்கிறது.. மனம் திறந்த முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: அமெரிக்கா மற்றும் கனடா மனிதநேய அமைப்புகள் இணைந்து நடத்திய, மூன்றாவது பன்னாட்டு மனிதநேயச் சமூகநீதி மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார்.
அதில் பேசிய அவர், அரசுப் பணிகளின் காரணமாக தன்னால் வெளிநாட்டுப் பயணத்தை திட்டமிட முடியாத சூழ்நிலை இருப்பதாக வருத்தம் தெரிவித்தார்.
முதல்வர் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு;
5 மைனஸ் 2.. போச்சு இனி அவர்தான்.. கோவையில் ஸ்டாலின் இறக்கிய பார்முலா.. விக்கித்த அதிமுக

உலகெங்கும் பெரியார்
கடந்த செப்டம்பர் 17 - பெரியாரின் பிறந்தநாளை மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மத்திய வளைகுடா நாடுகள், ஐரோப்பிய நாடுகள் - என உலகின் பல நாடுகள் கொண்டாடி இருக்கிறது. இதுபோன்ற மாநாடுகள் தொடர்ச்சியாக நடந்தால் உலகம் முழுவதும்
பெரியார் கொண்டாடப்படுவார் என்பதில் சந்தேகமில்லை.

கனடா நாடு
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தை 'தமிழ் மரபுத் திங்கள்' என்று அறிவித்த ஒரே நாடு, கனடா!அத்தகைய நாட்டில், இந்த மாநாடு நடப்பது மிகமிக பொருத்தமானது!தமிழர்கள் அதிகளவில் வாழும் அயல்நாடுகளில் ஒன்றாககனடா இருக்கிறது தைப்பொங்கல் வாழ்த்துகளைச் சொல்லி
மகிழ்வித்தவர் கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவர்கள். பல்வேறு இன, மத மக்கள் வாழ சிறப்பான நாடாக கனடா உருவாகி வருவதாக
அவர் சொல்லி இருந்தார்.

கனடா பிரதமர்
தமிழுக்கும் தமிழர்க்கும் இத்தகைய பெருமையைச் சேர்த்த கனடா நாட்டின் பிரதமர் அவர்களையும்- இதற்கு காரணமான கனடா நாடாளுமன்ற உறுப்பினர்களையும் - கனடா தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்களையும் நன்றியுடன் நினைவுகூர்கிறேன். எனக்கு இன்னொரு வருத்தமும் இருக்கிறது. கனடாவுக்கு வந்து உங்களை எல்லாம் நேரில் சந்திக்க முடியவில்லை என்பதும் - நேரடியாக பேசமுடியவில்லை என்பதும் -
பல்வேறு அறிஞர் பெருமக்களின் உரைகளைக் கேட்க முடியவில்லை என்பதும்தான் என்னுடைய வருத்தத்துக்கு காரணம்.

கனடா வரமுடியவில்லை
பல்வேறு அரசுப் பணிகளின் காரணமாக - மக்கள் பணியின் காரணமாக என்னால் வெளிநாட்டுப் பயணத்தை திட்டமிட முடியாத சூழ்நிலை இருப்பதை நீங்கள் அனைவரும் உணர்வீர்கள் என நான் நினைக்கிறேன்.தூரங்களால் நாம் பிரிந்திருந்தாலும், தமிழ் உணர்வால் - சுயமரியாதை உணர்வால் - சமத்துவ உணர்வால் - சமூகநீதி உணர்வால் - மனிதநேய உணர்வால் நாம் ஒன்றுபட்டு இருக்கிறோம். எனது திராவிட மாடல் ஆட்சியின் மையக் கொள்கை என்பது மனிதநேயமும் சமூகநீதியும் தான். அனைத்து இடங்களிலும் சமூகநீதியை நிலைநாட்டி வருகிறோம்.