இளைஞர்களை தொழில்முனைவோர்களாக உருவாக்கிட சுயவேலைவாய்ப்பு திட்டங்கள்... ஸ்டாலின் அறிவிப்பு..!
சென்னை: படித்த இளைஞர்களை தொழில்முனைவோர்களாக உருவாக்கிடும் வகையில் சுய வேலைவாய்ப்பு திட்டங்களை விரிவுப்படுத்த வேண்டும் என சிறு-குறு தொழில் துறை அமைச்சகத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
சிறு-குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. அதில் அமைச்சர் தாமோ அன்பரசன் மற்றும் துறையின் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

அதில் பேசிய முதலமைச்சர், படித்த இளைஞர்களை தொழில்முனைவோர்களாக உருவாக்குவதற்காக செயல்படுத்தப்படும் சுயவேலைவாய்ப்பு திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என உறுதிப்படக் கூறியிருக்கிறார். மேலும், சுயவேலைவாய்ப்பு திட்டங்களால் ஆதிதிராவிடர், சிறுபான்மையினர், மகளிர், பழங்குடியினர் ஆகிய பயனாளிகளின் விகிதாச்சாரம் அதிகரிக்க வேண்டும் எனக் கூறியிருக்கிறார்.
இதேபோல் தமிழகத்தில் தொழில்வளர்ச்சியில் பின் தங்கிய பகுதிகளை விரைந்து ஆராய்ந்து அங்கு தொழிற்பேட்டைகளை உருவாக்க வேண்டும் என அந்த ஆய்வுக் கூட்டத்தில் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
சிட்கோவில் நிலுவையில் உள்ள மனை ஒதுக்குதல் உள்ளிட்ட பணிகளை சுணக்கமின்றி முடிக்க வேண்டும் என அதிகாரிகளை முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதனிடையே சிறு-குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு முறைசார்ந்த கடன் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழ்நாட்டை இந்தியாவின் சிறந்த தொழில் புத்தாக்க மாநிலமாக உருவாக்க உழைக்க வேண்டும் எனவும் ஸ்டாலின் அறிவுறுத்தியிருக்கிறார்.
இளைஞர்களை தொழில்முனைவோர்களாக உருவாக்கிட சுயவேலைவாய்ப்பு திட்டங்களை விரிவுப்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தியிருப்பது இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications